தொடர்கள்
பொது
நாம் வாழ்வது வாடகை வீடு !

நாம் இருக்கும் இந்தப் பூமி நமக்கானது மட்டுமல்ல.. மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, ஊர்வன எனப் பல வேறு ஜீவராசிகள் கொண்டது. நாம் தான் அவர்கள் பூமியில் வாழ்ந்து வருகிறோம் என்று சொன்னால் கூட மிகையாகாது. ஏனெனில் அவ்வளவு காலம் பின்னாடி குடியேறியவர்கள் நாம்.. மனிதர்கள்..
.
மனிதர்கள்.. இதன் அர்த்த காரணம் ?
மனிதம்.. ஒவ்வொரு உயிரிடத்திலும் இருக்கும் அன்பு. இயற்கை வேறு எந்தச உயிரினத்திற்கும் கொடுக்காத ஒரு அரிய வகைத் தன்மையை மனிதன் என்னும் உயிரினத்திற்கு அளித்திருக்கிறது. ஆறறிவு.. !?

பொதுவாகப் பண்டிகைகள் கொண்டாடுவது சந்தோசம் நிரப்பிக் கொள்ளத்தான். ஆனால், இன்னொருத்தரையும் அடித்து உலையில் போட்டு அந்தச் சூப்பை தான் குடிப்பேன் என்பது எவ்விதத்தில் நியாயம் ? நான் சொல்வது.. நம்முடன் இருக்கும் இதர உயிரினங்களைச் சொல்கிறேன். இங்கேயுள்புகைப்படங்களை பார்த்தாலே நாம் எந்த அளவிற்கு பண்டிகை எனும் பெயரால் சுற்றுப்புற சூழலை மோசமாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று புரியும்.  ஆதலால் முடிந்தவரை அடுத்த ஆண்டாவது தீபாவளியை கீரீன் தீபாவளியாகவே கொண்டாடுவோம் !

படம் 1 : தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பும், தீபாவளிக்கு அடுத்த நாளும்.. காற்றின் தரம்.. #AQI என்பார்கள்.

படம் 2 : தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு.. ஓரளவு தெளிவான நிலை.. மதிய நேரம்.

படம் 3 : தீபாவளி முடிந்த பிறகு....அதே மதிய நேரம்!

- கவி பாடி

20171105012833599.jpg

20171105012945309.jpg

20171105013016741.jpg

 

 

 

­