வேலைக்காரன் படத்துக்கு பிறகு பேச்சு, நடிப்பு, செயல் எல்லாவற்றிலும் தன்னையே செதுக்கிக் கொள்ளும் சிற்பியாக உருவெடுத்துவிட்டார் சிவகார்த்திகேயன்.
எனக்கு வசதி வாய்ப்புகளை கொட்டிக் கொடுத்தது சினிமாதான். சினிமாவின் வாயிலாக என் ரசிகர்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்யமுடியுமோ அதை செய்வேன்" என்றவர் இனி விளம்பரங்களில் நிச்சயம் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

ஸ்லிம் அனுஷ்... ஃபிட் அஜித்
உடல் எடையை குறைக்க ஓயாம பயிற்சி எடுத்தும் நோ யூஸ் என்று இருந்த அனுஷ்கா... கேரளாவில் சிகிச்சை எடுத்து சிக்குனு ஆயிட்டாங்களாம். அப்புறம் என்ன, பட வாய்ப்பு குவியுதாம் அனுஷுக்கு... விசுவாசம் படத்துக்காக அஜித்துடன் ஜோடி சேர இருக்கிறார் அனுஷ்கா.
இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பிலிருந்து மாறி, சூப்பர் ஸ்டைலில்... அசத்த இருக்கிறார் அஜித்.

தமிழ் என் மூச்சு
சூர்யா நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவரும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாம். டப்பிங் படமே கொள்ளை கொள்ளையாய் லாபத்தைக் கொட்ட, தெலுங்கு தேச தயாரிப்பாளர்கள் சூர்யாவை முற்றுகையிட்டு நேரடி படத்துக்காக தேவுடு காக்கிறார்கள். ஆனால், எந்த பதிலும் சொல்லாமல், மறுத்து வருகிறார். இப்போது சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தையும் மொழி மாற்றம் செய்து வருகிறார்களாம். படத்துக்கு பெயரும் வைத்தாயிற்று. 'கேங்'.

ஜெட் வேகத்தில் உயர்ந்த ரேட்
பிக்பாஸுக்கு பிறகு ஓவியா ஒரு இடத்துல நிக்காம ரெக்கைக் கட்டி பறந்திட்டிருக்காங்க. காரணம், கை நிறைய படம். பை நிறைய பணம். அட ஆமாங்க, சில லட்சங்களை மட்டுமே சம்பளமா வாங்கிட்டிருந்தவங்களுக்கு, இப்ப பல லட்சமா சம்பளம் ஜெட் வேகத்துல உயர்ந்திடுச்சாம். விரைவில் கோடிகளை தொட்டாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை.
சும்மாவா... ரசிகர்களுக்கு உம்..மா... கொடுத்தே.. உசுப்பேத்தின ஓவியாவாச்சே!


Leave a comment
Upload