தொடர்கள்
பொது
உலக முகவடி (எமோஜி) நாள் :-) - வேங்கடகிருஷ்ணன்

2020061714252850.jpg

ஜூலை 17 - உலக எமோஜி (முகவடி) நாள், எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும் நாள், என் தம்பியின் பிறந்த நாள், நான் ஒரு பெரிய கார்ப்ரேட் நிறுவனத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட நாள், அது நடந்து 15 ஆண்டுகள் ஆகியும் நினைவில் இருக்கிறது.

அது போல முகங்களைஉணர்வுகளோடு நினைவில் வைத்துக்கொள்ள விரும்பிய ஜப்பானியர்கள், ஈமெயில் அனுப்பும்போது நிருத்தற் குறியீடுகளைக் கொண்டு மனித முகத்தின் பல்வேறு பாவங்களை உருவாக்கி அனுப்பத் துவங்கினர். உதாரணமாக :-) , சிரிப்பு , :-( சோகம் ;-( அழுகை என்று ஆரம்பத்தில் அனுப்பத் துவங்கி இருந்தனர். இது மிக சுலபமாக உணர்வுகளை அடுத்தவர்களுக்கு கடத்த உதவியதால், இது விரைவாக பிரபலமாகத் துவங்கியது, பிறகு இது வியாபார நிமித்தமாக அனுப்பப்பட்ட மெயில்களில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது.

ஜப்பானிய ஓவியர் ஷிகேட்டாக குரிட்டா என்பவர் தான் 1999 ம் வருடம் முதல் எமோஜியை உருவாக்கினார். முதலில் இருந்தவை 176 எமோஜிக்கள்.உலக எமோஜி தினம் 2014 ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

மொபைல்களில் குறுஞ்செய்தி அனுப்பும்போது, 240 வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டியிருந்ததால், பலரும் இவற்றை அனுப்ப ஆரம்பித்தார்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றால் “HBD :-)” இறப்பு செய்தி என்றால் “RIP :-(” இப்படி வார்த்தைகளை சுருக்க, உணர்வுகளை வெளிப்படுத்த உதவியதால், எமோஜிக்கள் மிக பரவலாக உபயோகப்படுத்தப்பட்டன. பின்னர் வாட்சப் செயலி வந்தது, கூடவே நிறைய அழகழகான எமோஜிக்கள் இலவச இணைப்பாக கிடைத்தது... விளைவு, பேச்சு குறைந்தது, மெஸேஜ் அனுப்புவது அதிகரித்தது... அதுவும் குறைந்து.. இப்போதெல்லாம் பதில்கள் வெறும் எமோஜி வடிவில்தான். உங்கள் உணர்வினை அழகாக, சுலபமாக, தெளிவாக தெரிவிக்க இதனை விட சரியான வழி எதுவும் இல்லை - தற்போதைக்கு.

20200617142630158.jpg

ஒரு சமீபத்திய ஆய்வு முடிவு ஜூலை 10 அன்று வெளிவந்தது. ‘அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட எமோஜியாக ஆனந்த கண்ணீர் தெளிக்கும் கண்களோடு சிரிக்கும் எமோஜி தான் முக நூல் மற்றும் ட்விட்டர் தளத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் எமோஜி’ என்று அது தெரிவித்திருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் “இதய” எமோஜியே இன்று வரை முதலிடத்தில் இருக்கிறது...20200617142901557.jpg

20200617142709529.jpg

நம்மாளு ஒருத்தர்கிட்ட இந்தச் செய்தியை சொன்னேன், 20200617142749382.jpg
“இப்போ உலகம் இருக்கிற நிலைமையில் வாட்சப்பிலயாவது சிரிச்சிட்டு போட்டுமே ” என்றார்.... அதுவும் சரி தான்....

நீங்க அதிகம் யூஸ் பண்ண எமோஜி எது? ....என்ன கேக்குறீங்களா.... எங்க வீட்டம்மா20200617142826280.jpg .......பை......சி யு!!