தொடர்கள்
உணவு
குக் வித் தேவி ... - ராம்

குலாப் ஜாமூன்

2020081023350499.jpg

சாப்பாட்டை ஸ்வீட்டோடு முடிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் ராஜாவாக பிறப்பார்களாம்.

எனக்கு டயாபடீஸ் என்பதால் அனேகமாக ஏதேனும் அரண்மனையில் சேவகனாக பிறக்கத்தான் பிராப்தம்.

சாப்பாட்டுக்கு முன்னாடியும் சரி பின்னாடியும் சரி ஸ்வீட் ஆகாது.

ஆனால் இந்திய வீடுகளில் இனிப்பு வகைகள் இல்லாமல் ஒரு மொத்த சாப்பாடு முடிவடையாது.

டெசெர்ட் என்று சொல்லப்படும் ஸ்வீட் இல்லாத பஃபே உணவும் இல்லை.

இப்படித்தான் என் வெள்ளைக்கார நண்பனுடன் விமானத்தில் பறக்கும் போது, காதே பசிஃபிக்கில் ஆளுக்கு இரண்டு குலாப் ஜாமூன் கொடுத்தார்கள்.

என் நண்பன் என்னை உற்றுப் பார்த்து விட்டு இது என்ன எண்ணெயில் மிதக்கிறது என்றான். இது இனிப்பு என்றதும் அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணை அழைத்து அவன் அடித்த நகைச்சுவை வலைக்கள்ளனில் எழுதும் ரகம்.

குலாப் ஜாமூனை ஐஸ்கிரீமோடு சாப்பிடுவது ஒரு கூட்டத்திற்கு பிடிக்கும். ஆனால் அதையே சுட சுட சாப்பிடுவது வேறு சிலருக்கு ப்ரீதி.

எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் போல, டயாபடீஸ் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் ஸ்வீட்டு சாப்பிடக் கூடியவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

இங்கே குலாப் ஜாமூன்……..

அடுத்த முறை தேவியிடம் சொல்லி சுகர் ஃப்ரீ குலாப் ஜாமூன் பண்ண முடியுமா என்று கேட்க வேண்டும்.