கிறிஸ்தவ குரு ஆதங்கம்...
ஒரே பாலின திருமணம் அங்கீகரிக்கப்படுவதை எதிர்த்து, மனிதகுலத்துக்கு கடவுள் அளித்த தண்டனைதான் கொரோனா என உக்ரைன் நாட்டு கிறிஸ்தவ மதகுரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் ஆர்த்தோடாக்ஸ் தேவாலய தலைமை குருவாக இருப்பவர் ஃபிலாரெட் (91). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மக்களிடையே பேசினார். அப்போது அவர், ‘உலகளவில் ஒரே பாலினத்தவர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படுவதால், அதற்கு கடவுள் எதிர்ப்பு தெரிவித்து அளிக்கும் தண்டனைதான் கொரோனா வைரஸ் தொற்று பரவல்’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இவரது கருத்து பல்வேறு சமூகவலைதளப் பக்கங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதகுரு ஃபிலாரெட்டுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கொரோனா வைரஸ் தொற்று தகவல் கடந்த 4-ம் தேதி வெளியானது.
இதைத் தொடர்ந்து, ‘ஃபிலாரெட்டின் நலனுக்காக, அவர் மேல் அன்பு வைத்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என சம்பந்தப்பட்ட தேவாலயம் அறிவித்தது. மேலும், அவருக்காக மக்கள் பிரார்த்தனையை தொடருமாறும், அதன்மூலம் அவரை எல்லாம் வல்ல இறைவன் விரைவில் குணப்படுத்துவார் எனவும் தேவாலயம் சார்பில் கூறப்பட்டிருக்கிறது.
Leave a comment
Upload