தொடர்கள்
கவிதை
பாரதி - கே.ராஜலட்சுமி

20200811195319325.jpeg

மலரில் புகுந்த

வண்டென என் உயிர்

புகுந்த கவிக்கோ!


பரிதியின் வெம்மை

பாரிஜாதத்தின் மென்மை

வீணை தரும் நாதம்

கொண்டிருக்கும் உன் கீதம்.


செய்யுள் எனும் சொல்

மாற்றி புதுக்கவிதைக்கு

வித்திட்ட வித்தகரே!


புகழுக்கும் ஆயுளுக்கும்

சம்பந்தம் இல்லை என்று

காட்டிய நீ இன்னொரு

விவேகானந்தர்.


காலனை பாட்டில் காலால்

உதைத்தாய் ஏட்டில்

வெள்ளையரை எழுச்சிமிகு

எழுத்தால் எட்டி உதைத்தாய்

நாட்டை விட்டு!


ஆரூடம் போல் விடுதலை

கவிதைகள் ஆன்மீகக்

கதைகளும் காதலும் உண்டு அதில்.


பள்ளியும் கல்வியும்

ஆலையும் சாலையும்

சாதிக் களைப்பும் கலப்பும்

கனவும் உண்டு உன் பாவில்.


எண்ணற்ற பாக்களுக்கு

முன்னோடி நீ என்னையும்

எழுத வைத்த உனக்கு

இந்நினைவு நாளில்

என் கவிதைகள் சமர்ப்பணம்.