தொடர்கள்
நெட் ஜோக்ஸ்
வலைக்கள்ளன்

2020922211946837.jpg

ஆராவமுதன் வீட்டு காபி...

ஆராவமுதன் அவ்ளோ வசதியானவர் இல்லை. மாதக் கடைசியில் பாயப் பிராண்டும் நடுத்தரவர்க்கத்தினர் தான்.

ஆனால் பாருங்கள் திடீரென மாதக் கடைசியில் நண்பர்கள் மூன்று பேர் அவர் வீட்டுக்கு வந்து விட்டனர்.

வந்தவர்கள் சும்மா இல்லாமல். ஆராவமுதன் வீட்டு காபி தான் பெஸ்ட் என்று வேறு கேட்க மனைவியைத் திரும்பி பார்த்தார் ஆராவமுதன்.

இதோ போட்டு தரேங்க என்றவள் உள்ளே போய்ப் பார்த்தாள், வீட்டில் சர்க்கரை இல்லை. எப்படி காபி போடுவது.

ஆராவமுதன் உள்ளே வந்தார். “என்னடீ பண்றது ?” என்னை கேவலமா பேசுவானுங்களே வெளிய போய் ?

மனைவி சொன்னாள் அதை நான் பாத்துக்கறேன் நீங்க போங்க.

வெளியே வந்தவள் சொன்னாள்.

“இவருக்கும் சேர்த்து இங்க நாலு டம்ளர் காபி இருக்கு. எங்க வீட்டுக்காரருக்கு நாளைக்கு பர்த் டே. பெரிசா ஒரு ஹோட்டல்ல ட்ரீட் கொடுக்கணும். யாரு கொடுக்கப் போறாங்கறதுல ஒரு போட்டி.

ஒரே ஒரு காபில தான் சர்க்கரை போடாம இருக்கு. அது யாருக்கு வருதோ அவங்க தான் மொத்த டிரீட்டையும் கொடுக்கணும்.

ஓகே இது தான் இன்னிக்கு கேம்”

ஆராவமுதன் நண்பர்கள் எல்லோருமே சொன்னது “என்னம்மா இது காபில இவ்ளோ சர்க்கரை போட்டிருக்க. இவ்ளோ ஸ்வீட் உடம்புக்கு. ஆகாதுப்பா..”


எச்சரிக்கை..!

202092221215682.png

ஆண்களே உஷார்....

கடந்த மாதம் என் நண்பன் ஏமாற்றப்பட்டான். நூதனத் திருட்டு உஷார். பாண்டிபஜார் அருகே பயங்கரம்.

இந்த நிலை உங்களுக்கும் ஏற்படலாம். இந்த நூதன திருட்டு எப்படி நடைபெறுகிறது...? விளக்கம் இங்கே.

இரண்டு மிக அழகான பெண்கள் நீங்கள் காரை எடுக்கும் போது வருவார்கள். அதில் இருவரும் சுற்றி முற்றியும் எதையோ காணாமல் போனது போலவே தேடி வருவார்கள். அப்படி வரும் பெண்கள் தங்களை ஏகத்திற்கும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். கச்சைகள் எவ்வளவு கம்மியாக இருக்குமோ அவ்வளவு கம்மியாக இருக்கும். கால் முக்கால்வாசி வெள்ளை வெளேரென வாழைத்தண்டு போல வெளியே தெரியும் படி ஸ்கர்ட் அணிந்திருப்பார்கள். லிப்ஸ்டிக் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சில்க் சிமிதாவின் போதையேற்றும் கண்கள் உங்களை அப்படியே சொக்க வைக்கும். என்ன தேடுகிறார்கள் என்றால் கார் சாவி காணோம் என்று தேடுவார்கள். நீங்கள் உடனே நானும் உதவி செய்கிறேன் என்று சொன்னால் தேவையில்லை எங்களை கிண்டியில் இறக்கி விடுங்கள் என்பார்கள்.

நீங்கள் உடனே சரியென்று அவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டால் போச்சு. ஒருத்தி உங்கள் பக்கத்தில் உரசியபடி இருக்க இன்னொருவள் உங்களை பின்னாலிருந்து அணைக்க, கிண்டி போவதற்கு உங்களுக்கு சா.முகூர்த்தம் தான்.

இத்தனைக்கும் வண்டிக்குள் கூச்ச நாச்சமில்லாமல் ஆடை படத்தில் வருவது போல களைவதும் நடக்கும். இன்னமும் நடப்பதெல்லாம் இங்கு எழுத முடியாத அளவு சமாச்சாரம். இவ்வளவும் நடக்கும் போது தான் உங்களையறியாமல் உங்கள் மணி பர்ஸ் திருடப்படும்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் என் நண்பன் சதீஷ். கடந்த செப்டம்பர் மாதம், 4ந்தேதி, 9ந்தேதி, 11ந்தேதி, அப்புறம் இரண்டு முறை 17ந்தேதி 19ந்தேதி, 21ந்தேதி. பிறகு 24ந்தேதி, 28ந்தேதி இப்படி பர்ஸை பறி கொடுத்தான். ஆங் இந்த மாதம் 8ந்தேதி, அப்புறம் 10ந்தேதி, நேற்று கூட இதே போல பர்ஸை பறி கொடுத்தான், அதே இடத்தில். இதே போல.

சதீஷின் அறிவுரை இரண்டு. ஒன்று அனைத்து ஆண்களையும் உஷாராக இருங்கள் என்பது. இரண்டாவது “விலை சல்லிசான மணி பர்ஸுகள் ரிலையன்ஸ் ஃபுட் பிரிண்ட்ஸில் தள்ளுபடி விற்பனையில் இருக்கிறது. ஸ்டாக் தீருவதற்குள் முந்தவும்!!!


தாராவைப் பாருங்கள்!

2020922212336272.png