மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்
Comment : அன்னிக்கி சைதாப்பேட்டை மீட்டிங்ல பண்ருட்டி தயவுல அடிவாங்காம தப்பிச்சது நீதானப்பா... 'ஒண்ணுமே தெரியாத அப்பாவிய அடிக்க போயிட்டமேனு எங்க நைனா ரொம்ப நாளா புலம்பிட்டிருந்தார். ஸாரிபா!
காண்டீபன், சகுந்தலா, சைதாப்பேட்டை
வாவ் வாட்ஸப்!
சென்ற வார வாட்ஸ் அப் படங்களில் செம த்ரில்... அதிலும் பாசத்தின் உச்சம், நடிகன்டா படங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.
கௌஷிக், ரோகித், சாய்கிருஷ்ணா, சென்னை
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்
ஏம்ப்பா... நம்ம வீட்டுல உளவுத்துறை யாருனு சின்னப் புள்ளைங்களுக்கு கூட தெரியுமே... இதுல ராஜேஷ்கண்ணா படத்தை போட்டு, அவர் வாயால 'என் மனைவிதான் உளவுத்துறை'னு சொல்ல வெச்சு... அவர் முதுகுல 'டின்' கட்ட வெச்சிட்டாரே தில்லை!
சுகன்யா பாலகிருஷ்ணன், அம்பத்தூர்
வாசகர் விஷூவல்ஸ்
அடடே... மனதை மயக்கும் புகைப்படங்கள்!
ஸ்வேதா, மர்லின், திருவள்ளூர்
தங்க மீன்களால் ஆபத்து... - மாலாஶ்ரீ
அழகா இருந்தாலே ஆபத்துதான் போலிருக்கு. மீன்தொட்டிகளில் குட்டி குட்டியா, கலர்புல் மீன்களுடன் கோல்டு பிஷ் துரத்தி செல்லும்போதே யோசிக்க வைத்தது. அது வெளியே வந்தா, எல்லாத்தையும் காலி பண்ணிடுதே!
தீட்சிதா, ரோஸ்லின், சாந்தோம்
“செய்தது சரிதானே?” - வெ. சுப்பிரமணியன்
ரெங்கனும் மாரியும் செய்தது சரிதான்! அருமையான கதை. பெற்றால்தான் அப்பனா என்ற கருத்தை சவுக்கால் விளாசி தந்திருக்கிறார் சுப்பிரமணியன். ஹேட்ஸ் ஆப்!
ரங்கப்ரியதாசன், நாமக்கல்
ஒளஷதலாயம்... – பா.அய்யாசாமி
பா.அய்யாசாமியின் ஔஷதலாயம் சிறுகதை மிக அருமை. ஒருசில நேரங்களில் ஏற்படும் உணர்ச்சி வேகத்தில் செய்யும் தவறுகளை துல்லியமாக ஆராய்ந்து, தண்டனையை நீதிபதி குறைத்தது மிகச் சிறப்பு!
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
விண்கல வேந்தர்.....! - சி. கோவேந்த ராஜா.
ஆஹா... அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு, 'விண்கல வேந்தர்' என்ற தலைப்பில் மிக அழகான வரிகளில் கோவேந்தராஜா வர்ணித்திருக்கிறார். சபாஷ்!
தீட்சிதா, அனுஷ்கா, அட்சயா, பெங்களூர்
"வரதட்சணைக்கு எதிராக கேரளா கவர்னர் உண்ணாவிரதம் !" - ஸ்வேதா அப்புதாஸ்
கேரளாவில் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இதை தடுக்க வலியுறுத்தி அம்மாநில கவர்னர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தது கேரள இளம்பெண்களின் வரப்பிரசாதம். இக்கொடுமையை தடுக்க பெண்களின் பெற்றோர்தான் தடுக்க முன்வர வேண்டும். உண்மையை எடுத்துரைத்த விகடகவிக்கு நன்றி.
கலாபவன் மோகினி, கோட்டயம், கேரளா
சசிகலா தடாலடி... அதிர்ச்சியில் எடப்பாடி... - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்
சசிகலா என்ற பெண் சிங்கம் பிடரியை சிலுப்பிக் கொண்டு அதிமுக கோட்டையை கைப்பற்ற களமிறங்கிடுச்சு. இப்ப இருக்கிற அதிமுக தலைவர்களெல்லாம், அப்ப அந்த சிங்கத்துக்கு சாமரம் வீசி, கால்ல விழுந்து தூபம் போட்டவங்கதானே... இப்ப மட்டும் அவங்களுக்கு குத்துது, குடையுதா?! வினையை விதைச்சா, அதை சம்பந்தப்பட்டவங்கதானே அறுக்கணும்!
சந்தானலட்சுமி பாக்யநாதன், திருவாரூர்
இவ்விடம் மொத்தமாகவும், சில்லறையாகவும் உளவு பார்க்கப்படும்... - தொழில் நுட்பம் பாதி, அரசியல் மீதி.... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
பெகாசஸ் உளவு விவகாரத்தில் நடைபெற்ற அரசியல் உள்விவகாரங்களையும் அரசு நடவடிக்கைகளையும் ஜாசன் புட்டு புட்டு வைத்திருக்கிறார். உதாரணத்துக்கு திருவள்ளுவர் உள்பட அனைவரையும் வம்புக்கு இழுத்திருக்கிறீர்!
ரேணுகா ஹரிஹரன், பண்ருட்டி
சிட்டுக்குருவிகளின் படையெடுப்பு... - மாலாஸ்ரீ
கொடைக்கானல் மலைக்கு பலவண்ண சிட்டுக்குருவிகள் படையெடுப்பா..?! அடடா... சென்னை, மும்பை, டெல்லிலதான் பார்க்க முடியலை... கொடைக்கானலுக்கு போய் பார்க்கலானா... ஊரடங்காமே!
லாவண்யா கார்த்திக், மும்பை
கணவரின் ‘விந்து’ வேண்டும்! - உயர்நீதிமன்றம் அனுமதி... - மாலாஸ்ரீ
குஜராத்தில் திருமணமாகிய ஓராண்டில் தனது கணவரின் மீதான அபரித அன்பால், அவரது விந்தணுவை பெற்றுத் தரும்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பெண்ணின் உணர்ச்சி வெளிப்பாடு நெகிழ வைத்தது.
மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 26 - கலைமாமணி பாரதி திருமகன்
கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் நினைவலைகளில், சென்ற வாரம் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வருகை மிகப் பிரமாதம்! அதிலும் வேலால் முருகன் 'செக்' எழுதுவதும், வள்ளி 'ம்' சொல்வதற்கு யோசிப்பதாக கூறியது நல்ல கற்பனை! தொடருங்கள்.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
இவ்விடம் மொத்தமாகவும், சில்லறையாகவும் உளவு பார்க்கப்படும்... - தொழில் நுட்பம் பாதி, அரசியல் மீதி.... - ராம்
The author tries to justify this spying activity because it happened many years. It is ridiculous to say that, throw all your devices and get pigeons..... make serious things light? Does Vikatakavi endorse the spying???
குருசாமி மனிவண்ணன்
ஒலிம்பிக்கில் முதல் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு! – ஆர் .ராஜேஷ் கன்னா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை முதல் வெள்ளி பதக்கம் வாங்கிய செய்தியை, இணையதளப் பத்திரிகைகளில் ‘விகடகவி’ No.1 இடத்தை பிடித்துள்ளது. அதற்காக ராஜேஷ்கண்ணா மற்றும் விகடகவி குழுவினருக்கு 'இச்..இச்' முத்தங்கள்!
வெங்கட்ராமன், ராதாகிருஷ்ணன், ஆலப்பாக்கம்
இவ்விடம் மொத்தமாகவும், சில்லறையாகவும் உளவு பார்க்கப்படும்... - தொழில் நுட்பம் பாதி, அரசியல் மீதி.... - ராம்
நம்ம இந்தியாவில் பெகாசஸ் உளவு பிரச்னை, கொள்ளிக் கட்டையை எடுத்து, நம்ம தலையில சொறிஞ்சுக்கிட்ட கதையால்ல இருக்கு! பேசாம... ராம் சொன்ன மாதிரி, 2 ஜோடி மாடப்புறா வளர்த்து செய்தி அனுப்ப வேண்டியதுதான். ஆனா, 23-ம் புலிகேசி மாதிரியான ஆட்கள்... அந்த புறாக்களை பொறிச்சு தின்னுட்டா..? எல்லாத்துக்கும் 'ஆப்பு' வைக்கிறாங்கப்பு!
வித்யா ராமன், திருப்போரூர்
வலையங்கம்
பெகாசஸ் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது. இதனால் பல கோடி ரூபாய் வீணாக செலவானது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளைவிட பெகாசஸ்தான் முக்கியமா? ‘இதுபோன்ற சுயநலமிக்க எம்பிக்களை ஏன்தான் தேர்ந்தெடுத்தோமோ?’ என இந்திய மக்கள் சுவரில் முட்டிக்கொண்டு சாகவேண்டியதுதான் பாக்கி!
அன்னபூரணி வாசுதேவன், திருத்துறைப்பூண்டி
எமதினிய தமிழ்ச் சொற்களை இழக்காமல், மீட்டெடுப்போம்... - 7 - - இரா.சு.இராசன்
தாமதம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் குடி முழுகிப்போய்விடாது. தமிழ் பாழ்படாது. பழகு தமிழ் அழகு.
எஸ். கிருஷ்ணமூர்த்தி
Leave a comment
Upload