தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 50 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20210629115915532.jpeg

ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது... அவரோடு பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரை பற்றியும், பல இடங்களை பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்....

நியூஜெர்ஸி, அமெரிக்கா

மகா பெரியவாவுக்கு பிரசித்தமாக இருக்கும் பல இடங்களை பார்த்துவரும் நாம், ஒரு வித்தியாசத்திற்கு அயலநாட்டிற்கு செல்வோம்... ஆம்... அமெரிக்காவில், நம் ‘கலவை’யில் இருப்பது போல் ஒரு மணிமண்டபம் ஸ்ரீ மகா பெரியவாளுக்கு உருவாகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கி, அதற்க்கான இடம் சுமார் 10 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டு ஆச்சார்யர்களால ஆசிர்வதிக்கப்பட்டது.

20210629115947808.jpeg

நியூஜெர்சி மாநிலத்தில் Flemington என்னும் இடத்தில் உருவாகி வருகிறது. அதற்காக பல அபிமானிகள், கலைஞர்கள் பல விதத்தில் நிதி சேமித்து தருகிறார்கள்.

20210629120119868.jpeg
நம்ம ஊர்களில், கோயில்களில், மடங்களில் ஸ்ரீ மஹாபெரியவளுக்கு நடக்கும் அத்தனை ஆராதனைகளும், உற்சவங்களும், கொண்டாட்டங்களும் நம் ஊர்களை போலவே அங்கேயும் நடப்பது மகிமை.
20210629120343158.jpeg
20210629120415189.jpeg
உலகமெங்கும் வியாபித்து இருக்கும் ஸ்ரீ மகா பெரியவா, தன் பக்தர்களின் குறை தீர்க்க சனாதன தர்மத்தை கடல் கடந்தும் நிலைநாட்ட... இதோ முதன் முதலில் அமெரிக்காவில் தொடங்கியிருக்கிறது மணிமண்டபம். இது மேலும் பல நாடுகளுக்கு தொடரும் என்று நம்புவோம். அமெரிக்காவில் இருப்பவர்கள் கண்டிப்பாக தங்களை இந்தக் குழுவோடு இணைத்துக் கொள்ளலாம்.