
அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் போர் 10 நாட்களில் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டு பாடு ஏற்பட்டு விட்டது. பல ஓட்டல்கள் கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லைஎன்று கதவை இழத்து முடிக்கொண்டது.
பல டீகடைகள் சிலிண்டர் இல்லாததால் வியாபாரத்தை நிறுத்தி கொண்டது.
இன்னும் பல கல்லூரி ஹஸ்டல்களில் இயங்கும் மெஸ்கள் சிலிண்டர் இல்லாததால் சமையல் கூடங்கள் இழத்து முடப்பட்டது.
அடுத்து வீட்டு சமையலறையில் தங்கு தடையின்றி சமையல் செய்ய கியாஸ் சிலிண்டர் முக்கிய பங்கு ஆற்றி வந்தது. தற்போது இந்திய இல்லத்தரசிகளுக்கு சமையல் சிலிண்டர் தட்டுபாடு ஏற்பாடும் சூழ்நிலை உருவாகி விட்டது.
கிட்டதட்ட ஈரான் நமக்கு நட்பு நாடாக இருந்தது, நமது வெளியுறவு கொள்கை தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஈரான் நமக்கு கச்சா எண்ணெய் சம்மந்தப்பட்ட பொருட்கள் நமக்கு கிடைக்கவில்லை.

இந்திய அரசு சார்பில் தங்கு தடையின்றி சிலிண்டர் கிடைக்கும் என்று சொன்னாலும் சிலிண்டர் தட்டுபாடு அனைத்து மாநிலங்களிலும் நீடித்து வருகிறது.
சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இருக்கும் பல கல்லூரி ஹஸ்டல்களில் சமையல் சிலிண்டர் தட்டுபாட்டல் இழத்து முடப்பட்டுள்ளது.
சமையல் சிலிண்டர் தட்டுபாடு இன்னும் ஒரு வாரத்தில் தீர்க்கபடாவிட்டால் பழைய காலத்து சமையல் முறையான விறகு அடுப்புக்கு தான் மாற வேண்டும். இதில் அனுபவ அறிவுள்ள நம் வீட்டு பாட்டிமார்களிடம் நமது பெண்மணிகள் விறகு அடுப்பில் சமையல் செய்வது என கற்றுகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு விரைவில் சிலிண்டர் தட்டுபாட்டை சமாளித்து தடையின்றி கிடைக்க வேறு வழிகளில் முயற்சி செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இன்னும் பத்து நாட்களில் போர் முடிவுக்கு வரவில்லை என்றால் இந்திய பெண்கள் சமையலறையில் எப்படி சமாளிப்போம் என்ற ஆதங்க குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி விட்டது.


Leave a comment
Upload