தொடர்கள்
விகடகவியார்
அமைச்சர் ஜெய்சங்கரின் அரசியல் வியூகம்

2026021407254295.jpeg

அமெரிக்க இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல் காரணமாக போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியில் பயணிக்க ஈரான் அனுமதி அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு சமாளிக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.

போர் காரணமாக ஈரான் கடற்பகுதியை ஒட்டியுள்ள ஹர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது .சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹர்முஸ் ஜலசந்தி நடப்பதால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசியதால், தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைத்து இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு போன்றவற்றை எடுத்துச் சொல்லி இந்திய கப்பல்களுக்கு வழி விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

20260214072617742.jpeg

இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் ஜெய்சங்கர் எடுத்துச் சொல்ல இதற்காக மூன்று முறை ஈரான் அமைச்சரிடம் பல மணி நேரம் பேசியிருக்கிறார் ஜெய்சங்கர். அதன் பிறகு ஈரான் இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜல சந்தியில் பயணிக்க அனுமதி தந்தது.

இது முழுக்க முழுக்க ஜெய்சங்கரின் அரசியல் அணுகு முறைக்கான வெற்றி. இதேபோல் எரிவாயு நெருக்கடியையும் சமாளிக்க அமைச்சர் ஜெய்சங்கர் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

20260214072840400.jpg