
திருச்சி சிறுகனூரில் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் ..என்று திமுக தனது 12 வது மாநாடு பத்துலட்சம் தொண்டர்கள் வருவார்கள் என்று பிரமாண்ட மேடை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டது.

3 லட்சம் பேர் சாப்பிட 1300 கிலோ ஆட்டு கறி பிரியாணியும் , 800 கிலோ சிக்கன் கிரேவியும் சமைத்து ப்ளாஸ்டிக் டப்பாக்களில் பரிமாறபட்டது.
மாநாடு திடலில் காலை முதலே பிரியாணி மசாலா வாடை தொண்டர்களின் மூக்கை துளைத்தது.தாராளமாக 40 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்தனர். மாநாட்டு திடலில் ஆங்காங்கே ஒரு குடிநீர் தொட்டி, மூலிகை குடிநீர், மோர், தர்பூசணி என தடபுடலாக தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

700 ஏக்கரில் மாநாட்டினை அமைச்சர் நேரு ஏற்பாடு செய்திருந்தார்.

விஜய் கூட்டத்தில் இருக்கும் ரேம்ப் வாக் மாதிரி அமைக்கப்பட்டு அதில் ஸ்டாலின் நடந்து வர தொண்டர்கள் உற்சாகமாக கருப்பு சிகப்பு துண்டுகளை ஸ்டாலின் மீது வீசி மகிழ்ந்தனர்.
தி.மு.க-என்.டி.ஏ கூட்டணிக்கும் தான் போட்டி., தமிழ்நாட்டு, டெல்லி அணிக்கும் இடையில்தான் போட்டி. பா.ஜ.க எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் காவி அடிக்கலாம். தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது. தமிழ்நாடு உங்களுக்கு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். மீண்டும் வெல்வோம் என்று ஸ்டாலின் பேசி முடித்தார்.

அடுத்து ,திருச்சிக்கு பிரதமர் மோடி என். டி .ஏ கூட்டத்தில் பேச வந்தார். மோடிக்கு ரோட் ஷோ வழக்கம் போல் திருச்சி மாநகர மக்கள் வரேவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.
விழா மேடைக்கு வந்த மோடி பேச ஆரம்ப்பித்தவர்..” திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரே குடும்பத்துடனேயே முடிந்து போய்விடுகிறது.விஞ்ஞான ரீதியிலான ஊழல் மாதிரிக்கு பெயர் போனது திமுக..

இந்த மாடல் ஒரே ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம் ஆக மாற்றியுள்ளது.இதே மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணத்தை பெற்று பெரும் மோசடியில் சிக்கியுள்ளார்.

இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என்றால் தமிழ்நாட்டின் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேருகிறது. அது குடும்ப சொத்தாய் மாறுகிறது,. வளமான தமிழகத்தினை தனது கூட்டணி உருவாக்கும் என்று பேசினார்.

நடிகர் விஜய் கரூர் சமபவத்தில் விசாரணையை தொடர டெல்லிக்கு அழைத்தும் வேறு தேதி வாய்தா வாங்கி கொண்டார். இதனால் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தள்ளிப்போடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள முக்கிய பா.ஜ.க பிரமுகர் எப்படியாவது விஜய் தங்களது கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் பல்வேறு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தனக்கு இரண்டரை வருட முதல்வர் பதவி தருகிறீர்களா என்ற கோரிக்கையோடு நடிகர் அடம்பிடிப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் கசிகிறது.
தேர்தல் தேதி இன்னும் ஒரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவித்து விடும் அதற்குள் எப்படியாவது கடைசி நிமிடத்தில் பேரம் படிந்து நடிகர் தங்களது கூட்டணியில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கையோடு டெல்லி பா. ஜ. க தலைமை காய் நகர்த்தி வருகிறது.

அமெரிக்க ஈரான் போர் தமிழக தேர்தல் திருவிழா கோலாகலத்தினை இடைஞ்சல் செய்து வேகம் குறைந்து காணப்படுகிறது.
எப்படியாவது விட்டமின் 'ப' தங்களுக்கு வராதா என்ற ஏக்கத்துடன் திருவாளர் வாக்களர்கள் காத்திருக்கின்றனர்.
தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குடித்து விட்டு திரும்ப தரும் காலி பாட்டில் ரு10 தரப்படாது என்ற எழதப்படாத அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இப்போதைக்கு தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனைப்போட்டி தான்.

இதற்கிடையே கவர்னர் பிரியா விடைபெற்று மேற்கு வங்கம் சென்றார்.

வரும் வாரம் முதல் மீண்டும் தேர்தல் திருவிழா களைகட்டும் என்பது தான் தற்போதைய டாக்.

Leave a comment
Upload