தொடர்கள்
அரசியல்
ஆபத்தில் பெண்கள் !! தலைகுனிய வைக்கும் தமிழகம் !! -விகடகவியார்

20260214073253845.jpeg

வியாழக்கிழமை மாலை நாளேடில் வந்த தலைப்புச் செய்திகள் இவை :

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூரம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கற்பழித்து துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற ஆசாமிகள், முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

16 வயசு சிறுமியை கற்பழித்த இரண்டு ரவுடிகள் சிக்கியது எப்படி? தலைமறைவாக இருந்தவனும் கைது புதிய தகவல்கள்.

சென்னைஓட்டேரியில் பரபரப்பு 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை, அக்காவின் காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு !!

திருச்சி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், தலைமை ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது !!

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு இதைவிட சாம்பிள் தேவையில்லை

ஆனால் நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த உள்துறை செயலாளர், டி ஜி பி இருவரும் தமிழகத்தில் குற்றச்சம்பங்கள் மிகைப்படுத்தப்படுகிறது.

ஐந்தாண்டுகளில் பெரும் அளவு குறைந்துள்ளதாக சொல்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் இன்னொரு விளக்கம் பாதிக்கப்பட்டவர்கள் தானாக முன்வந்து புகார் அளிக்கின்றனர்.

இதனால் புகார்கள் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது என்கிறார்கள்.

மோடிக்கு பதில் சொல்வதாக பேட்டி தரும் முதல்வரும், துணை முதல்வரும் பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்கள் பற்றி பேட்டி தரவில்லை. அதிகாரிகளை வைத்து சமாளிக்கிறார்கள்.

தூத்துக்குடி சம்பவத்திற்கு வருவோம். தூத்துக்குடி சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லச் சென்ற கனிமொழியை வழியிலே தடுத்து நிறுத்துகிறார்கள்.

போலீஸ் உதவியுடன் சம்பந்தப்பட்ட குடும்பத்தை சந்தித்து கவலைப்படாதீர்கள் குற்றவாளிக்கு கடும் தண்டனை என்று முதல்வர் உறுதி சொல்லி இருக்கிறார் என்று ஆறுதல் சொல்கிறார் கனிமொழி.

தூத்துக்குடி மாவட்டத்தில் 17-வது சிறுமி மார்ச் 10-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து காட்டுப்பகுதிக்கு சென்றார்.

வீடு திரும்பவில்லை.

மாணவி மாயமானது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போது போலீசார் அலட்சியம் காட்டி உள்ளனர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததோடு பெண்ணின் பெற்றோர்களையும் மோசமாக பேசியிருக்கிறார்கள்.

இரண்டு நாள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

புகார் அளித்த உடனே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவி காப்பாற்றப்பட்டு இருக்கலாம்.

போலீசாரின் தாமதம் காரணமாக மாணவியின் உயிர் பறிபோனது. உள்ளூர் போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு நஷ்ட ஈடாக 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்

. அப்போது நீதிபதிகள் தென் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறுகின்ற இது போன்ற குற்ற நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அப்போது போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வில்லை என்று மனுதாரர் சார்பில் தெரிவித்த போது போலீசார் இது போன்ற புகார்களை மெத்தனமாக கையாள்வது வருத்தம் அளிக்கிறது என்று கூறி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

மதுராந்தகம் அருகே திங்கட்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் சிறுமி மற்றும் அவரது நண்பர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வந்த சிலரால் வாகனத்தை ஓட்டிய சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி சிறுவனும் சிறுமியும் கீழே விழுந்துள்ளனர். பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர்களை தாக்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

தற்சமயம் காக்கா பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் தாமு என்கின்ற தாமோதரப் பெருமாள் என்ற நபரை காவல்துறை கைது செய்து இருப்பதாக காவல்துறை செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லை என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை.

காவல்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் இது பற்றி கருத்து தெரிவிக்காமல் அதிகாரிகளை வைத்து சமாளிப்பது தான் திராவிட மாடல்.