
மேற்கு வங்கம் சந்தால் பழங்குடியினர் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார் .அவர் பங்கேற்கிறார் என்று பல நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் கடைசி நேரத்தில் மாநில அரசு அனுமதி மறுத்ததால் நிகழ்ச்சிக்கான இடம் மாற்றப்பட்டது.
இதனால் நிகழ்ச்சியில் கூட்டம் சேரவில்லை. புதிய இடத்துக்கு செல்லும் வழிகள் எல்லாம் குப்பை கூளங்களால் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஜனாதிபதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழிவறையில் தண்ணீர் கூட இல்லை. இது ஒரு புறம் இருக்க ஒரு மாநிலத்துக்கு ஜனாதிபதி வந்தால் மாநில அரசு சார்பில் முதல்வர் அல்லது அமைச்சர், தலைமைச் செயலாளர், மாநில டிஜிபி, மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்பது மரபு. ஆனால் மேற்கு வங்கத்தில் அப்படி யாரும் வந்து ஜனாதிபதியை வரவேற்கவில்லை .
இது பற்றி தனது ஆதங்கத்தை வெளியிட்ட ஜனாதிபதி மம்தா பானர்ஜி தனது சகோதரி என்று குறிப்பிட்டு அவர் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை என்று அப்பாவியாக கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால் சகோதரி மம்தாவோ ஜனாதிபதி வரும் விஷயமே எங்களுக்கு தெரியாது என்று கூசாமல் பொய் சொல்லி இருக்கிறார்.
மம்தா பானர்ஜிக்கு அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்பு இருக்கலாம் .பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி பழங்குடியினர் மாநாட்டில் கலந்து கொள்ள வரும்போது இப்படி அவமானம் செய்வது முதலமைச்சர் பதவிக்கான தலைகுனிவாகத்தான் பார்க்கப்படுகிறது. அதிகாரிகளும் நாட்டின் முதல் குடிமகனுக்கு உரிய மரியாதை தராமல் ஆளுங்கட்சியின் ஏவல் ஆட்களாக இருந்தது அதைவிட கேவலம்.
மமதையின் மறுபெயர் மம்தா என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.

Leave a comment
Upload