

தமிழக வெற்றி கழகம் கூட்டணி ஆட்சி என்று அறிவித்தும் எந்தக் கட்சியும் அவர்களுடன் கூட்டணிக்கு வரவில்லை.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதற்குள் உஷாரான திமுக சென்ற சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக மூன்று தொகுதிகள் தவிர ராஜ்யசபா என்று சொல்லி காங்கிரஸ் கட்சியை விஜய் பக்கம் போக விடாமல் தடுத்து விட்டது.
விஜய்யுடன் கூட்டணி என்றால் காங்கிரஸ் கட்சி உடையும் அளவுக்கு நிலைமை மோசமானதால் டெல்லி தலைமை வேறு வழி இன்றி திமுக கூட்டணிக்கு சம்மதித்தது.
விஜய் 70 இடங்கள் துணை முதல்வர் பதவி என்றெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ஆசை காட்டினார்.
காங்கிரஸின் 70 புதியவர்களுக்கு வாய்ப்பு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் பங்கு என்றெல்லாம் இந்த திட்டத்திற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்தார்.
ப சிதம்பரம் போன்ற தலைவர்கள் விரும்பவில்லை.
விஜய் ஒரு செல்வாக்குள்ள தலைவர் என்று நாம் எப்படி நம்ப முடியும்.
அவர் எம்ஜிஆர் அல்ல.
இன்னும் அவரது ரசிகர்கள் கட்சித் தொண்டர்களாக பக்குவப்படவில்லை.
விஜய்யுடன் கூட்டணி என்பது திமுகவின் ஓட்டை பிரிக்க பயன்படுமே தவிர வெற்றியை நமக்கு தராது என்பதை சோனியாவிடம் தெளிவுபட சொன்னார் ப சிதம்பரம்.
அதன் பிறகு தான் ராகுல் காந்தி ஒப்புதல் இன்றி திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
விஜய் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு அவர் யாருடைய தொடர்பு எல்லையிலும் இல்லை.
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை கூட ஆதவ் அர்ஜுனா தான் நடத்தினார்.
ஓபிஎஸ் முதலில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய விரும்பினார்.
அவரை காத்திருப்பு பட்டியலில் வையுங்கள் என்று சொல்லிவிட்டார் விஜய்.
பண்ருட்டி ராமச்சந்திரன் தனி கட்சி தொடங்கி விஜய்க்கு ஆதரவு என்று அறிவித்த பிறகு கூட விஜய் பண்ருட்டியை சந்திக்க விரும்பவில்லை
. யாரோ எழுதிக் கொடுத்ததை ஆவேசமாக படித்துவிட்டு ஆட்சியில் அமரலாம் என்ற கனவிலேயே இன்றும் மிதக்கிறார் விஜய்.
அவரது ரசிகர்கள் இன்னும் மோசம்.
ஒரு பெண் விஜய் ரசிகை எங்கள் குடும்பத்தில் ஒன்பது பேர் அவர்கள் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் அவர்களை கொலை செய்து விடுவேன் என்று பேட்டி கொடுக்கிறார்.
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து என்று அறிவித்ததும் இன்னொரு விஜய் ரசிகை சங்கீதா போனால் என்ன நாங்கள் எல்லாம் விஜய்க்கு பொண்டாட்டியாக தயாராக இருக்கிறோம் என்கிறார்.
இது போன்ற எல்லை மீறல்களை இதுவரை விஜய் கண்டிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் இதையெல்லாம் விரும்புகிறாரோ விஜய் என்ற சந்தேகம் இருக்கிறது.
நிலைமை இப்படி இருக்க விஜய் தன்னை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பெருமைப்படுகிறார்.
எம்ஜிஆர் பற்றிய ஒரு விஷயத்தை அவர் மறந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர் ஏற்கனவே திமுக என்ற ஒரு கட்சியில் பல காலம் இருந்து அரசியல் அனுபவம் பெற்று அதன்பிறகு தனி கட்சி தொடங்கினார்.
விஜய் அப்படி அல்ல. அதனால் தான் நீதிமன்றம் கூட உங்கள் கட்சியிலிருந்து இன்னும் ஒரு கவுன்சிலர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை அதற்குள் என்ன அவசரம் என்று ஒரு வழக்கில் கடிந்து கொண்டது.
பாரதிய ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு அழுத்தம் தருகிறது .
பவன் கல்யாண் தான் விஜயிடம் பேசி வருகிறார். விஜய் இரண்டு யோசனைகளை சொல்லி இருக்கிறார். முதல் யோசனை திமுகவை எதிர்த்து தேர்தலை சந்திக்கிறேன்.
எப்படியும் கொஞ்சம் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் தேர்தலுக்கு பிறகு நாம் கூட்டணி வைத்து கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்பது.
இன்னொரு யோசனை எடப்பாடி இரண்டரை வருடம் முதல்வர்.
நான் இரண்டரை வருடம் முதல்வர் என்பது.
விஜய் சம்பந்தப்பட்ட எந்த யோசனையையும் எடப்பாடி ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
பாரதிய ஜனதா தேவை இல்லாமல் இப்போது குழப்பம் செய்கிறது என்று கடிந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி .
தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காணொளி மூலம் மாவட்டச் செயலாளர்களிடம் கூட்டணி பற்றி கருத்து கேட்டபோது நம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் கணிசமான இடங்களை நாம் வெற்றி பெறலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
கூட்டணி முடிவெடுக்கும் இடத்தில் இப்போதைக்கு விஜய் இல்லை. எடப்பாடி தான் அதை தீர்மானம் செய்ய வேண்டும்.
வந்த வாய்ப்புகளை எல்லாம் வண்டு முருகன் போல் தவற விட்டுவிட்டு இப்போது குழம்பித் தவிக்கிறார் விஜய் .

Leave a comment
Upload