
விஜய் இன்னொரு எம்ஜிஆரா?
எம்.ஜி.ஆர் உச்சாணிக் கொம்பில் ஏறியது வீதிகளில் உறங்கியெழுந்த உழைப்பில்.
படிப்படியாக தெருக்கூத்து, நாடகம் என ஓடி ஆடி உயர்ந்தவர். பொன்மனச் செம்மல் என்று தனது பணத்தால் கூட்டம் போட்டு கொடுத்துக்கொண்ட பட்டம் இல்லை. ஆன்மீக பெரியோர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் மனமுருக அளித்த பட்டமது.
நடித்த படங்களில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தத்துவங்களை எடுத்துக் கூறும் வசனங்கள், மசாலா என்பதற்காக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை என்றுமே அவர் ஆதரித்ததில்லை. நடிப்பிலும் சரி நிஜ வாழ்விலும் சரி. எண்ணியதை சொன்னவர்.

திமுகவின் அட்டைப் படமே எம்ஜிஆர் என்பது எழுதப் படாத ஆனால், உலகறிந்த விஷயம் தான் அவரை வைத்துதான் அந்த கட்சியே வளர்ந்தது.
விஜய் நிலை என்ன ???
பெற்றோர் ஏற்கெனவே திறைத்துறையில் கால் பதித்தவர்கள். தாங்கள் காட்டிய நபர்க்கு திறைத்துறையில் உடனே எண்ட்ரி. முகவரி இருந்தது.

அரசு தந்த கலைமாமணி பட்டம், கோலிவிட்டில் புனைபெயருக்கு முன்னே ஒரு பட்டப் பேயர் வைத்துக்கொள்வது இயல்பாகிப் போன மரபால் இளைய தளபதி என்ற பட்டமும்.
தற்போது அரசியலில் வந்துவிட்டதால் ஏற்கெனவே அரசியல் தளபதி ஸ்டாலினுக்கும் திரைத்துறை தளபதி விஜயிற்கும் பட்டத்திலேயே குழப்பம் தான்.
திரையுலக மோகம் பீடித்துள்ள தமிழகத்தில் அரசியல் என்பது நடிகர்களுக்கு ரிடைர்மென்ட் பெனெஃபிட் மாதிரியே ஆகிவிட்டது. அனைவரும் எம்ஜிஆராகமுடியுமா?
ஆன்மீக அரசியல் தருகிறேன் என்றவர் ஏனோ முதல் காட்சிக்கே நடிக்க வரவில்லை. ரிமோட்டினால் டீவீயை உடைத்தவர் இப்போது எதற்காக கட்சி ஆரம்பித்தோம் என்ற கொள்கைக்கே வேட்டு வைத்து விட்டு மய்யத்தை விட்டு ஒதுங்கிவிட்டார்.
மக்களை தன் படத்துக்கு டிக்கட் வாங்குபவர்களாக மட்டுமே பார்த்தவருக்கு ஓட்டு போட வைக்கலாம் என்று நினைத்தது என்ன தைரியமோ தெரியவில்லை?
நிஜ வாழ்க்கையில், வாங்கிய காருக்கு வரி கட்டாமல், நடப்பு நாட்டு விஷயங்களில் கருத்து இல்லாமல் இருப்பது எத்தனை நாள் தாங்குமோ ??
வீட்டுத் தகறாரு வீதி வரை வந்தபின் இளைய தலைமுறைக்கு என்ன எடுத்துக் காட்டாய் இருக்கப்போகிறார் என்ற கேள்வி பலமாய்க் கேட்கிறது.
இது ஒருவரின் அந்தரங்க விஷயம் என்று கடந்து செல்ல இயலாதது.
ஏனெனில், பொது வாழ்வில் இருப்பவர் பொது ஜனத்தின் கருத்துக்களுக்கு உட்பட்டே ஆகவேண்டும்.
வரும் தேர்தல் கட்சியின் பெயரில் இருக்கும் வெற்றி அரசியல்வாதி விஜயின் வாழ்க்கையிலும் வெற்றியா? என்று சொல்லும்.

Leave a comment
Upload