
தி ஹன்ட்ரட் லீக் தொடரில் காவ்யா மாறன் முதலீடு செய்திருக்கும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக பாகிஸ்தான் அணியின் அப்ரார் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் நமது வீரர்கள் கைகுலுக்காமல் விலகியது, IPL ஆட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறாதது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இங்கிலாந்தில் நடந்து வரும் தி ஹன்ட்ரட் லீக் தொடரில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அம்பானி, எல்எஸ்ஜி அணியின் உரிமையாளர் சஞ்சீவ் , சன்ரைசஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உட்பட அனைவரும் பல்வேறு அணியின் பங்குகளை வாங்கினர். நார்த்தென் சூப்பர்சார்ஜர்ஸ் என்னும் அணியில் முதலீடு செய்த சன்டிவி குழுமத்தினர் அந்த அணியின் பெயரை சன்ரைசர்ஸ் லீட்ஸ் என்று பெயரிட்டனர். தனது அணிக்காக, பாகிஸ்தான் அணியின் லெக்-ஸ்பின்னர் அப்ரார் அகமதுவை காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி £190,000 (இந்திய மதிப்பில் சுமார் 2.1 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியுள்ளது.

Leave a comment
Upload