தொடர்கள்
விளையாட்டு
வெற்றி வெற்றி வெற்றி - லண்டனிலிருந்து கோமதி

20260213152718531.jpeg

டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பையை, இந்தியா மூன்றாவது முறையாக இலகுவாகத் தட்டித் தூக்கியுள்ளது.

சூரியகுமார் யாதவ் உலகக்கோப்பை வென்ற அணித்தலைவர்கள் பட்டியலில் கபில்தேவ், தோனி, ஹர்மன் ப்ரீத் கவுர் மற்றும் ரோஹித் சர்மாவுடன் இணைகிறார்.

20260213191118102.jpeg

கடந்த ஞாயிறன்று அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண மைதானம் நிரம்பி இருந்தது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்யாமல், பௌலிங்கை தேர்ந்தெடுத்தது சரியான தீர்வா என்ற வினாவை எழுப்பியதோடு, இந்தியாவின் வெற்றிக்கு அந்த முடிவு வழி வகுத்தது என்றும் கூறலாம்.

20260213191152162.jpeg

இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வது இலக்கு நிர்ணயிப்பது, அந்த விளையாட்டின் அழுத்தத்தை குறைத்து, அணியின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.

முதலில் பாட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தலா 89 மற்றும் 52 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.

அதிக ரன்கள் எடுத்த துவக்க வீரர்கள், என்னும் உலக சாதனையை படைத்தனர்.ஒரு கட்டத்தில் இந்தியா 300 ரன்கள் அடித்துவிடுமோ என்று எண்ணிய பொழுது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

சிவம் தூபே எப்பொழுதும் போன்று அருமையாக விளையாடி 8 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார்.

2026021319124630.jpeg

இந்தியா, நியூஸிலாந்து அணி வெற்றி பெற 256 ரன்கள் தேவை என்னும் இலக்கை நிர்ணயித்தது. ஆட்டம் இந்த கட்டத்தை அடைந்த பொழுதே இந்தியாவின் வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது.

அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணியில் துவக்க வீரரான ஸைபர்ட் மற்றும் அணித் தலைவர் சான்ட்னர் மட்டுமே நன்கு விளையாடினர்.

இந்தியாவின் பந்து வீச்சாளர்களின் திறமையால், 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூஸிலாந்து அணி 159 ரங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றதோடு, கோப்பையையும் வென்றுள்ளனர்.

20260213191309424.jpeg

இதன் மூலம் இந்திய அணி டி -20கிரிக்கெட் போட்டியில் வலிமை மிகுந்த அணியாக உருவெடுத்துள்ளது. பும்ரா இந்தப் போட்டியிலும் நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார் . இவரது திறனைக் கண்டு வியக்காமல் இருக்க இயலவில்லை.

இந்தத் தொடரின் நாயகனாக, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20260213191337991.jpeg

இந்த வெற்றியைத் தொடர்ந்து பல கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள நமது வீரர்கள், அடுத்து நிகழவிருக்கும் IPL போட்டிக்கு தங்களை தயார்படுத்த துவங்கியுள்ளனர்.

20260213191436935.jpeg

இந்த வெற்றி அதற்கொரு ஊக்க மருந்து. ஜமாயுங்கள். !!