நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி..ஹி ஒட்டு) கேட்ட உரையாடல்கள்...
டி பீ ஹாஸ்பிடல் - தாம்பரம்.
“ஏன் சார், இங்க கான்டீன் எங்க சார் இருக்கு?”
“நானும் அதையே தான் தேடிக்கிட்டிருக்கேன் சார்.”
“சரி வாங்க, நாம ரெண்டு பெரும் வெளில போய் சாப்டுட்டு வரலாம்.”
“நான் கேட்டு பாத்துட்டேன், வாட்ச்மன் வெளில விடமாட்டேங்கறான்.”
“நான் கூப்டுட்டு போறேன் வாங்க, இப்போ தான் அவனை கவனிச்சுட்டு வரேன்.”
“நானும் தான் கவனிச்சேன்...”
“அட கவனிக்கறதுன்னா அது இல்ல சார். சம் திங்...”
“சம் திங் னா...”
“நீங்க எங்க வேல செஞ்சீங்க...”
“கவர்ன்மென்ட் ஸ்டாப் சார் நானு.”
“என்னத்த வேல செஞ்சு.. என்னத்த காலம் தள்ளுனீங்களோ - காசு கொடுத்தேன் சார்...”
“ஓஹோ அன்பளிப்பா?”
“அப்பாடா இப்பவாவது புரிஞ்சுதே, வாங்க போலாம்.”
இருவரும் சேர்ந்து வெளியே செல்கின்றனர்...
கண்ணன், க்ரோம்பேட்.
ஊரிஸ் கல்லூரி வெளியே - வேலூர்.
“சார், உள்ள யாரும் அலோ பண்றதில்ல...”
“செர்டிபிகேட் வாங்க வந்திருக்கேன், உள்ளே போக அலோ பண்ணுங்க.”
“சார் பரிட்சையே இன்னும் நடக்கல, அப்புறம் வாங்க...”
“ஹலோ நான் போன வருஷம், முடிச்சேன்.”
“சார், போன வருஷம் பரிச்சையே நெறய பேருக்கு இன்னும் முடியல...”
“என்னது பரிட்சையே முடியலையா? எப்ப வரட்டும்...”
“உங்க போனுக்கு மெஸேஜ் வரும் அப்ப வாங்க...”
“சர்டிபிகேட் இல்லாம எப்படி வேலைக்கு போறது......”
தனக்குள்ளே பேசிக்கொண்டு நடக்கிறார்...
சிவானந்தம் - வேலூர்.
ரேஷன் கடை, தொரைப்பாக்கம்...
“ஏண்டி, நீ என்ன வரிசைல நிக்கிற?”
“ஏன் நிக்க கூடாதா? நீங்க தான் நிக்கணுமா?”
“அது இல்லேடியம்மா, பில் போடறவன் கோமாரிகளை பாத்தா லைன்ல நிக்காமயே போட்டு அனுப்பிச்சுடுவான், அதான் கேட்டேன்..”
“அது ஏன் வுட்டுக்காரன் தான், என்ன பண்றன்னு பாக்கத்தான் லைன்ல நிக்கறேன். நீ சொன்ன மாதிரி எதுனா நடக்கட்டும், அப்புறம் இருக்கு கச்சேரி...”
“ஆதி ஆத்தீ நான் தான் போட்டு குடுத்துட்டேனா..?”
கிழவி சிரித்துக்கொண்டே நகர்கிறார்.
கண்ணன், பெருங்குடி.
திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி கோயில் வாசலில்…
“என்னடி பவித்ரா... எப்பவும் தி.நகர் முப்பாத்தம்மன் கோயிலுக்குத்தானே போவே! திடீர்னு திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை பார்க்க வந்திருக்கே… ஏதாவது விசேஷமா..?!”
“அதையேன்டி கேக்கற... போன வாரம் தஞ்சாவூர் போய், மாமியார்கிட்ட தனியா, பக்குவமா பேசி, குடும்ப சொத்தை என்பேர்ல எழுதிக்கலாம்னு பாத்தேன். அங்கு வேதாளம் மாதிரி தன் குடுபத்தோட நாத்தனார் கோமதி, மாமியார் பக்கத்துல உட்கார்ந்து, என்னை பார்த்து கிண்டலா சிரிக்கறா! ஒரு வேலையும் ஆகலை… அதான்… பார்த்தசாரதியை தனியா பார்த்து, அவளுக்கு ஏதாவது கெடுதல் செய்ங்கனு வேண்டிக்க வந்தேன்..!”
“பாத்துடீ பவித்ரா… ஒரு குரங்கிடம் அப்பத்தை கொடுத்து, சரிசமமா பிரிச்சு கொடுத்த பூனைகளின் பரிதாப கதை ஆயிடப் போகுது! ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்பதை ஞாபகத்தில் வெச்சுக்கோ! இப்ப இருக்கறதும் போயிடப் போகுது...”
அபர்ணா சங்கர், சென்னை.
Leave a comment
Upload