உண்மையைச் சொல்லடா....
காதல் பொய்யனே....!
உன் மனது எனதென்றாய்...
என் மனது உனதென்றாய்...
உன்னையும் காணவில்லை...
என் மனதையும் காணவில்லை...
கொள்ளைப் பிரியம் என்றதனால்...
கொள்ளையடித்துச் சென்றாயோ...?!
எங்கு ஒளிந்திருக்கிறாய்...
எனை எங்கு ஒளித்திருக்கிறாய்...?!
உண்மையைச் சொல்லடா....
காதல் பொய்யனே....!
நானே உன் நிழல் என்றாய்...
நீயே என் நிஜம் என்றாய்....!
நிழலையும் காணவில்லை...
நிஜத்தையும் காணவில்லை...
உண்மையைச் சொல்லடா....
காதல் பொய்யனே....!
எங்கு ஒளிந்திருக்கிறாய்...
எனை எங்கு ஒளித்திருக்கிறாய்...?!
கண்டறிவேனடா....
என் காதல் பையனே....!
என் அருமை காதல் பொய்யனே..!
காதல் வாழட்டும்...!
காதல் வாழ்த்தட்டும்...!!
Leave a comment
Upload