விநாயகருக்கு உருவம் இன்னது தான் என்றில்லை.
கணபதியை எப்படி ஒரு கோடி காட்டினாலும் தன்னை வெளிக்காட்டும் தன்மை உடையவன் கணபதி.
ஹாங்காங்கின் இல்லத்தரசி மாலினி ஶ்ரீநிவாசன்.
சிறந்த பாடகி. உஷா உதுப்பின் குரலில் பாடகிகள் கிடைப்பது அரிது. அப்படி ஒரு பாடகி மாலினி.
அது மட்டுமல்ல... கையெல்லாம் கலை என்பது போல பலவிதமான கலைப் பொருட்களை சேகரித்து, அதை அலங்காரமாக தன் இல்லத்தில் வைப்பதுமல்லாமல்... அதை மாதந்தோறும் சிரமேற்கொண்டு மாற்றும் கலைஞர்.
அவருக்கு விநாயகரை விதவிதமாக வரைவதில் ஒரு அலாதி கிக்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்...
அதென்ன விநாயகர் இத்தனை பரிமாணங்களில் என்றதும், மாலினி...
“நான் பக்தி ஆசாமி இல்லை, ஆன்மீக ஆசாமி. எனக்கு விநாயகர் கடவுள் அல்ல, ஒரு நல்ல நண்பன். ஒரு கைடு. என்னை வழிநடத்திச் செல்பவர்.
விநாயகருடன் நான் தினமும் பேசுவேன்.
எனக்கு விநாயகரை வரைவது ஒரு ஹாபி. ஒரு அப்செஷன். பாஷன். என்னுடைய, எனக்கு மட்டுமல்ல என்னைப் போல படம் வரையத் தெரிந்த பலருக்கும் விநாயகர் மீது ஈர்ப்பு உண்டு.
ஒவ்வொரு பொருளிலும், வண்ணங்களிலும் நான் விநாயகரைக் காண்கிறேன். அவரை மட்டும் தான் இப்படி சர்வ சுதந்திரத்துடன் வரைய முடியும் அல்லது குறியீடாக உணர்த்த முடியும் என்று நம்புகிறேன்” என்கிறார்.
மாலினி ஶ்ரீநிவாசன்.
Leave a comment
Upload