விநாயகர் ஊர்வலம் தேவையா, இல்லையா..?
மரகதம், மாதவி, கிருஷ்ணவேணி, வடபழனி.
“சென்னை நகரில் தற்போது, கொரோனா தொற்று 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. அத்துடன், அன்று ஒரு நாள் கூத்தாக - ஒரு சில அமைப்புகள் மதக்கலவரத்தை தூண்டுவதை தடுக்கலாமே! மேலும், ஒரே தெருவில் 4 பேர் மெகா பிள்ளையார் சிலைகளை வைத்து வியாபார பொருளாக்குகின்றனர்.
நமக்கு தெரிந்தவரிடம் நம் வீட்டு சிலைகளை கரைக்க கொடுத்தால் மற்றவர் கோபித்துக்கொண்டு, அடுத்த முறை நம் சிலைகளை வாங்க மாட்டார். முன்பெல்லாம் பிள்ளையார் சிலையுடன் காணிக்கையாக சொற்ப தொகை தருவோம். ஆனால், தற்போது ஒருவரின் சிலையை எடுத்து செல்ல, அடாவடியாக ₹50 முதல் ₹100 வரை வசூலிக்கின்றனர்.
வேறுவழியின்றி அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து, பிள்ளையாரை வழியனுப்ப வேண்டியிருக்கு. ஏன்னா, நம்ம வீடுகள்ல இருந்த கிணற்றை மூடிவிட்டு, கட்டிடங்கள் கட்டி, ஆழ்துளை கிணறுகள் போட்டாச்சே! பின்னே எப்படி நம் வீட்டு கிணறுகளில் பிள்ளையாரை கரைக்க முடியும்..? இதைத்தான் அவர்கள் சாதகமா பயன்படுத்திக்கிறாங்க. இனி பிள்ளையார் ஊர்வலம் வேண்டவே வேண்டாம். நாங்களே கோயில் குளத்துல கொண்டு போய் போட்டுக்கிறோம்!”
மகேஷ், செந்தில்குமார், பாலாஜி, அய்யப்பன்தாங்கல்.
“வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிக முக்கியம். அப்போதுதான் மக்களிடையே ஒற்றுமையும், இறைபக்தியும் அதிகரிக்கும். இப்போதான் எல்லா பழைய வீடுகளும் உருமாறி, கான்கிரீட் தரைகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிடுச்சே..! மூடிய கிணற்றில் எப்படி களிமண் பிள்ளையாரை கரைப்பாங்க?
நாங்க ஆயிரக்கணக்கில் செலவு பண்ணி பிரமாண்ட விநாயகர் சிலை வெச்சாலும், பக்தர்கள் காணிக்கை அளிப்பது குறைவுதான். பிறகு நாங்கள் எப்படி அந்தச் சிலையை வாகனத்தில் எடுத்து சென்று கடலில் கரைப்பது? எனினும், விநாயகர் சிலை வழிபாட்டை ஒரு சமூக அமைப்பாக செயல்படுத்தி வருகிறோம். இதை ஏதேதோ காரணங்கள் கூறி தடுத்து நிறுத்தினால் எப்படி?
இதனால் தமிழகத்தில் ஏதேனும் அபசகுனங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது..? போன வருடம் விநாயகர் ஊர்வலத்தை நிறுத்தியதால்தான் கொரோனா பரவல் அதிகரித்ததாக பலர் நம்புகின்றனர். இந்த வருடம் ஊர்வலத்தை அனுமதித்தால், கொரோனாவோ.. நிபா வைரஸோ அலறியடித்து, இந்தியாவை விட்டே தலைதெறிக்க ஓடிவிடும்!”
வ.தங்கவேல், திருவாரூர்.
பொது இடங்கள்ல சாராயம் குடிக்கலாம். ஆனா சாமி கும்பிட கூடாது.. என்னங்கடா நியாயம் இது?
ஜெ.சுரேஷ், திருச்சி.
இந்துக்கள் சோத்துல அடிச்ச பிண்டங்களா இருக்கிற வரை இந்த நிலைமை மாறப்போவதில்லை.
பா.செந்தில் குமார், சைதாப்பேட்டை.
வேளாங்கண்ணி தேர் திருவிழா இப்ப நடந்துக்கிட்டு இருக்கு. அதுல எல்லாம் பரவாத கொரோனா, வினாயகர் ஊர்வலத்துல மட்டும் வந்துடுமா?
மா.சிவக்குமார், மடிப்பாக்கம்.
நெல்லையப்பர் திருவிழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா எல்லாம் நடந்துக்கிட்டு தானே இருக்கு. இந்த கலவர கபோதிகங்க ஊர்வலம் மட்டும் தானே அரசு வேணாம்னு சொன்னதுல என்ன தப்பு இருக்கு?
வேணுகோபால், சிட்லப்பாக்கம்.
பல கோயில்கள் பக்தர்கள் இல்லாமல் கோயில் நிர்வாகிகளே திருவிழாக்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதை போலவே கூட்டம் இல்லாமல் பொதுஇடங்களில் பிள்ளையார் வழிபாடு மற்றும் ஊர்வலங்கள் நடத்த அரசு அனுமதி கொடுத்திருக்க வேண்டும். ஒரேயடியாக தடைப்போட்டது சரியல்ல..
கோ.மகேஷ், ஸ்ரீரங்கம்.
பேசாம பிள்ளையாருக்கு ஒரு சிலுவைய மாட்டி கிரிஸ்டீனா ஒரு பத்து நாளைக்கு மாத்தி வச்சிடுறோம். அப்பவாச்சும் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுப்பீங்களா விடியல் சார்??
Leave a comment
Upload