நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்களின் மத்தியில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளவர் மதர் தெரசா.

இவரின் மனித நேய சேவை என்பது உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த தலைவர்களை ஈர்த்த ஒன்று ..
மதர் தெரேசாவுடன் பத்து வருடமாக பணிபுரிந்து ..நிறைய அனுபவங்களை பெற்று ..அதே மிஷினரிஸ் ஆப் சாரிட்டி கேரளா வயநாடு சபையில் பணியாற்றி கொண்டிருக்கும் சிஸ்டர் கிளார் ரோஸ் அவர்களை சந்தித்தோம் ....

" மதருடன் பத்து வருடம் பணியாற்றியதில் எனக்கு கிடைத்த அனுபவமும் ...ஆசிர்வாதமும் ஏராளம் ...அதை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை ...மதரின் சேவை ...ஒரு சமூக சேவையல்ல ....அது ஒரு மனித நேய சேவை ...அந்த சேவைகளில் மதர் பார்த்தது ...இறைவன் இயேசுவை தான் என்று ஆணித்தரமாக சொல்லலாம்.
1985- முதல் 1994 வரை மதருடன் கை கோர்த்து அவரின் பாதையில் நடந்து கற்று கொண்டது ஏராளம் .
முதலில் அவர் கற்று கொடுத்தது சகிப்பு தன்மையை தான் .

ஏழையிலும் ...மிக மோசமான ஏழ்மையில் சாகக்கிடப்பவர்களை மீட்டு தான் மதர் தன் அன்பு கரத்தை நீட்டியுள்ளார் ...கொல்கத்தா தெருக்களில் கேட்பாரற்ற ஏழைகள் மனநலம் பதித்தவர்கள் மற்றும் குஷ்டரோகிகளை மதரின் கரங்கள் ஆரத்தழுவின ....சாக்கடையிலும் ...சேற்றிலும் ..புழுதியில் கிடந்தவர்களை தூக்கி வந்து புதிய மனிதர்களாக மாற்றியவர் எங்கள் மதர் ....
உயரமாக இருக்கும் அவர் வயதினால் கூன் போட்டு குனிந்து நடந்தாலும் ...நாம் ஒரு அடி வைத்து நடந்தால் மதர் நான்கு அடி எடுத்து வைத்து நடப்பதே ஒரு கம்பிரம் தான் ...

அவரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடப்பதற்குள் முச்சு இறைத்து ...வேர்த்து விடும் என்று கூறும் சிஸ்டர் . கிளார் ரோஸ் ...
மதரிடம் இருந்த பத்து வருடமும் மெய்சிலிர்க்கும் ஒன்று என்று கூறுகிறார் ...

மதர் 1950 ஆரம்பத்தில் ஒரு காளி கோயிலில் தான் தெருக்களில் கேட்பாரற்று கிடந்தவர்களை எடுத்து வந்து சிகிச்சை கொடுத்துள்ளார் ...லொரேட்டா கன்னியரான இவர் ..மிஷினரி ஆப் சாரிட்டி சபையை உருவாக்கியது இங்கு தான் .
ஒரு ஆசிரியையாக பணியாற்றிய மதர் பாவப்பட்ட மக்களுக்கு தன் சேவையை துவக்கியதே இறைவனின் அழைப்பு என்பார் அது தான் உண்மை .

ஆக்னஸ் என்ற மதர் தெரேசா ஒரு கன்னியாஸ்திரி வெறும் ஐந்து ரூபாய் வைத்து கொண்டு ஒரு சேவை இல்லத்தை எப்படி துவக்கி நடத்தி வந்தார் என்பதை அவருடன் இருந்து பார்த்த என்னை போன்ற கன்னிகைகளுக்கு இன்று கூட ஆச்சிரியமாக தான் இருக்கிறது ...
மதர் கூறும் ஒரே விஷயம் தெருக்களில் வேதனை பட்டு கொண்டிருப்பது வேறு யாரும் இல்லை நம் ஜீசஸ் தான் ...அவரின் வேதனையை நாம் தான் சரி செய்யவேண்டும் எப்படி ? அவர்களை மீட்டு சிகிச்சை கொடுத்து ஒரு அழகு மனிதர்களாக மாற்ற வேண்டும் .

தன் முதல் மாடி அறையில் இருந்து தெருவில் அவரின் பார்வை இருக்கும் குஷ்டரோகத்திலும் வேறு நோய்களால் பாதிக்க பட்டு தெருவில் கிடப்பவர்களை பார்த்து இதோ இறைவன் கஷ்டப்படுகிறார் என்று கூறி தெருவில் இறங்கி சென்று நாங்களும் உடன் சென்று ஒரு பெட் ஷீட் கொண்டு அதில் சுருட்டி எடுத்து வந்து புழுக்கள் நிறைந்த உடலை சுத்தம் செய்து குளிக்க வைத்து .ஒரு நல்ல மனிதனாக மாற்றி சிகிச்சை அளிப்போம்.

அதில் சிலருக்கு புண்களில் இருந்து புழுக்கள் வரும் துர் நாற்றம் அதனால்
குமட்டல் எதுவமே எங்களை பாதிக்க வில்லை எந்த ஒரு தொற்று நோய்யும் தாக்கவில்லை அதை இறைவனுக்கு செய்யும் சேவையாகவே செய்து வருகின்றோம் .

அப்பொழுது எல்லாம் நாங்களே தெருவில் கிடைக்கும் அனாதைகளை தூக்கி வந்து எங்கள் இல்லத்தில் சேர்த்து குணமாக்குவோம் பின்னர் . எங்க ஆம்புலன்ஸை எடுத்து கொண்டு போய் நோயாளியை எடுத்து கொண்டு வந்து புது மனிதனாக மாற்றி வந்துள்ளோம் .

இப்பொழுது போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி என்று ஏகப்பட்டவர்களிடம் தெரிவித்து சான்றிதழ் பெறவேண்டும் என்ற சட்டம் போன்றவை வந்து விட்டது ..அந்த பாவப்பட்ட ஜீவன்கள் குணமடைந்தவுடன் கை தொழிலும் கற்று கொடுத்து விட்டார் மதர் தற்போது குணமாகிய பலர் நல்ல வேலை செய்து செட்டில் ஆகியும் உள்ளனர் ..
மதர் சிகிச்சை கொடுத்தவர்கள் தான் எங்களின் ஆடைகளை நெய்து தருகிறார்கள் .மதர் செலக்ட் செய்த இந்த உடுப்பு கல்கத்தா மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அணியும் புடவைகள் தான் அதை தான் மதர் அணிந்து கொண்டார் .

இது தான் எங்களின் ஆடை ..உலகம் முழுவதும் உள்ள எங்களின் 750 சபை கன்னியாஸ்திரிகள் அணிவது இதே சாரி தான் .
தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்தவுடன் அடுப்பை மதருடன் சேர்ந்து நாங்களே மூட்டுவோம் ..அந்த புகையில் மதர் எங்களுடன் சேர்ந்து உணவுகளை தயாரிப்பது இன்றும் என் நினைவில் .

மதரின் அறை கிச்சனுக்கு நேர் மேலே இருந்தது ..கீழே உள்ள வெப்ப தணல் மதரின் அறையை அனல் பறக்க செய்யும் எந்த ஏ சி யும் மின் விசிறியும் அவரிடம் இல்லை ..அதை பற்றி கவலை படாமல் இறைவனுக்கு செய்யும் பணியை எந்த தொய்வும் இல்லாமல் செய்தது தான் அவரின் கன்னம் கைகளில் இருந்த சுருக்கம் .

இதை விட மறக்க முடியாதது மதர் நோய்யாளிகளின் டாய்லெட்டை தினமும் சுத்தம் செய்வது தான் . இன்னும் என் கண்ணில் உள்ளது ..
இப்பொழுது இருப்பது போல க்ளோஸெட் சிஸ்டம் இல்லை ..அது டிரைனேஜ் சிஸ்டெம் ..அப்பொழுது எல்லாம் பினாயில் வாஷிங் பவுடர் கிடையாது வெறும் சாம்பலை கொட்டி குச்சி துடைப்பத்தில் வாட்டர் டேங்கில் இருந்து தண்ணீரை ஊற்றி மதர் கழுவும் போது பூரித்து பொய்யுளேன் ..

மிகவும் கடினமான வாழ்க்கையை மதரின் வேகமான பணிகள் எங்களை சகிப்பு தன்மையை ஏற்படுத்தி சுலபமாக்கின !.
எங்களுக்கு என்று மொபைல் போன் எதுவமே கிடையாது எங்களுக்கு பாதுகாப்பு கேடயம் இந்த சிலுவை மற்றும் ஜெபமாலை தான் ..

மதருடன் பணியாற்றிய பத்து வருடமும் மிக இனிமையான காலங்கள் தான்
அவரின் பேச்சு எங்களுக்கு சொல்லிக்கொடுத்த பல வழக்கை பாடங்கள் அனைத்தும் எங்களுக்கு அனுதின ஜெபம் தான் .
...இன்னும் சொல்லி கொண்டே போகலாம் ..அவர் வாழ்ந்த காலம் முழுவதும் புனிதமாக தான் வாழ்ந்தார் .

அவரிடம் சிகிச்சை பெற்ற அனைவரும் அன்றே மதர் தெரசா என்ற புனிதரின் ஆசீருடன் நலம் பெற்று விட்டனர் ..
அந்த பத்து வருடம் என் வாழ்க்கை எங்கள் மதருடன் பயணித்த புனித பயணம் தான் .இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .

Leave a comment
Upload