தொடர்கள்
நெகிழ்ச்சி
பாஸிட்டிவ் கார்னர் _தில்லைக்கரசிசம்பத்

20220329144814296.jpgஷாநவாஸ் அக்தர் என்கிற பயணி இரண்டு நாட்களுக்கு முன்பு தன்பாத்திலிருந்து ஹவுரா சதாப்தி ரெயிலில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். தனக்கு தேனீர் வழங்க வந்த ரயில்வே ஊழியரிடம் சிறிது நேரம் தாமதித்து எடுத்து வரும்படி ஷாநவாஸ் வேண்டிக்கொண்டார். அதை கேட்டதும் அந்த ஊழியர் ஷாநவாசிடம் " நீங்கள் நோன்பு இருக்கிறீர்களா..?" என்று கேட்க அதற்கு ஷநாவாசும் "ஆம்.. "என்று பதிலளித்திருக்கிறார் . "சரி.." என்று ஊழியரும் சென்று விட்டார். பின்னர் ஷாநவாஸ் கூறியபடி தாமதமாக வந்த வேறொரு ரயில்வே ஊழியரின் கைகளில் தேனீர் மட்டுமில்லை.. இஃப்தார் விருந்துக்கான சிற்றுண்டி பழங்கள் எல்லாம் இருந்தன .

ஆச்சரியமடைந்த ஷாநவாசின் கைகளில் அவற்றை கொடுத்த அந்த ஊழியர் புன்னகையுடன் திரும்பி சென்றார். நெகிழ்ச்சியுற்ற ஷநவாஸ் இந்த நிகழ்வை டிவிட்டரில் பதிவிட்டு , இந்திய ரயில்வே துறைக்கு தனது நன்றியையும் அன்பையும் தெரிவித்திருக்கிறார். இந்திய ரயில்வேயின் இந்த நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.