
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மீக அரசு -தருமபுரம் ஆதீனம்
பெரியார் திடல் ஆதீனம் டென்ஷன் ஆகாம இருந்தா சரி
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
அப்படியா? !நெசமாவா? !உண்மையாவா? சத்தியமா வா!
ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நிறைவு
அப்பாடா ஒரு வழியா அந்த அம்மா செத்துப் போனது உண்மைதான் என்று கமிஷன் அறிக்கை தரும் அப்படித்தானே ஓபிஎஸ் சார்
ஆளுநர் பதவி தேவையில்லை -தெலுங்கானா முதல்வர்
போற போக்கை பார்த்தால் ஆளுநரால் பாதிக்கப்பட்ட முதல்வர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிச்சிடுவாங்க போல தெரியுது
50 ஆயிரம் விவசாயிகளுக்குஇலவச மின் இணைப்பு -அமைச்சர் தகவல்
மின்னிணைப்பு சரி மின்சாரம் எப்ப வரும் அதை சொல்லுங்க
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு
கண்டிப்பா தரணும் அரசு கஜானா அவங்க தயவில்தான் ரொம்புது
புதிய பணியாளர்கள் நியமிக்க தடை மின்சார வாரியம்
மின்தடை என்பதால் இப்ப வேலை ரொம்ப ஜாஸ்தி இல்லை தடை சரிதான்
பொதுத் தேர்வு வினாக்கள் அனுப்பும் பணி தீவிரம்
அதை விடுங்க ஜெராக்ஸ் எப்ப கிடைக்கும் அதைச் சொல்லுங்க முதல்ல
விரைவில் அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குவேன் சசிகலா
கோர்ட்டு கேஸ் எல்லாம் முடிந்த பிறகு தானே
பொதுத் தேர்தலை சந்திக்க அதிகாரம் பொருந்திய குழு அமைப்பு சோனியா காந்தி
அந்த அதிகாரத்தை அதிகாரம் செய்யும் குழு நீங்க ராகுல் காந்தி பிரியங்கா காந்தி சரியா

Leave a comment
Upload