சிம்ரன்

சிம்ரன், பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். அந்தப் படத்துக்கு கமல், ஸ்ரீதேவி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
நஸ்ரியா

'சீன்' என்ற தமிழ் படத்தில் 12 வருடங்களுக்கு பிறகு நஸ்ரியா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன்

"மது அருந்தும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நான் இயக்குனர்களை பயமுறுத்துவதில்லை. சீரகத் தண்ணீர் குடித்து மது குடிப்பது போல் நடித்து சமாளிப்பேன்" என்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆண்ட்ரியா

நடிகர் சிம்புவும் நடிகை ஆண்ட்ரியாவும் ஜெர்மனியில் திடீரென சந்தித்தனர். இந்த எதிர்பாராத சந்திப்பை தனது வலைதளத்தில் பகிர்ந்த ஆண்ட்ரியா ' அரசன் ரீ யூனியன் இன் ஜெர்மனி ' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நயன்தாரா

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன்-2 நவம்பர் 6-ஆம் தேதி ரிலீஸ். பூந்தமல்லியில் உள்ள ஒரு தியேட்டரில் அம்மன் வேட நயன்தாராவுக்கு 60 அடியில் ஒரு கட்அவுட் வைத்திருக்கிறார்கள். தாய்க்குலம் கற்பூரம் ஏற்றி அவரை வணங்குகிறது. தமிழகத்தில் ஒரு நடிகைக்கு இவ்வளவு உயர கட்டவுட் இதுதான் முதல் தடவை என்கிறார்கள்.
காயடு லோஹர்

தற்சமயம் நடிகை காயடு லோஹர் ஆஸ்திரேலியாவுக்கு ஜாலி சுற்றுப்பயணம் போயிருக்கிறார். சிட்னி நகரத்தில் அவர் எடுத்த புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ருக்மணி வசந்த்

' கணம் 'படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் ருக்மணி வசந்த் இணைந்துள்ளார்.
ரஜிஷா விஜயன்

ஜீவா நடிக்கும் 'தகப்பன் 'படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இந்தப் படம் கிறிஸ்துமஸ்க்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
சமந்தா

நடிகை சமந்தா ஒரு டிவி ஷோவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டதற்கு "எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் விஜய் சார் தான் அது. அவர் எனக்கு லக்கி சார்ம் அவருடன் ஜோடியாக நடித்து மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறேன். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார் "என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார் நடிகை.
திரிஷா


கோவையில் ஒரு மொபைல் ஷோரூமை திறந்து வைக்க வந்த நடிகை திரிஷாவிடம் செய்தியாளர்கள், அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா ?என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு அவர் புன்னகைத்த படியே எந்த பதில் அளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள், " அக்கா வருவாங்கப்பா "என்று நிருபர்களுக்கு பதில் சொல்லி இருக்கிறார்கள்.
கேத்தரின் தெரசா

கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கேத்தரின் தெரசா தொடர்ந்து கதக்களி, கணிதன் கடம்பன், கலகலப்பு 2 அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்சமயம் தெலுங்கில் முன்னணி நடிகையாக பிசியாக இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்

மிஷ்கின் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி டீசர் வெளியாகி இருக்கிறது.
கயல்
'உறியடி' விஜயகுமார் நடிப்பில் சத்திய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அறிவு ' மலை கிராமங்களில் கல்வியை கொண்டு சேர்க்கும் ஆசிரியராக விஜயகுமார் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.

Leave a comment
Upload