
Parade...Present Arms!Parade...General Salute
Parade...Halt.. என்ற அதிர்வான முழக்கத்தில் சூழல் அமைதியானது.
மரியாதையை ஏற்றுக்கொண்ட அரவிந்தராஜ், நிலையத் துணைக் கண் காணிப்பாளாராக இன்று பதிவியேற்கிறார்.
மரியாதை நிமித்தமாக ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்கள்,எழுத்தர், காவலர்கள் என அனைவரும் வந்து சந்தித்துச் சென்றனர்.
ஆய்வாளர் ஒவ்வொருவரின் தனிச் சிறப்பைச் சொல்லி அறிமுகப் படுத்தினார். சிறப்பு உதவி ஆய்வாளர் முறை வந்தபோது,
இவர்...என்றதும்
நாகராஜன், 2015 ல்சிதம்பரம், கும்பகோணம்கிழக்கு,சுவாமிமலை,அதிராம்பட்டினம்,வல்லம்,கபிஸ்தலம்,A2 வாக பாபநாசம்,
அம்மாபோட்டை,பட்டுக்கோட்டை எல்லாம் சுற்றி மீண்டும் கும்ப கோணத்திற்கே வந்துட்டாரு, இந்த மாதம் ஓய்வும் பெற இருக்கிறார் இரண்டு் முறை மாவட்ட விருதுகள் கலெக்டர் கையாலே வாங்கியிருக்கிறார் இல்லையா நாகராஜன் என்று DSP கேட்டதும்,
ஆமாம்..சார்! ஆமாம் என தலையை ஆட்டினார் மகிழ்ச்சியாக.
மறக்க முடியுமா?! இல்லை மறக்க கூடியவரா நீங்கள் என்றவர்,
எல்லோரும் சீட்டிற்குப் போங்க,இதுவரை எப்படியோ தெரியாது இனி எல்லோரும், மிடுக்குடனும்,நேர்மையாகவும் இருக்கணும் என உத்திரவிட்டு அனுப்பி வைத்தார்.கிளம்பிய ஆய்வாளரை நிறுத்திய DSP, அவருடைய சர்வீஸ் பேப்பர்ஸ் எல்லாம் மாவட்ட அலுவலகத்திலிருந்து வரவழைத்து என் டேபிளில் பார்வைக்கு வைங்க என்றார்.
யோவ்..என்னய்யா இது? உன்னுடைய சர்வீஸ் ரிஜிஸ்டர்(SR) ஐ கேட்கிறாரு என்றதும் பீதி கிளம்பியது நாகராஜுக்கு.
நாகராஜனின் Service Records file வந்ததும் DSP யிடம் எடுத்துச் சென்ற ஆய்வாளரிடம்,இவர் ரிடையர்மெண்ட் மறக்க முடியாததாக இருக்கணும், என்னை கேட்காமல் எந்த டூயூட்டியோ,லீவோ கொடுக்காதீங்க என்றவர், ஸ்கூப்பிலே வைங்க, இந்த மாதம் முழுவதும் என்கிட்டே நேரடியாக அவர் ரிப்போர்ட் செய்யணும் என கறாராகச் சொல்லி அனுப்பினார் புது DSP அரவிந்தராஜ்.
பாவம் சார் அவரு, ஏன் இப்படினு தெரிஞ்சுக்கலாமா சார் என கேட்ட ஆய்வாளரைஉட்காருங்க என்றார் DSP.
பதினேழு வயதிருக்கும் எனக்கு சிதம்பரத்தில் படித்து கொண்டிருந்தேன். என் அப்பாவுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் அன்று மார்கழித் திருவாதிரை என்பதால் மக்கள் கூட்டம் அதிகம்.
கஞ்சித்தொட்டி அருகே சாலைப் பணியிலிருந்தவர் கைக்காட்டி எங்களை நிற்கச்சொன்னார், நாங்கள் அதை கவனித்ததும் உடனே இடது புறமாக திரும்பிய என் அப்பா வடக்கு வீதி வழியாகச் சென்று யூ டர்ன் எடுத்து மேலவீதி சாலையைப் பிடித்ததும்விரட்டிக்கொண்டு வந்து வண்டியை நிறுத்தி சாவியைப்பிடுங்கி, ஏன் கொஞ்ச நேரம் நிற்க முடியாதா உங்களுக்கு ?! நாங்க எதற்காக நிற்கின்றோம், உங்கள் பாதுகாப்பிற் காகத்தானே என்று சொல்லவும், அதான் வந்திட்டோம்ல சார் விடுங்க என்று அப்பா சொன்னதற்கு
சமார்த்தியமா நீ வந்திட்டே,உன்னை பாலோ பண்ணி இத்தனை பேரு பின்னாடி வந்ததால் வடக்கு வீதியில் மேலும் டிராபிக் ஜாமாகி கிடக்கு என்று கடுமையாகச் சொன்னதும்,இப்போ என்ன செய்யனுங்கிறீங்க என எங்கப்பா எகிற அப்பாவை ஓங்கி கண்ணத்தில் அறைந்துவிட்டார். அப்பாவின் கண்ணாடி தெறித்து விழுந்ததில் தடுமாறி நின்றார்.
கடுங்கோபத்தில் நானும் அவரை திருப்பி அடிக்க பாய்ந்தேன்,என் அப்பா என்னைத் தடுத்து அவர்கள் வேலை அது, திருப்பியெல்லாம் அடிக்க கூடாது என்றதும் சமாதனமாகி எங்களை அனுப்பி வைத்துவிட்டார்.
அப்பா அமைதியாகி விட்டாலும், என் கண்முன்னே அப்பாவை அடித்தது மட்டும் ஜீரணிக்க முடியாமலே இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும்போது வழியில் பார்க்கும் பொழுதெல்லாம் கோபம் எனக்குத் தலைக்கேறும், என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியலையே என நினைத்து வருந்தினேன். அவர் என்னை மறந்திருக்கலாம்.சிதம்பரம் நகரில் அவருக்கு நல்ல பெயர், நேர்மையானவர் எனச்சொல்வார்கள்.
ஆனால் எனக்கு அவரை பழித்தீர்க்க வேண்டும் என்கிற வெறி தலையிலே ஏறியிருந்தது.
அவர் கும்பகோணத்திற்கு மாற்றலாகிப்போனார் என தெரிந்ததும், எனக்கு பழக்கமான காவலர்களிடம் அவ்வப்போது கேட்டுத் தெரிந்துக்கொள்வேன்.
நான் கல்லூரி முடித்து சிவில் சர்வீஸ் தேர்விற்கான பயிற்சிக்காக தஞ்சாவூர் வந்தபோது கூட ஒரிரு முறை அவரைப் பார்க்க நேரிட்டது.
இப்போது இங்கேயே போஸ்டிங்,அவரும் இங்கேயே பணியில் இருக்கிறார் இந்த மாதிரியான சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்குமா?!பணி ஓய்வு நாளன்று நாகராஜனுக்கு இருக்கு என்றார் DSP, மெளனமாக அறையிலிருந்து வெளியேறினார் ஆய்வாளர்.
நாகா என்னய்யா பண்ணி வச்சிருக்கே, அந்தாளு உன் ஜாதகத்தையே அலசிகிட்டுத்தான் வந்திருக்காரு.. என்று ஆய்வாளர் சொன்னதும்,
என்ன ஐயா?! சொல்றீங்க என்றார் பதட்டமாக.
DSP சொன்ன தகவல்களையெல்லாம் ஆய்வாளர் சொல்ல சொல்ல வியர்த்தது நாகராஜனுக்கு.
புள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டோம் என்றவர், 35 வருட சர்வீசுங்க, நல்லபடியா ஓய்வு பெற வச்சிடுங்கய்யா அது போதுமெனக்கு என்றார்
யோவ் பிரச்சனையே அதுதான்யா,இந்த மாசம் பூரா நீ அவர்கிட்டேதான் ரிப்போர்ட் செய்யணுமாம் என்றதும் நாகராஜனுக்கு கவலைத் தொற்றிக் கொண்டது.
தினம் நிலையத்திற்கு வருகிறாரா என கேட்டு வேற எந்த கேசுகளும்,
நீதிமன்ற வேலைகள் கூட கொடுக்காமல் சும்மாவே உட்கார வைத்து விட்டதை நினைத்து நினைத்து ஆய்வாளரும் அவரோடு சேர்ந்து இருவரும் கவலைக் கொண்டனர்
நாகராஜனின் பணி ஓய்வுநாள் அன்று.. நிலையத்தார் அனைவரையும் காலை பரேடு முடிந்ததும் தனது அலுவலகத்திற்கு அழைத்தார் DSP.
புள்ளைபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குமென நீங்க எதிர் பார்க்கலை இல்லே, ஆனால் கொடுக்கு முளைச்சு விஷத்தைக் கக்க எட்டு வருடங்களாக தூக்கிகிட்டு திரிஞ்சுது என்றார் சிரித்துக்கொண்டே DSP
சார் நீங்க உயர் அதிகாரி, நான் சாதரண ஆளு என்று நா தழுத தழுத்து கைகளை குவித்துக் கும்பிடப்போனார்,
அதைப் பார்த்த DSP சீட்டிலிருந்து வேகமாக எழுந்து அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு,
என்ன பண்றீங்க நீங்க ?! நான்தான் உங்களை கும்பிடனும், நான் இந்த நிலைக்கு வருவதற்கே காரணம் நீங்கதான் என்றவர், அன்றைக்கு நடந்த சம்பவத்திலேதான் எனக்கு உங்களை விட அதிகாரமிக்கப் பதவிக்கு வரணும் என்கிற நினைப்பே வந்தது. என் அப்பாவும் இதற்குத்தான் ஆசைப்பட்டார். ஆனால் அவரால்தான் பார்க்க முடியவில்லை.நீங்கள் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் என்றார்.
எனக்கு கீழே நீங்கள் வேலைப்பார்ப்பதா? அதற்காகதான், இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு ஓய்வு கொடுத்தேன்,வெளியே சென்று ஏதும் பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது அது உங்கள் ஓய்வன்று எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றுதான் கோர்ட்டுப் பணிகளுக்கு கூட உங்களை அனுப்ப வில்லை என விளக்கமளித்தவர்,ஓய்வுத்தினத்தன்று பழி வாங்குவார் என நீங்கள் பயந்திருப்பீர்கள்,அது தவறு.
கடமை, நேர்மை, ஒழுக்கம் எல்லாம் முதலில் நம்மிடத்திலே இருக்கவேண்டும்,அப்போதுதான் நாம் பிறரை சரி செய்ய முடியும் என்றவர் இன்று நாகராஜனின் ஓய்வை முன்னிட்டு எல்லோருக்கும் இரவு விருந்து நம்ம கேம்ப் ஆபிஸில் என்றார் மகிழ்ச்சியாக அரவிந்ராஜ்.
சீருடையனிந்த நான் முதல் சல்யூட் என் தந்தையின் படத்திற்குத்தான் காலையில் செய்தேன் என்ற DSP அடுத்த சல்யூட்டை தங்களுக்கு அளிக்கின்றேன் என்றார்.

Leave a comment
Upload