
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து பங்கேற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இருவருக்குமான உரையாடல் தற்போது சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு வழிவகத்துள்ளது.அந்த உரையாடல் இதுதான்.
ராஷ்மிகா : நாம் திருமணம் செய்து கொள்ளலாம் ...
விஜய் தேவார கொண்டா: " சரி... பார்க்கலாம் இப்போது ஏன்
ராஷ்மிகா : நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்
விஜய் தேவரகொண்டா : இதே விஷயத்தை என்னிடம் நீ நூறு முறை கேள் அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.
கரண் ஜோஹர் : உண்மையிலேயே 100 முறை கேட்டீர்களா?
ராஷ்மிகா : திருமணத்துக்கு முன்பு ஓராண்டு முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்தேன். தினமும் கேட்டேன்.
என்பதுதான் விவாத பொருளானது.
இது பற்றி சமூக ஊடகங்களில் நிறைய கருத்துக்கள் வெளியாயின.
இது திரையுலகில் பல வெற்றிகளை பெற்ற பிரபலமான ஒரு நடிகை ,நடிகர் காதலித்தார்கள்.

திருமணம் செய்து கொள்ள அவரை சம்மதிக்க வைக்க திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது ஏன்.?
அந்த சூழலை ஏன் தேவரகொண்டா உருவாக்கினார் ?
இருவரின் காதல் என்பது அவர்கள் தனிப்பட்ட விஷயம் அதை பொதுவெளியில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன ? என்பதுதான் கேள்விகள்.
விஜய் தேவரகொண்டா பற்றி ரசிகர்கள் நூறு முறை கேட்டால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற அவரது முடிவு ராஷ்மிகாவை அவமதிக்கும் செயல்.
இது அவரது ஆணவத்தின் வெளிப்பாடு என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா "இது விமர்சனம் செய்யப்படும் என்பது எனக்கு தெரியும் .
திருமணம் என்பது முக்கியமான முடிவு எல்லா தடைகளையும் கடந்து நீடிக்கும் ஒரு உறவை விரும்புபவன் நான்.
ராஷ்மிகா கூட நீ என்னை சோதிக்கிறாயா? என்று கேட்டார் .
அப்போது எனக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது.
நான் என்னையே சோதித்துக் கொண்டிருந்தேன் .
எங்கள் உறவையும் சோதித்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் கணத்தில் எதிரில் இருப்பவர் மீது மிகுந்த காதல் இருப்பதாகவும் தோன்றுகிறது என்பதற்காக மட்டும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது .
மகிழ்ச்சியாக இருக்கும் போதும்,சோகமாக இருக்கும் போதும், தொழிலுக்காக முழு நேரத்தையும் செலவிடும்போதும் அல்லது நடிப்பையே விட்டு விட்டு வீட்டில் இருக்கும் போதும், வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் திருமணம் மிக முக்கியமானது.
அதனால் தான் ராஷ்மிகாவை காத்திருக்க செய்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார் .
கரண் ஜோஹர் 'ஒரு நாள் மட்டும் திருமணமாகாதவராக இருக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்'?என்று கேட்டார்
அதற்கு விஜய் தேவரகொண்டா 'என்னால் தனியாக இருக்க முடியாது ராஷ்மிகாவுடன் வாழப் பழகி விட்டேன் அவரிடம் இருப்பது மிகவும் வசதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறதாக' தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்குரிய விவாதத்துக்கு ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் பதில் சொல்லி இருக்கிறார்.
திருமணம் தொடர்பாக முடிவு எடுக்க எத்தனை தடவை பேசினார்கள்.
எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்கள் போன்றவை முக்கியமில்லை. கடைசியில் ஒருத்தரை ஒருத்தர் தேர்ந்தெடுத்தார்களா என்பது தான் முக்கியம்.
எனக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாக தெரிந்திருக்கிறது.
வாழ்க்கையின் நடைமுறை விஷயங்களை பற்றி யோசித்து உறுதியாக முடிவெடுக்க அவருக்கு சிறிது காலம் தேவைப்பட்டது.
அதனால் எங்கள் காதல் மாறிவிடவில்லை.
எங்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு முன்மொழிவைப் பற்றியோ, முழங்காலில் அமர்ந்து மோதிரம் அணிவிப்பது பற்றியது அல்ல.
இருவரும் சேர்ந்து ஒரு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவது தான் முக்கியம்.
என் கணவர் மீது எனக்கு அளவு கடந்த காதல் இருக்கிறது. அதில் என்ன தவறு?
உங்களை அழகாக நேசிக்கும் ஒருவரை கண்டுபிடிங்கள்.
திருமணத்துக்குப் பின்பும் அவரைப் பார்த்து 'இவரைத்தான் மீண்டும் நான் திருமணம் செய்து கொள்வேன் 'என்று சொல்லத் தோன்றும் வகையில் அவர் உங்களை நேசிக்க வேண்டும் .
விஜய் தேவரகொண்டாவிடம் 100 முறை அல்ல 1000 முறை நான் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பேன்.
இது சொந்த கற்பனையில் முழுமையாக மூழ்கி இருப்பவருக்கு என் பதில்.
காதல் எப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் கற்பனைக்கு எங்களுடைய காதல் பொருந்தவில்லை என்றால் பரவாயில்லை.
உங்களுடைய வாழ்க்கையில் காதல் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட அழகான வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள் உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ள ராஷ்மிகா "என்னைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்.என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியும்.
என் குடும்பத்தை பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல் பேசுவதற்கு பெயர் பெண்ணியம் அல்ல. என்றும் சொல்லி இருக்கிறார் ராஷ்மிகா.
விஜய் தேவார கொண்டாவும் தங்கள் சமூக வலைதளத்தில் "எங்களைப் பற்றி கவலைப்படுகிற அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
நாங்கள் இருவரும் அளவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் .
இந்த உலகமே எங்களுக்கு எதிராக நின்றாலும் ,நானும் அவளும் ஒன்றாக எதிர்கொள்வோம் "என்று பதில் சொல்லி இருக்கிறவர் உண்மையான காதலை மதிப்பவர்களுக்கும், எளிய முறையில் தங்களுக்கு பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ நினைப்பவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ராஷ்மிகா என்றதும் லைட்பாய் கொஞ்சம் நீளமாக கட்டுரை எழதி அனுப்பிவிட்டார்…எஞ்ஜாய்!

Leave a comment
Upload