தொடர்கள்
விகடகவியார்
அன்பில் அவன் !!

அன்பில் மகேஷ் கைது

2026929175947363.jpg

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றதாக பதிவான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் ஏற்கனவே அன்பில் மகேஷ் பொய்யாமொழி விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்

அவர் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்

.மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்ட ஆலோசனை செய்வதற்காக மூத்த வழக்கறிஞரும் திமுக ராஜசபா உறுப்பினருமான வில்சன் வீட்டில் அவர் இருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தார்கள்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்ற புகாரில் திமுக பிரமுகர் அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தவிர கிட்டத்தட்ட 117 தனியார் பள்ளிகள் லஞ்சம் கொடுத்து தான் தடையில்லா சான்றிதழ் வாங்கியதாக காவல்துறையில் புகார் செய்திருந்தது

.202692922325481.jpg

அன்பில் மகேஷ் முன்ஜாமின் விசாரணைக்கு வந்த போது அவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏற்கனவே செப்டம்பர் 18-ஆம் தேதி காவல்துறை அழைப்பாணையை ஏற்று, அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.

அப்போது எட்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு 240 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைத்ததாகவும் அவரிடம் இருந்து திருச்சி மற்றும் சென்னையில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆவணங்களை காவல்துறை கைப்பற்றி இருக்கிறது.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் எங்கும் தலைமறைவாக மாட்டார் என்றும் வில்சன் தனது தரப்பில் வாதிட்டார்.

அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முத்துக்குமார் தலைமறைவாக இருக்கிறார்.

விசாலையில் முறைகேட்டு தொகை 400 கோடி வரை இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவருக்கு முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று வாதம் செய்தார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, அவரது முன் ஜாமின் மனுவை அக்டோபர் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்தார். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

2026929223427546.jpg

திமுக பிரமுகரான அரசகுமார் பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் சங்கம் என்ற அமைப்பின் பெயரில் செயல்பட்டு அவர் மூலம் தான் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பற்றி தருவதாக கூறி பள்ளி நிர்வாகிகளிடமிருந்து 100 கோடிக்கு அதிகமாக பணம் வசூலித்ததாக அரசகுமாரிடம் விசாரித்ததில் காவல்துறை தெரிந்து கொண்டது.

2026930150208734.jpg

அதற்கான ஆதாரங்களையும் கைப்பற்றியது. இந்தப் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்துக்கு என்று அன்பில் மகேஷ் தனது வீட்டில் ஒரு தனி அறை அலுவலகமாக பயன்படுத்தியிருந்தார் என்பது அரசகுமார் தொடர்பான விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் ஆய்வு செய்ததில் காவல்துறைக்கு தெரியவந்தது.

விசாரணை முடித்து வெளியே வந்த அன்பில் மகேஷ் "மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அன்பில் மகேஷ் திமுக தலைவர் ஸ்டாலினை பெரியப்பா என்று தான் பாசமுடன் அழைப்பார் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி, அன்பில் மகேஷ் என்று அன்பில் குடும்பமே கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானது

2026930204740527.jpg. உதயநிதி ஸ்டாலினும் அன்பில் மகேஷிடம் சகோதர பாசத்துடன் பழகுவார். இவ்வளவு நெருக்கமாக இருந்தும் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆறுதல் சொல்ல மற்றும் ஆதரவாக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நேரில் வரவில்லை கண்டனம் என்று கருத்து தெரிவித்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

2026929223527818.jpg

வில்சன் மற்றும் சேகர் பாபு இருவர் தான் அவர் சிறைக்கு அனுப்பப்படும் வரை அவருடன் இருந்தார்.

தேடப்பட்டு வந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் முன்ஜாமின்மனு தள்ளுபடி ஆனதால் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜாமீன் மனு முத்துக்குமார் தலை மறைவை காரணம் காட்டி ஒரு வேளை தள்ளுபடி செய்யப்படும் என்பதால் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்காரணமாக முத்துக்குமார் சரணடைந்தார்.