
தீபாவளி லேகியம்:
நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் மிக முன்னேற்பாடுடன் தான் செயல்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் தீபாவளி லேகியம் ஒரு சிறந்தமுன்னேற்பாடுதான்.
தீபாவளி வந்துவிட்டாலே எண்ணெய்ப் பலகாரங்கள் இல்லாத வீடே இருக்காது. குழந்தைகள், பெரியவர்கள் யாரையும் சாப்பிடுவதைக்கட்டுபடுத்த முடியாது. அதனால் அம்மா எப்பொழுதும் தீபாவளி அன்று மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் வீட்டில் தீபாவளி லேகியம்இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் கையில் கிடைத்ததைத் தின்று வயிற்றைக் கெடுத்துவைத்திருப்போம். மந்தமாக இருக்கும் வயிற்றை இந்த லேகியம் குணமாக்கும். தீபாவளி அன்று எண்ணெய்க்குளியல் முடித்து இந்தலேகியத்தினை நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு விட்ட பின்பு தீபாவளி பலகாரங்களை சாப்பிடுவது நல்லது.தினமும் ஒரு வேளைநெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் போதும்; எல்லோருடைய வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய இந்த லேகியம் செய்யும் முறையினைதிருமதி ஜெயலெஷ்மி கிருஷ்ணன் சொல்கிறார். .
தேவையான பொருட்கள்
- பனை வெல்லம் – 500 கிராம்
- நெய் – 100மில்லி
- நல்லெண்ணெய் -100மில்லி
- தேன் -50மில்லி
வறுத்துப் பொடிக்க
- அரிசித்திப்பிலி -25கிராம்
- கண்டதிப்பிலி -25கிராம்
- மிளகு -25கிராம்
- ஜீரகம் -25கிராம்
- ஓமம் -20கிராம்
- சுக்கு -50கிராம்
- ஏலக்காய் -10
- கொத்தமல்லி விதை -15 கிராம்
செய்முறை
- வறுத்துப் பொடிக்க வேண்டிய எல்லாப் பொருட்களையும் தனித்தனியாகக் குறைந்த தீயில் வறுக்கவும்.
- எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்துச் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- பனை வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும் .
- கனமான வாணலியில் காய்ச்சிய பனை வெல்லத்தை ஊற்றி சுண்ட விடவும். சுண்ட ஆரம்பித்தவுடன்
- பொடித்து வைத்ததைப் போடவும் அதில் நெய், தேன், எண்ணெய் போட்டுக் கிளறி உடனே இறக்கி விடவும்.
- ஆறியதும் கையில் ஒட்டாமல் உருட்ட வரும். செரிமானத்திற்கு உகந்தது. தீபாவளி லேகியமும் ஒருவகையில் வரும் முன் காக்கும்வரப்பிரசாதம் தான்.
இறுதியாக.......
லேகியம் ஆறியதும், ஒரு சுத்தமான, ஈரமில்லாத கண்ணாடிப் பாட்டிலில் அல்லது காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு, வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் அளவு இந்த லேகியத்தைச் சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்துத் தீபாவளி பலகாரங்களைச் சாப்பிடலாம்.
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் மற்ற நாட்களிலும் தினமும் ஒரு வேளை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வரலாம்.

Leave a comment
Upload