தொடர்கள்
விகடகவியார்
யார் இந்த சண்முகப்பிரியா

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் லஞ்ச புகார் வழக்கில் சென்னை பெருங்குடி அம்பேத்கர் நகர், பெருந்தலைவர் காமராஜர் நகரில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் என்று அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சண்முகப்பிரியா என்பவர் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

பத்து பேர் கொண்ட குழு 28-ஆம் தேதி காலை 11: 45 மணிக்கு அதிரடி சோதனையில் இறங்கியது.

சண்முகப்பிரியா அன்பில் மகேஷுக்கு மிகவும் நெருக்கமானவர் தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் மூலம் இவருக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து சண்முகப்பிரியா வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியது.

ஆயத்த ஆடைகள் மொத்த விற்பனையில் சண்முகப்பிரியா ஈடுபட்டு வருகிறார்.

100 கோடி மோசடி வழக்கு இப்போது 400 கோடி மோசடி வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

சண்முகப்பிரியா வீட்டில் நான்கு மணி நேரம் சோதனை நடந்தது சண்முகப்பிரியாவுக்கும் அன்பில் மகேஷுக்கு நெருக்கம் ஏற்படக் காரணம் முத்துக்குமார்தான்.

முத்துக்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷின் கல்லூரி தோழர்.

ஏற்கனவே சண்முகப்பிரியாவின் நீலாங்கரை வீட்டில் போலீஸ் சோதனை நடத்தி இருக்கிறது.

சண்முகப்பிரியா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது.

வங்கி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

அன்பில் மகேஷின் பணம் சண்முகப்பிரியா மூலம் முதலீடு செய்யப்பட்டது போன்றதற்கான ஆதாரங்களை முக்கிய ஆவணங்களை சண்முகப்பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைப்பற்றி இருக்கிறது.

சண்முகப்பிரியாவிடம் தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் பற்றிய விவரங்களையும் உரிய முறையில் விசாரித்து தெரிந்து கொண்டிருக்கிறது.

சண்முகப்பிரியாவையும் கைது செய்து காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறங்கி இருக்கின்றனர்.

இந்த வழக்கில் முக்கியமாக தேடப்பட்டு வருபவர் முத்துக்குமார் .

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் திமுக ஆட்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தார்.

முத்துக்குமாரின் முன் ஜாமின் மனுவும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

முக்கிய விவரங்கள் தெரிந்த முத்துக்குமாரை அன்பில் மகேஷ் தான் பாதுகாப்பாக எங்கோ வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் காவல்துறைக்கு தற்சமயம் வந்திருக்கிறது.

எப்படியாவது முத்துக்குமாரை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அன்பில் மகேஷ்யை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்திருக்கிறது.

முத்துக்குமார் குடும்பத்தினருக்கு காவல்துறையை அழுத்தம் தந்த போது "எங்களுக்கு எதுவும் தெரியாது அவர் இருக்கும் இடம் அன்பில் மகேஷுக்கு மட்டும் தெரியும் அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார்கள்

அன்பில் மகேஷ் முத்துக்குமார் குடும்பத்தினரிடம் அவருக்கு ஒன்றும் ஆகாது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உத்தரவாதம் தந்திருக்கிறார்.

காவல்துறையும் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தான் முத்துக்குமாரை தலைமறைவாக வைத்து பாதுகாக்கிறார் என்று குற்றம் சுமத்தி இருக்கிறது.

ஜாமீன் கேட்டு மனு செய்து இருக்கிறார். தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாரை காரணம் காட்டி காவல்துறை அவருக்கு முன் ஜாமின் தரவிடாமல் தடுக்கும் என்கிறது ஆளுங்கட்சி வட்டாரம்.

ஜாமினில் தற்சமயம் வெளி வந்திருக்கும் அரசகுமார் அன்பில் மகேஷ் கைது செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து பேசி இருக்கிறார்.

நான் எந்த வாக்கு மூலமும் உங்களுக்கு எதிராக தரவில்லை எனவே எந்த செய்தியும் நம்பாதீர்கள்.

நீங்கள் விரைவில் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள்.

ஆளுங்கட்சியின் குறி நீங்கள் அல்ல தலைவரின் குடும்பம் தான். எச்சரிக்கையாக பேசுங்கள் "என்று உஷார் பண்ணி விட்டு போய் இருக்கிறார் அரசகுமார்.

இந்தத் தகவலும் காவல்துறைக்கு தெரியும்.

அரசகுமார் எதுவும் சொல்லவில்லை என்று சொன்னாலும் பல முக்கிய விவரங்களை ஆதாரத்துடன் அவர் காவல்துறைக்கு தந்ததால் தான் காவல்துறை அவருக்கு ஜாமீன் கேட்டபோது பெரிய அளவு எதிர்ப்பு தெரிவிக்காததால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது....

இப்படி ஒரு டீல் காவல்துறை அரசகுமாருடன் முன்கூட்டியே போட்டுக் கொண்டிருக்கிறது.

நாங்கள் சொல்லிக் கொடுத்ததை தான் அரசகுமார் அன்பில் மகேஷிடம் சொல்லி இருக்கிறார் என்கிறது காவல்துறை.