தொடர்கள்
விகடகவியார்
தனுஷின் திடீர் தாமரை பாசம் - விகடகவியார்

2026930193445606.jpeg

நடிகர் விஜய் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வரத் தொடங்கியுள்ளது.

தற்போது தனுஷ் அரசியலில் தீவிரம் காட்டும் பணிகள் இறங்கி இருக்கிறார். முதல் கட்டமாக தனுஷ் நற்பணி மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்புதனுஷ் டெல்லியில் முகாமிட்டு முக்கிய பாஜக தலைவர்கள் சிலரை சந்தித்தார் இந்த செய்தி உலா வருகிறது.

டெல்லி புதிதாக சில சாத்தான்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப பார்க்கிறது என்று மறைமுகமாக பாரதிய ஜனதாவையும் தனுஷையும் விமர்சித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசினார்.

தனுஷின் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னை செம்மாஞ்சேரியில் உள்ள ஜே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் தனுஷ் இயக்கத்தின் மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த தனுஷை வரவேற்று "பெண்களின் குரல் உயர்ந்தால் தான் சமூகத்தின் எதிர்காலமும் உயரும். எங்கள் அன்பின் அண்ணன் தனுஷ், எங்கள் தலைவரே போன்ற பதாகைகள் சுற்றிலும் வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்காக 3000 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான குளிருட்டப்பட்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 5000 மகளிர் நிர்வாகிகள் கலந்து கொள்ளவும் அவர்களுடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கத்துக்குள் கைபேசி தடை செய்யப்பட்டு இருந்தது.

விஜய் போல் வழக்கப்படி தனுஷ் இந்த கூட்டத்திற்கு நான்கு மணி நேரம் தாமதமாக வந்தார்.

ஆண் ரசிகர்கள் அடித்து விரட்டப்பட்டனர். முதலில் மகளிர் அணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வழக்கப்படி வேட்டி சட்டையில் வந்த தனுஷ் ஐந்து நிமிடம் தான் பேசினார் "உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று அவர் பேச்சு சுருக்கமாக இருந்தது. அவர்களுக்கு பிரமாதமான விருந்து அளிக்கப்பட்டு வெள்ளி விளக்கு தரப்பட்டது.

விளக்கின் பின்பகுதியில் தாமரைச்சின்னம் பொறிக்கப்பட்டது தற்சமயம் பேசும் பொருளாக இருக்கிறது.

விரைவில் தனுஷ், 'தமிழ் எழுச்சி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவார்.

அதற்காகத்தான் சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் முகாமிட்டார் என்கிறார்கள்.

தனுஷ் அரசியல் வருகை பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறது.

தமிழக வெற்றி கழகம் தனுஷ் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.