தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
" முப்பது வருடமாக தொடரும் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் " -ஸ்வேதா அப்புதாஸ்.

கிருஸ்துமஸ் என்றாலே கேக் மிக முக்கிய பங்கு வகிப்பது உண்டு.
எதோ சாதாரண கேக் தயாரிப்பு என்று மட்டும் இது நினைத்துவிடவேண்டாம்.
ஊட்டி ஜெம் பார்க் ஹோட்டலில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு என்பது ஒரு சிறப்பு வைபவமாக நடைபெற்று வருகிறது.
2026929224034693.jpeg
இந்த வருடம் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் முப்பது வருடத்தை சுவைத்துள்ளது.
1996 ஆம் வருடம் துவங்கின இந்த கேக் மிக்சிங் வைபவம் இன்றும் தொடர்வது அருமையான விஷயம் என்கின்றனர் ஊட்டி வாசிகள்.

கடந்த 28 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு இந்த சுவையான கேக் மிக்சிங் நடைபெற்றது.
2026929225419198.jpeg
பெரிய டேபிளில் திராட்சை, கருப்பு பெர்ரி பழம், உலர் பிளம்ஸ்,செரி பழங்கள்,
பேரிட்சை பழம்,ஆரஞ்சு தோல் மிட்டாய், எலுமிச்சை தோல், முந்திரி, பிஸ்தா, மற்றும் பாதாம், ஏலக்காய், கிராம்பு, பவுடர்
இவையனைத்தையும் ரம், பிராந்தி, விஸ்கி, பழ சாறு, தேன் இவையெல்லாம் ஊற்றி மிக்ஸ் செய்து 45 நாட்களுக்கு நன்றாக ஊறவைத்து பின் வழக்கமான முட்டை, கேக் மாவு சேர்த்து தயாரித்து இந்த ஊறவைத்த கலவையை மிக்ஸ் செய்து ரிச் பிளம் கிறிஸ்துமஸ் கேக் தயாராகும்.


ஊட்டியில் உள்ள சில குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியுள்ள கெஸ்ட் மற்றும் லண்டனில் இருந்து வந்த 12 சீனியர் தம்பதியினர் இந்த கேக் மிக்சிங்கில் கலந்து கொண்டனர்.
2026929224402258.jpeg

லண்டனில் இருந்து வந்த ஆன் தங்கள் நாட்டிலும் வீட்டிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பை பற்றி சுவையாக கூறினார்.
ஜெம் பார்க் ஹோட்டல் மேலாளர் சுரேஷ் நாயர்,
இந்த கேக் மிக்சிங் கடந்த முப்பது வருடமாக நம் ஹோட்டலில் தொடர்ந்து வருவது ஒரு பாரம்பரியமாகிவிட்டது, எப்படி 17 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு ஒரு முக்கிய இடத்தை பிடித்ததோ அது போல ஊட்டியில் எங்க கேக் மிகவும் சுவையானது.



இப்பொழுது மிக்ஸ் பண்ணப்படும் நட்ஸ், பழங்கள் அதனுடன் உயர்ரக ட்ரிங்க்ஸ் மிக்ஸ் செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஊறவைத்து சுவையான கிறிஸ்துமஸ் கேக் ரெடியாகும் " என்று கூறினார்.
ஜெம் பார்க் ஹோட்டலின் மூத்த செஃப் சுரேந்திரன்,
"இன்று நடக்கிற விசேஷம் ப்ரூட் மிக்சிங் வைபவம் கிறிஸ்துமஸ் பிளம் கேக் தயாரிப்பிற்கு இது ஆயத்தம் செய்வதற்கு எங்க ஜெம் பார்க் ஹோட்டல் கடந்த முப்பது வருடமாக இந்த ப்ருட் மிக்சிங் நிகழ்வை நடத்துகிறோம்


நட்ஸ் உலர் திராட்சை, பழ சாறுகள் உயர் ரக ட்ரிங்க்ஸ், ஸ்பைசஸ் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு கலவையாக மிக்ஸ் செய்து ஒரு மாதம் ஊறவைத்து பின் கிறிஸ்துமஸ் கேக் ரெடி செய்வோம்.
17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் இந்த வழக்கம் மிக சிறப்பாக அறுவடை நாளை சிறப்பிக்கவும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக கேக் தயாரிப்பு இருக்கும்.



இன்று மிக்ஸ் செய்வது ஐம்பது கிலோ கிறிஸ்துமஸ் பிளம் கேக் நானுறு கிலோ ரெடிபண்ணுவோம் ! "என்று கூறினார்.
இந்த சுவையான பிளம் கேக் சுவைக்க இன்னும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.