தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

2026930165720423.jpg

கே.என்.நேரு மீது வழக்கு பதிய தடை இல்லை 634 கோடி ஊழல் புகார் உயர் நீதிமன்றம் உத்தரவு.

அப்போ அடுத்த விக்கெட் அவர் தானா ?

தனுஷை இழுக்க தீவிரமாக இறங்கி உள்ள பாஜக !!

விசில் கட்சியை டென்ஷன் பண்ணணும் அவ்வளவு தானே ?

செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க டிஜிபி கண்காணிப்பில் விசாரணை நடைபெறுகிறது அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.

இதை ஏன் போலீஸ் மந்திரி சொல்ல மாட்டேன்றாரு ? மின்சார மந்திரி சொல்றாரு !!

தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

பாவம் நீங்களும் சொல்லிக்கிட்டு தான் இருக்கீங்க ? ஆனால், அப்படி எதுவும் நடக்குற மாதிரி தெரியல?

'அன்புக்கடை' பற்றி ராகுல் காந்தி பேசுகிறார். 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தால் பாதித்த குடும்பங்கள் துயருற்றப் போது இந்த அன்புக்கடை எங்கே போனது ? அரியானா முதல்வர் கேள்வி.

அப்போது அவர் குழந்தையா இருந்தார். அவருக்கு எப்படி தெரியும் ?

குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார் ?

அவர்தான் இப்போது தாய் மாமனா மாறிட்டாரே ?

புதிய நடிகரை முன்னிறுத்தி அரசியலில் குழப்பம் விளைவிக்க பாஜக முயற்சி செய்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.

நீங்க பயப்பட ஆரம்பிச்சிட்டீங்க அது மட்டும் தெரியுது !!

வாக்கை காப்போம் ! நாட்டை காப்போம்!! ராகுல் காந்தி.

இப்படி ஏதாவது அடிச்சு விட்டுட்டு, பையை தூக்கிட்டு வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆயிருவீங்க ?

கோவையில் நடிகை திரிஷா ரோடு ஷோ !!

போன வாரம் அவர் இதே கோவையில் ரோடுஷோ நடத்தினார், இந்த வாரம் அக்கா ?

தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி.

என்ன பிரயோஜனம் ? தாமரைக்கு மக்கள் ஓட்டு போட மாட்டேன் என்கிறார்களே ?

இஸ்ரோ ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது இஸ்ரோ தலைவர்.

அப்போ, அதுக்கான வேலை ஏதோ நடக்குது போல தெரியுது !!

தலைமை தேர்தல் ஆணையர் பாஜக ஏஜென்ட் போல் செயல்படுகிறார் வைகோ கருத்து.

விடுங்க தலைவரே, இப்ப நம்ம யாரு ஏஜென்ட் அத சொல்லுங்க ?

நாங்கள் அனைவரும் திருமாவளவனை முதல்வராக்க முயற்சி செய்தோம் .டி.டி.வி தினகரன்.

இப்படி ஏதாவது தப்பு தப்பா நீங்க செய்வீங்கன்னுதான், இருந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் விசில் ஊதப் போய்விட்டார் !!

திருணாமுல் அதிருப்தி அணியுடன் கூட்டணி இல்லை, மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட முடிவு.

ஆமா உங்க வேல முடிஞ்சு போச்சு இல்ல ?