அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்ற வதந்தி இன்றுவரை உயிரோட்டமாக தான் உலாவி வருகிறது சென்ற வாரம் செய்தியாளரிடம் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நிருபர்கள் "நீங்கள் அமைச்சராக துணை முதல்வராக வர வேண்டும் என்று அமைச்சர்கள் விரும்புகிறார்கள் அதுபற்றி உங்கள் கருத்து என்ன? "என்று நிருபர்கள் கேட்டபோது சினிமாவில் சிரிக்கும் அதே சிரிப்புடன் "உங்க கருத்து என்ன"?என்று நிருபர்களிடம் திருப்பிக் கேட்டார் உதயநிதி ஸ்டாலின் அதில் ஒரு நிருபர் "நீங்கள் அமைச்சராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும் "என்று சொல்ல "சரி இதை அப்படியே தலைவரிடம் சொல்லி விடுகிறேன் "என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.மே 7ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது அன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார்என்கிறார்கள் சிலர்.ஏற்கனவே முரசொலி ஆசிரியர் பதிப்பாளராக இருந்த முரசொலி செல்வம் பெயர் நீக்கப்பட்…
பிரதமரின் புது புது தகவல்

பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒரு தகவல் மாதிரி புதுப்புது தகவல்களை பிரதமர் நமக்கு சொல்வார். போன வாரம் அவர் ரேடியோவில் பேசும்போது நடப்பாண்டில் மார்ச் மாதம் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்தது. நாளொன்றுக்கு 20 ஆயிரம் கோடி யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது .சிறிய உணவகம் பழக்கடை இங்கெல்லாம் கூட யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது என்று பெருமையாக சொன்னார்.அவர் சொன்னது உண்மைதான் எங்கள் தெருவில் சோன்பப்படி விற்பவர் குச்சி ஐஸ் விற்பவர் கூட அந்த வசதி வைத்திருக்கிறார்.
ராஜ்பவனில் காத்திருக்கும் கோப்புகள்

ஆளுநரிடம் அவர் ஒப்புதலுக்கு ஏற்கனவே பல கோப்புகள் கையெழுத்து போடாமல் காத்திருக்கிறது என்று திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் ராஜ் பவன் வாசலில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள்.இந்த சூழ்நிலையில் தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு மாநில அரசே துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் மசோதா சட்டசபையில் நிறைவேறி முதல்வர் தலைமைச் செயலாளர் கையெழுத்துடன் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. நேற்று சித்தா பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக முதல்வரை நியமனம் செய்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அதுவும் உடனே ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்ப இருக்கிறார்கள் ஆளுநர் 30ஆம் தேதி நீலகிரியில் இருந்து ராஜ்பவன் திரும்புகிறார்.என்ன செய்யப் போகிறார் என்பதே அவருக்கு மட்டுமே தெரியும். பல மாநிலங்களில் ஆளுநர்களை முதல்வர்கள் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் குருப்பெயர்ச்சி சரியில்லை போல் தெரிகிறது.
அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை

பெட்ரோல் டீசல் விலை குறைய எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் இதை ஒரு கோரிக்கையாக தான் நான் வைக்கிறேன் என்றார் பிரதமர். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்காமல் கண்டனம் தெரிவித்தார் மம்தா பானர்ஜி. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் பிரதமர் பல லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது என்றும் பதில் சொன்னார் முதல்வர்.
தமிழக பாரதியஜனதா தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல் டீசல் விலை முறையே தலா ஐந்து ரூபாய் மற்றும் நான்கு ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது வாக்குறுதி அளித்து 355 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் குறைக்க வில்லை எந்த வாக்குறுதியும் அளிக்காமல் பெட்ரோல் டீசலுக்கு முறையே 10 ரூபாயும் 4 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது உக்ரேன் போருக்குப் பிறகுதான் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது முதல்வர் தனது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று தமிழனாக நான்எதிர்பார்க்கிறேன்என்று வம்புக்கு இழுக்கிறார்ஆனால் தமிழக நிதியமைச்சர்அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லைஏற்கனவே குறைத்து பிரச்சனையை முடித்து விட்டார்.
ராஜ்பவனில் அமித்ஷா ஏன் தங்கவில்லை.

சென்ற வாரம் புதுச்சேரி நிகழ்ச்சிக்காக சென்னைக்கு இரவு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆளுநர் மாளிகையில் தங்கவில்லை நட்சத்திர விடுதியில் தங்க வில்லைஆவடியில்உள்ள சிஆர்பிஎஃப் விருந்தினர் மாளிகையில் தங்கினார். இத்தனைக்கும் சிஆர்பிஎஃப் நிகழ்ச்சிஎதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.ஆளுநர் ராஜ்பவனில் இல்லை.அவர் சிலபல நிகழ்ச்சிகளுக்காக நீலகிரிக்கு போய்விட்டார். ராஜ்பவனில் தங்கி தனது கட்சிக்காரர்கள் உடன் ஆலோசனை அந்தத் தகவல் எல்லாம்ஆளும் திமுகவுக்குபோய்விடும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லைசிஆர் பி எஃப் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.விமான நிலையத்திலிருந்து அமித்ஷாவுடன் பாரதிய ஜனதா முக்கிய நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி கேசவ விநாயகம் அண்ணாமலை இணை அமைச்சர் முருகன் ஆகியோர் சென்றனர் அவர்களுடன் தமிழக அரசியல் பற்றி ஆலோசனை நடத்தினார் அமித்ஷா. இது ஒருபுறமிருக்க ஏற்கனவே தமிழக மாநில நிர்வாகிகளை மாற்றி அமைத்து ஒரு பட்டியலை டெல்லியில் அண்ணாமலை தந்திருக்கிறார் ஒரு மாதமாக அந்தப்பட்டியலுக்கு ஒப்புதல் தராமல் டெல்லி தலைமை இழுத்தடிக்கிறதுஅது ஏன் என்பது தெரியவில்லை.

Leave a comment
Upload