தொடர்கள்
கவிதை
மகளதிகாரம்! 5- கவிஞர் தனபாண்டியன்

20220301101458773.jpg

# மகளதிகாரம் - 5 #

மலர்களையோ
கொத்திக் குதறும் வலிகளையோ
இன்னபிறவற்றையோ
நிகழ்வின் நீட்சிகளென்றோ
வார்த்தைகளின் காட்சிகளென்றோ
உள்விழுங்கி
உறைந்து
நிறைந்து
தழும்பி
மெளனத்தின் கரம் பற்றி ஆழ்ந்திருக்கின்றன
காத்திருப்பின் பிடரிகள்
எக்கணமும் உடையும்படி


இவைகள் அத்தனையையும்
உங்களால்
சல்லிசல்லியாய் உடைத்து
உள்ளும் புறமும்
துளியும் மீராது
துடைத்தெறிய முடிகிறது எனில்
நீங்கள் மகளைப் பெற்றவர்கள் என்றே
காலத்தின் பேரனுபவம் மொழிகிறது.