தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20220419165150184.jpeg

Heading : பட்டாம்பூச்சி பேசுது - 6 என்.குமார்

Comment : பட்டாம்பூச்சி பேசுது வித்தியாசமான கலக்கல் தொடர்!

சுபத்ரா ராஜ்குமார், குருவாயூர்

Heading : மருமகள் சமர்த்து - பா. அய்யாசாமி

Comment : சமையல் எரிவாயு சிக்கனம் குறித்து இப்படியும் மருமகள் சமர்த்து பெயரில் சொல்லலாம் என கூறி அசத்திவிட்டார் அய்யாசாமி.

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை

Heading : “அகோரமாய்ச் சிரித்தாள்…!” - வெ.சுப்பிரமணியன்

Comment : திகிலுடன் கூடிய ஆங்கில ஹார்பர் கதையைப் படித்தது போலிருந்தது, சுப்பிரமணியனின் அகோரமாய் சிரித்தாள்.

கலா கார்த்திக், வடபழனி

Heading : திருநீலநக்க நாயனார்!!- ஆரூர் சுந்தரசேகர்.

Comment : சுந்தரசேகரின் அறுபத்து மூவரில் திருநீலநக்க நாயனாரின் வரலாறு மிக சிறப்பு.

பாகீரதி சம்பத்குமார், கும்பகோணம்

Heading : கடலில் வந்த தங்கத் தேர் - மாலா ஶ்ரீ

Comment : கடலில் வந்த தங்க தேரா? என்னப்பா கிலியை கிளப்பறீர்? இந்த மாதிரி எங்க ஏரியாவுக்கு தங்க, வெள்ளி, வைர, பிளாட்டின தேர் வருமாறு கனவு ஏற்பட்டுடுச்சு!

சௌம்யா சதீஷ், திருவான்மியூர்

Heading : மயிலாப்பூர் கொலை 6 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு - விகடகவியார்

Comment : எனக்கு இதில் நகைக்குப் பின் வேறுதுவோ இருப்பது போல தோன்றுகிறது. உதாரணத்திற்கு இந்த நேபாளிகளை முன்னிருத்த்தி வேறு ஏதோ ஒரு சக்தி அவர்களை கொலை செய்ய வைத்திருக்கிறது. இதற்கு பின்னனியில் ஒரு மிகப் பெரிய மாபியா இருக்கக் கூடும். இந்த கேசை உடனே முடித்து விடாமல் இதன் பின்னனியை அலச வேண்டும்.அவர்களின் பண்ணை நிலத்தையோ அல்லது வீட்டையோ அடிமாட்டு விலைக்கு ஒரு அரசியல் எச்ச பய வந்து வாங்குவான் என்று நினைக்கிறேன். அது தான் மோடிவாக இருக்குமோ ??? கொலை செய்ய வேண்டிய அவசியமே இல்லையே ?? நிச்சயம் ஏதோ ஒரு மர்மம் இதற்கு பின் இருக்கிற்து. தயவுச் செய்து தோண்டிஎடுக்கவேண்டும்.

முஜும்தார், சென்னை

Heading : திணறும் ஊட்டி! -ஸ்வேதா அப்புதாஸ்.

Comment : கொரோனா தொற்று அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். இப்போ என்ஜாய் பண்ண ஊட்டிக்கு சீசன்ல வர்றோம். இந்த நேரத்துல விவிஐபிக்களை யாருப்பா ஊட்டிக்கு வரச்சொன்னது? அவங்களும் பார்க்காம, எங்களுக்கு இடைஞ்சல் பண்றதே வேலையா போச்சு! பின்னே... ஊட்டி திணறாம என்ன பண்ணும்?

பாத்திமா, நூர்ஜஹான், வாணியம்பாடி

Heading : மாண்புமிகு மனிதர்கள் 2 - ஜாசன் - 4 - ஜி.கே. வாசன்

Comment : மாண்புமிகு மனிதர்களில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை பற்றி நீங்கள் கூறுவது ஆச்சரியத்தை அளித்தது. அவரையும் டாக்டர் ராமதாஸை மும் அறிக்கை மன்னர்கள், காரியவாதிகள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கூறுகின்றனர். அவரிடம் மாற்றம் ஏற்பட்டு முன்னேறினால் சரி!

புருஷோத்தமன், ராஜவேலு, நாகர்கோவில்

Heading : நம் பாதுகாப்பு ,நம் கையில்-மரியா சிவானந்தம்

Comment : முதியவர்கள் இக் ன் பாதுகாப்பு, அவர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து மரியா சிவானந்தம் மிக அழகாக விளக்கியிருக்கிறார். இதை அனைவரும் கடைப்பிடித்தால் மிக்க நலம்.

ரேணுகா ஹரி, சாலிகிராமம்

Heading : மயிலாப்பூர் கொலை 6 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு - விகடகவியார்

Comment : ரொம்ப கொடுமை. இந்த காலத்துல யாரையும் விசுவாசமாக இருப்பான்னு நம்ப முடியாது. வித்த சொத்தின் பலனை தம்பதி அனுபவிக்க முடியாமல் கொன்னுட்டான் பாவி!

ரேணுகாதேவி குமார், நெய்வேலி

Heading : புல்டோசர் அரசியலும், சிலிண்டர் விலையும் -தில்லைக்கரசிசம்பத்

Comment : ஏதாவதொரு பிரச்சனையை கிளம்பி, அதை ஊதி பெரிசாக்கி, கலவரத்தை ஏற்படுத்தி மக்களை டென்ஷனாக வைத்திருப்பதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கைதேர்ந்து விட்டனர் என்று வாதம் சரிதான். இதனால் பெட்ரோல், டீசல், காஸ், காய்கறி, மளிகை பொருள் விலை உயர்வு பெரிதாக தெரியவில்லை என்பதே நிஜம்!

சீனிவாச ராவ், பெங்களூர்

Heading : தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் அனுமதி follow up சென்ற வார கவர் ஸ்டோரி.

Comment : சும்மா கெடந்த சங்கை தி.க தலைவர் வீரமணி ஊதி பெரிசாக்கிட்டார். அவரவர் மத சம்பிராதயங்களை கடைப்பிடிப்பதில் இவருக்கு என்ன குடைச்சல்? இதுவே கிறிஸ்தவ, இஸ்லாமிய மத சம்பிரதாயங்களில் இவர் தலையிட முடியுமா? ஒருவேளை, தன்னை பல்லக்கில் தூக்கி செல்லவில்லையே என்ற ஏக்கமாக இருக்கும்.

முனுசாமி, ரங்கன், காசிமேடு

Heading : எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... நல்லவரா?... கெட்டவரா?! - ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : மின்சார ஸ்கூட்டர் நல்லவரா, கெட்டவரா என்பது வேறு விஷயம். வேலை முடிஞ்சு வீடு திரும்பி, இரவு நேரத்தில் தான் சார்ஜ் போட முடியும்? அது ம உள்ள டியும்வரை தூங்காமல் பக்கத்திலேயே உட்காரணுமா? மின்சார ஸ்கூட்டரில் நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி பேட்டரி போட வேண்டியதுதானே? பணம் கொடுத்து வாங்கற நாங்க உயிரிழக்கணுமா?

ஜமுனா பிரபாகரன், திருவள்ளூர்

Heading : பற்றி எரியும் பஞ்சு விலை - தடுமாறும் திருப்பூர் -ஸ்வேதா அப்புதாஸ்

Comment : நூல் விலையேற்றம் திருப்பூர், கோவை மாவட்டத்தில் பருத்தி ஆடை உற்பத்தியாளர், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். அங்கு வேலை செய்த எங்க வீட்டுக்காரர், இப்போ ஓட்டல்ல பாத்திரம் கழுவறதை பார்த்தா வேதனையா இருக்கு. குடும்பம் நடத்தணுமே?

செண்பகவல்லி சிவராமன், சிவகங்கை

Heading : ஶ்ரீகாந்தின் தாயார் மறைவு - மணி

Comment : கிரிக்கெட் வீரர் ஷீறிகாந்த் தாயார் கணீர் குரலில் பாடிய பாடல் நெகிழ வைத்தது. அவரது மறைவு ஷீறிகாந்த் குடும்பத்துக்கு மிகப்பெரும் இழப்பு. எங்களின் ஆழ்ந்த இரங்கல்.

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை

Heading : இலங்கையின் அழிவுக்கு ஶ்ரீரங்கம் கோபுரம் காரணமா ?? - ராம்

Comment : கரெக்டா சொல்லியிருக்கார் விஜயராகவன். ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் தடுக்கும் இலங்கை கலவரத்துக்கும் என்ன சம்பந்தம்? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறீர்?

ராஜலட்சுமி பார்த்தசாரதி, திருச்சி

Heading : இலங்கை -குடும்ப ஆட்சி பட்டபாடு! !! - ஜாசன் மூத்த பத்திரிகையாளர்

Comment : ஹாசனின் இலங்கை - குடும்ப ஆட்சி பட்ட நாடு, செய் சூடாகவும் தலையில் நறுக்குனு க உள்ள ட்டின மாதிரி இருந்தது. இதேபோல் இந்தியாவில் குடும்ப ஆட்சி நடக்கும் பல்வேறு மாநிலங்களில் விரைவில் இதுபோன்ற கிளர்ச்சிகள், போராட்டங்கள் ஏற்படுமோ என அஞ்சல் தோன்றுகிறது.

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்

Heading : வலையங்கம்

Comment : மத்திய அரசின் வீடு கட்டும் நிதியுதவிக்கு விண்ணப்பித்த இளைஞனிடம் லஞ்சம் வாங்கி, அவனை தற்கொலைக்கு காரணமான அரசு ஊழியருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றலில் மாற்று கட்சிக்காரன் செத்தால், தமிழக அரசு ஏன் மக்களின் வரிப் பணத்தில் நிவாரண தொகை வழங்க வேண்டும்? இத்தொகையை தொண்டனின் கட்சி தலைமைதானே வழங்க வேண்டும். ஓட்டு போட்ட மக்கள் ஏமாளிகளா?

லட்சுமி வெங்கட்ராமன், வேளச்சேரி