தொடர்கள்
நேயம்
“சுதந்திர தின விழாவை கொண்டாடும் ஊட்டி மோட்சராக்கினி ஆலயம் “ - ஸ்வேதா அப்புதாஸ்

நீலகிரி மாவட்டதின் முதல் கத்தோலிக்க ஆலயம் ஊட்டியில் வீற்றிருக்கும் தூய மோட்சராக்கினி ஆலயம்.

ஊட்டி நகரின் மையப்பகுதியான செயின்ட் மேரிஸ் ஹில்லில் அமைந்துள்ளது.

20260713225823134.jpeg
1605 ஆம் ஆண்டு அன்றைய கள்ளிக்கோட்டை கத்தோலிக்க பிஷப் ஜெசியுட் பாதிரியான ஜோக்கிம் பெரேரா என்பவரை நீலகிரி மலைக்கு அனுப்பிவைத்து கத்தோலிக்க குடும்பங்கள் இருக்கிறார்களா என்று பார்த்து வர அனுப்பிவைத்தார்.
அந்த பாதிரி நேரில் வந்து ஆராய்ந்த போது தோடர் மற்றும் படுகர் இன மக்களை தவிர வேறு யாரும் இல்லை என்று திரும்பி விட்டார்.

20260713230134385.jpeg


பின்னர் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து நவீன நீலகிரியை உருவாக்கின கோயம்பத்தூர் கலெக்டர் ஜான் சல்லிவனுக்கு பின் கிறிஸ்தவம் இந்த மலையில் உருவானது.
1837 ஆம் வருடம் போர்த்துகிசிய மிஷினரிகள் தென் இந்திய கத்தோலிக்க நிர்வாகத்தை பாரிஸ் மிஷினரிகளிடம் ஒப்படைத்து சென்ற பின் பிரஞ்சு பாதிரிகள் தங்களின் பணிகளை தொடர்ந்தனர்.
1838 ஆம் ஆண்டு பாதர். போகோட் பெக்காளைர் நீலகிரிக்கு வந்து தங்கி ஊட்டியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு என்று ஒரு சிற்றாலயம் கட்ட முயன்று வில்லியம் ரம்போல்ட் என்பவரின் சமையல்காரரான ஜோக்கிம் என்பவரின் சொந்த இடத்தில் திருப்பலி நடத்தினார்.
ஜோக்கிம் பாதிரியார்களின் பணியில் மூக்கை நுழைக்க அவர் இடத்தில் இருந்து வெளியே வந்து கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒரு சிறிய நிலத்தை வாங்கினார்கள் அது தான் இப்பொழுதுள்ள செயின்ட் மேரிஸ் ஹில்.

அங்கு ஒரு சிற்றாலயத்தை கட்டி திருப்பலி நிறைவேற்றி வந்தார்.
அது தான் தற்போது உள்ள புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளி.
1859 ஆம் வருடம் பாதர். பைபியோ மற்றும் பாதர். தெபோரிஸ் புதிய ஆலயத்தை கட்டியெழுப்பினார்கள்.
அன்னை மரியாளின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி
(15-8-1870 ஆம் ஆண்டு) புதிய ஆலயம் புனித படுத்தி திறந்து வைத்தார் பாதர் பிகேயின்.

20260713231203587.jpeg
அந்த நாளே வருடம்தோறும் ஆலயத்தின் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
பின்னர் 40 வருடம் பாதர் பியோலி இந்த ஆலயத்தின் பங்கு குருவாக மிக சிறப்பாக பண்ணியாற்றி வர ஊட்டி நகராட்சி நாசரேத் கான்வென்ட் சாலையை பியோலி சாலை என்று பெயர் சூட்டினார்கள்.

20260713230559487.jpeg
இவருடைய தலைமையில் பாதர் மாகுட்ஸ் மற்றும் 41 பிரிட்டிஷ் சிப்பாய்கள் லூர்து அன்னை சுரூபத்தை பாரிஸ் நகரில் இருந்து கப்பலில் எடுத்து வந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையம் வந்து அங்கு பாதர். பர்த்துவா சுரூபத்தை புனித படுத்தி மிலிட்டரி டிரக் மூலம் ஊட்டி கொண்டுவந்தனர்.

20260713230731529.jpeg
இன்றும் இந்த சுரூபம் காட்சியளிக்கிறது.
பாதர் பியோலி அவரின் பொன்விழாவை சிறப்பிக்க சலவை கற்களால் செதுக்கப்பட்ட பீடத்தை பொருத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

20260713231413239.jpeg
இந்த ஆலயத்தில் 1924 முதல் 1941 வரை பணிபுரிந்த பங்கு குரு கிரேஸாக் முதல் உலக போரில் தன் நாட்டுக்காக போர் புரிய பிரான்ஸ் சென்று போரில் கலந்து கொண்டு தன் வலது கால் குண்டால் துளைக்க பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் இங்கு வரும்போது அழகிய ஸ்டைன் கண்ணாடிகளை உடன் எடுத்து வந்து பொறுத்தியுள்ளார் ஆலயத்தில்.

20260713230641314.jpeg
இவர் ஒரு மாலை இரவு தன் அறையில் ஜெபமாலை ஜெபித்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக அன்னை மரியாள் ஆலயத்தில் இருந்து பியோலி சாலை வழியாக செல்வதை பார்த்து பின் தொடர்ந்து நாசரேத் கான்வென்ட்டினுள் அன்னை சென்றதை தொடர்ந்து சென்று அங்கு உள்ள கெபியில் மாதா மறைந்ததை பார்த்து அதிர்ச்சியிலும் ஆச்சிரியத்திலும் நின்றுள்ளார்.

பாதர். கப்பேல் பிரான்ஸ் நாட்டில் இருந்து மோட்சராக்கினி மாத சுரூபத்தை கொண்டு வந்து புனித படுத்தி வைத்துள்ளார்.
தற்போது இந்த சுரூபம் தான் பீடத்தின் நடுவில் காட்சியளிக்கிறது.

20260713230820563.jpeg
இது வரை 35 குருக்கள் பங்கு குருவாக பணியாற்றி வந்துள்ளனர்.
பாதர். கப்பேல் 1947 ஆம் ஆண்டு இதே ஆலயத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்த செய்தியை அறிந்து தானே தேசிய கொடியை தயாரித்து
அன்று அன்னை மரியாளின் விண்ணேற்பு பெரு விழா ஆலயத்தின் ஆண்டு விழா கொண்டாட்ட திருப்பலிக்கு முன் நம் இந்திய தேசம் சுதந்திரம் பெற்று விட்டது என்பதை பங்கு மக்களுக்கு அறிவித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து சல்யூட் அடித்து இனிப்பு வழங்கி பங்கு விழா, அன்னையின் விண்ணேற்பு விழா மற்றும் இந்திய சுதந்திர முதல் விழாவை சிறப்பித்த குரு கப்பேல் என்பது குறிப்பிடத்தக்கது.

20260713230908537.jpeg
அன்றில் இருந்து இன்று வரை ஆகஸ்ட் 15 காலை மறைமாவட்ட ஆயர் அல்லது முதன்மை குரு தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய உரை நிகழ்த்தி பின் அன்னையின் விண்ணேற்பு விழா மற்றும் பங்கு ஆண்டு விழா என்று முப்பெரும் விழா ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது.
இந்திய நாட்டின் சுதந்திர தினமும் அன்னை மரியாளின் விண்ணேற்பு விழா ஒவ்வொரு வருடமும்

20260713231039690.jpeg

சிறப்பிக்கபட்டுவருகிறது. இந்த ஆலயம் இந்த வருடம் 188 வது ஆண்டு விழாவை சிறப்பிக்கிறது.
இந்த வருட ஆண்டு விழா மூவர்ண கொடியேற்றத்துடன் துவங்கி
அன்னையின் விண்ணேற்பு விழா, பங்கின் ஆண்டு விழா சிறப்பிக்கப்படுகிறது.