தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

ஜான்வி கபூர்

20260714125929485.jpg

சற்குணம் இயக்கத்தில் ஒரு தமிழ் வெப் தொடரில் ஜான்வி கபூர் நடிக்கிறார். தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் யாரும் கண்டுக்கல போல தெரியுது !!

கயாடு லோஹர்

2026071412531788.jpg

அஜித் குமாரின் 64-வது படத்தில் அவருக்கு ஜோடியா கயாடு லோஹர் ஒப்பந்தமாகி இருக்கிறார். 55 வயது ஹீரோ 25 வயது கதாநாயகி என்று விமர்சனம் வந்திருக்கிறது.

திரிஷா

20260714123619643.jpg

நடிகை திரிஷா தனது இன்ஸ்ட்டரகிரம் பக்கத்தில் "இந்த வயதிலும் இவ்வளவு நாடகத்தனமாக இருப்பது சங்கடத்தை தருகிறது. போய் பணத்தை சம்பாதியுங்கள் அமைதியைத் தேடுங்கள் நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். முடிந்தவரை நல்லது செய்யுங்கள் இதுதான் உங்களுக்கான அனைத்தும் சிறப்பாக அமையும் காலகட்டம் " என்று சொல்லி இருக்கிறார். இதற்கும் விஜய் மனைவி விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றதுக்கும் சம்பந்தமில்லை என்று நம்புவோமாக !!

துஷாரா விஜயன்

20260714165854166.jpg

" நான் இரண்டு வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவரை முதல் முதலில் துபாயில் தான் பார்க்கிறேன் .நாங்கள் இருவரும் இளையராஜா சாருடைய இசை மூலமாகத்தான் கனெக்ட் ஆனோம். ஆனால், அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு நிறைய விஷயங்கள் பேசினோம். அவர் என்னுடைய எல்லா விஷயங்களையும் பொறுத்துக் கொள்கிறார். அவர் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன்"என்று சஸ்பென்ஸோடு பேட்டி தந்திருக்கிறார் நடிகை துஷாரா விஜயன்.

ருக்மணி வசந்த்

20260714125040262.jpg

கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களில் நடித்துவரும் நடிகை ருக்மணி வசந்த் தற்போது மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

மல்லிகா ஷெராவத்

20260714170431586.jpg

நடிகை மல்லிகா," ஷெராவத் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு என் மீது காதல் வந்திருக்கிறது. நான் பொய் சொல்லவில்லை .என்னிடம் செல்போனில் இருந்திருந்தால் அவர் எனக்கு அனுப்பிய வீடியோக்களை காட்டி இருப்பேன். நான் அவருடன் இணைந்து பாரர்ட்டி கொண்டாடிய வீடியோக்கள் அவை "என்று ஒரு ரியாலிட்டி ஷோவில் சொல்லி இருக்கிறார் நடிகை.

ராதிகா

20260714185746982.jpeg

இப்போதுள்ள சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்களின் கண்ணோட்டத்தில் காதல்,திருமணம் வாழ்க்கை மீதான புரிதலே வேறு மாதிரியாக இருக்கிறது. இப்போதுள்ள தலைமுறையினர் சுதந்திரமாக இருக்கிறார்கள். முடிவுகளை தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு "போகப் போகத் தான் தெரியும்" என்று பாட்டு பாடி அறிவுரை வழங்கி இருக்கிறார் நடிகை ராதிகா.