
விஜய்க்கு எதிராக தனுஷ் வியூகம் ?விகடகவியார்தனுஷ் தீவிர அரசியல் ஈடுபடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. .தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் என்று மாற்றி இருக்கிறார். முதல் கட்டமாக கோவை மண்டலத்தில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி ,கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ,கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி ,கோவை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி என ஐந்து தொகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கவும் நற்பணி இயக்கம் தொடங்கவும் முடிவு செய்து சென்ற வாரம் நடிகர் தனுஷ் கோவை மண்டலத்தில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து மக்கள் பிரச்சினையை முன்னெடுத்து போராட்டம் நடத்துவது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட தனது ரசிகர்களை முடுக்கிவிட்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் அரசியல் களம் திமுக அதிமுக என்று இருந்ததை மாற்றி விஜய் தனுஷ் என்று கொண்டு செல்வது என்பது தனுஷ் திட்டம் தனுஷ் கடைசியாக மூன்று படங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு தீவிர அரசியல் இறங்குவது என்பது திட்டம். தனது கடைசி படத்தை இயக்கும் பொறுப்பை வெற்றிமாறிடம் ஒப்படைக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்தப் படத்தில் அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாக இருக்குமாம். விஜய் கட்சி விமர்சனம் செய்வதற்கு என்று பிரத்தியோகமாக ஒரு டிஜிட்டல் படை அமைத்து அந்தப் படை இந்த ஆட்சியை ஏகத்துக்கு கலாய்க்குமாம் .2029- இல் தனுஷின் கடைசி படம் வெளியாகும் .பாராளுமன்றத் தேர்தலில் தனுஷ் கட்சி போட்டியிட இப்போதே தயாராகிக் கொண்டு வருகிறார்களாம் .

Leave a comment
Upload