தொடர்கள்
ஏக்கம்
ஊட்டி பாரம்பரிய திரையரங்கம் - ஸ்வேதா அப்புதாஸ்

தமிழ்நாட்டில் இயங்கி வந்த பல பழைய திரையரங்குகள் மூடப்பட்டு காணாமல் போய்விட்டன.

20260712210927410.jpeg

இதில் ஊட்டியும் விதிவிலக்கல்ல என்பது உண்மை.
ஊட்டி நகரில் மட்டும் பத்து திரையரங்குகள் இயங்கி வந்தன அதில் ப்ளூமவுண்டன் மற்றும் கார்னேஷன் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன பின்னர் ஏ டி சி, கணேஷ், கெம்பேகவுடா, லிபெர்ட்டி, அலங்கார், ரோகிணி, ஆகிய திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.
இதில் கணபதி தியேட்டர் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது.
அதில் மிக முக்கியமாக தமிழக ஆளுநர் அறங்காவலராகவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எட்டு அறக்கட்டளை உறுப்பினர்களுடன் 140 வருடத்தை கடந்து இயங்கி கொண்டிருக்கும் ஒரு பழமைவாய்ந்த பாரம்பரியமிக்க திரையரங்கு தான் அசெம்பிளி ரூம்ஸ் என்று சொன்னால் மிகையாகாது.
20260712204432446.jpeg

இப்படிப்பட்ட திரையரங்கு இந்தியாவிலே எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த கால ஊட்டி வாசிகள் ஆங்கிலம் கற்றுகொண்டது இந்த திரையரங்கில் பார்த்து ரசித்த ஆங்கில படங்களால் தான்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் சனிக்கிழமை ஞாயிற்று கிழமைகளில் மதியம் 2. 30 காட்சி மாலை 6 மணி காட்சி மற்றும் இரவு 8. 30 காட்சி படத்தை தவறாமல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.

நாம் கூட இந்த அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் பல ஆங்கில படங்கள் பார்த்து ரசித்த காலங்கள் உண்டு.

20260712211313397.jpeg
Bible, Benhur, History of the world, Rojarmoor 007, bulet Train, Omen, Gandhi, The Passage to India, என்று பட்டியல் போய் கொண்டே இருக்கும்.
பின்னர் தமிழ், மலையாளம், ஹிந்தி படங்கள் திரையிடப்பட்டன.
இந்த தியேட்டர் 1986 ஆம் ஆண்டு நூற்றாண்டை கொண்டாடியது.
திரையரங்கு புதுப்பிக்க பட்டு புது பொலிவை பெற்றது.
ஒரு நீண்ட வரலாற்றை உள்ளடக்கிய இந்த திரையரங்கு 1886 ஆம் ஆண்டு ஒரு மக்கள் கூடும் பொழுது போக்கு அரங்காக துவக்கப்பட்டது தான் இந்த அசெம்பிளி ரூம்ஸ்.
இங்கு முக்கிய கூட்டங்கள் பால் டான்ஸ் மற்றும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அரங்கேறின.
இது 'மஸ்கிட்டோ ரூம் என்று அழைக்கப்பட்டது'.

1922 ஆம் ஆண்டு லார்ட் மற்றும் லேடி வெலிங்டன் 50ஆயிரம் ரூபாய்க்கு இந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கி உள்ளூர் மக்களுக்காக ஒரு பொழுதுபோக்கு அரங்காக மாற்றினார்கள்.
20260712204713737.jpeg

பின்னர் 1931 ஆம் ஆண்டு திரையரங்காக மாற்றப்பட்டு முதல் பேசும் படமான காளிதாஸ் திரையிடப்பட்டதாம்.
அதன் பின் ஆங்கில படங்கள் தான் திரையிடப்பட்டன.
1974 ஆம் வருடம் இந்த திரையரங்கு புதுப்பிக்க பட்டுள்ளது.
2012 முதல் 2015 வரை Hill Area Development Project மூலம் புதுப்பிக்க பட்டு டிஜிட்டல் ப்ரொஜெக்டர் மற்றும் டால்பி சவுண்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு இங்கு உபயோகத்தில் இருந்த பழைய 1950 ஆம் வருட Bauer projectors, பழைய ரீல் பிலிம்கள் என்று அனைத்தும் ஒரு அருங்காட்சியகமாக வைக்கப்பட்டு 'Assems Cine Museam' என்று இன்றும் காட்சி படுத்த பட்டிருக்கிறது.

20260712204811796.jpeg
பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இன்று வரை 115 கலெக்டர்கள் நீலகிரி மாவட்டத்தை நிர்வகித்துள்ளனர். இது வரை எந்த கலெக்டரும் அசெம்பிளி ரூம் திரையரங்கை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் இறங்கியதில்லை தற்போது உள்ள கலெக்டர் லட்சுமி பவ்வியா தண்ணீரு இந்த திரையரங்கை தனியாருக்கு குத்தகை விட முடிவு செய்துள்ளார்.
தனியாருக்கு தாரைவார்த்து விட்டால் இதன் பாரம்பரியம் காணாமல் போய்விடும் அறக்கட்டளை மறைந்து போய்விடும்.
இதை தனியார் குத்தகைக்கு விடக்கூடாது என்று போராடுகிறார் நீலகிரி ஆவண காப்பாளர் தர்மலிங்கம் வேணுகோபால்.
20260712205159927.jpeg
வேணுகோபாலியிடம் பேசினோம்,
" ஊட்டியின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் அசெம்பிளி ரூம்ஸ் தியேட்டர் தனியாருக்கு விற்க கூடாது அதுவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் அறக்கட்டளை இதை செய்வது சரியில்லை.
இந்தியாவில் எங்குமே இல்லாத 140 வருடம் பழமையான ஒரு திரையரங்கத்தை தனியாருக்கு தாரைவார்ப்பது எங்களின் இதயத்தை வெடிக்க செய்கிறது.
இந்த கட்டிடம் ஒரு பாரம்பரிய சின்னம் 2012 தமிழ் நாடு பாரம்பரிய கமிஷன் சட்டப்படி இந்த கட்டிடத்தை மாற்றவோ விற்கவோ முடியாது.
சுதந்திரத்திற்கு முன் இயங்கி வந்த ஒரு சிற்றுண்டி சாலை 1970 ல் மூடப்பட்டது.
மற்ற ஒரு சிற்றுண்டி சாலையும் மூடப்பட்டது.
ஸ்டேட் பேங்க் ஏ டி எம் இடம்பெற இருக்க அதும் நிறுத்த பட்டது.
பொதுமக்களின் எதிர்ப்பை ஏற்று போலீஸ் உதவி மையம் அமைக்க முடியாமல்போனது. இவையெல்லாம் இதன் பாரம்பரியத்தை காப்பாற்ற மேற்கொள்ள பட்ட நடவடிக்கைகள்.
1923 ஆம் வருடம் பொது மக்களின் பணஉதவியால் துவக்கப்பட்ட ஒரு பொழுது போக்கு அரங்கு.
1931 ஆம் ஆண்டு மீண்டும்20260712205307641.jpeg பொது மக்களின் 30 ஆயிரம் பண உதவியால் திரையரங்கு துவக்கப்பட்டது


ஆங்கில புலமை பெற ஆங்கில படங்கள் திரையிடப்பட்டன.
இது வரை அறக்கட்டளை சிறப்பாக இந்த திரையரங்கை நிர்வகித்து முன்னேற்றத்திற்கு வாகனம் பார்க்கிங் மூலம் வருமானமும் உண்டு.
இந்த அறக்கட்டளை தனியாருக்கு தாரைவார்ப்பது வேடிக்கையாக உள்ளது.
அருமையான சினி மியூசியம் என்று உருவாக்கி பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு வந்து ஏன் இப்பொழுது இந்த முடிவு.
நான் கடந்த மாதம் மாவட்ட நீதி மன்றத்தில் தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.
இந்த அறக்கட்டளை குழுவால் தொடர முடியவில்லை என்றால் புதிய அறக்கட்டளை உருவாக்க வேண்டியது அவசியம்.
இந்த மாவட்ட ஆட்சியர் செய்வது சரியானதல்ல ஊட்டி நகரில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வேலையை கலெக்டர் செய்து வருவது வருத்தமான விஷயம் என்று கூறினார்.

கடந்த நாற்பது வருடமாக பணியாற்றி வரும் அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கு அறக்கட்டளை செயலர் ராதாகிருஷ்ணன் தர்மலிங்கத்தை சந்தித்து பேசினாம்,

20260712205351346.jpeg
" அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கு ஊட்டியின் லேண்ட் மார்கில் அமைந்துள்ளது.
1886 யில் இருந்து பல அவதாரங்களை எடுத்து வந்துள்ளது பால் ரூம், ஸ்கேட்டிங் ரிங், போலீஸ் ஸ்டேஷன் ட்ராமா ஹால் பின் மூவி ஹால் பின் டாக்கி ஹாலாக மாறி ஆங்கில படங்கள் தான் திரையிடப்பட்டு பின் தமிழக அரசின் உத்தரவால் தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.
தற்போது ஒரு புதிய அவதாரை எடுக்கும் முயற்ச்சியில் உள்ளது.
இந்த இடம் 1ஏக்கர் .09 சென்ட் நிலத்தில் உள்ளது.
ஊட்டி கார்டன் அருகில் பிரைம் இடத்தில் இருப்பதால் இதை உயர்த்தும் எண்ணம் இருந்தாலும்

20260712205442245.jpeg
தற்போது இதை மேம்படுத்த போதிய வருமானம் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியார் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டியில் மாலை 6 மணிக்கு மேல் உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் எந்த பொழுது போக்கும் இல்லை இதை யோசித்து தான் ஒரு சிறந்த பொழுது போக்கு இடம் உருவாக்கும் எண்ணம் தோன்றியதின் விளைவு தான் இந்த ஐடியா !.


தற்பொழுது 6k ப்ரொஜெக்டர் வந்து விட்டது.
நாம் 2k தான் யூஸ் செய்கிறோம். மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் சினிமா என்பது ஒரு புதுமையான நேரடி அனுபவத்தை கொடுக்கிறது அது போல இங்கும் உருவாக வேண்டுமென்று முன்னாள் ஆளுநரின் ஒப்புதலின் படி அறக்கட்டளை குழு ஆராய்ந்து இந்த குத்தகை முடிவை எடுத்துள்ளோம். இதில் அசெம்பிளி ரூம்ஸ் பழமை மற்றும் பாரம்பரியம் மாறாது.மிக முக்கிய சினிமா நிர்வாகத்தினர் குத்தகை எடுக்க முன் வந்துள்ளனர் பழமை, பாரம்பரியம் மாறாமல் இது பெரிய நவீன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இது விரைவில் நடக்கும் என்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் ஆர். ஏ. தாஸ் கூறும்போது,

20260712212827828.jpeg
" ஊட்டியின் பழமை அடையாளம் அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கு அதை தனியாருக்கு குத்தகை கொடுத்துவிட்டால் கட்டாயம் அதன் பழமை மாறிப்போகும்.
தற்போது உள்ள அறக்கட்டளை எதுவும் கேட்க முடியாது உரிமையும் கொண்டாட முடியாமல் போய்விடும்.
ஆங்கிலத்தை வளர்த்த இந்த திரையரங்கு அதன் முக்கியத்துவத்தை இழந்து விடும்.



ஒரு சினிமா மற்றும் ஷாப்பிங் மால் போல் வந்தால் பழமை பாரம்பரியம் பறிபோவது உறுதி.
நம் கையை விட்டு அசெம்பிளி ரூம்ஸ் போய்விட்டால் மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை ".என்று கூறினார் வருத்ததுடன்.


ஊட்டியின் பாரம்பரிய மற்றும் பழமையான சின்னமாக திகழ்ந்து வரும் அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கு கனவாகி போனாலும் ஆச்சிரிய யப்படுவதற்கில்லை அதற்கு காரணமாகி போவார் இன்றய மாவட்ட ஆட்சியர் என்று கூறுகிறார்கள் ஊட்டி வாசிகள்.