
சிவனின் 5 பிரதான தலங்களில் அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை .
பெளர்ணமி கிரி பிரதட்சணம் நடக்குமிடம் இது.
முன்பெல்லாம் உள்ளூர் மக்கள் மட்டுமே பிரதட்சணம் செய்து வந்தனர்.
பெளர்ணமி நாட்களில் பகலில் மட்டுமே.
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம என்பது யோகிஸ்ரீராம் சூரத் குமார் என்கிற விசிறி சாமியாரின் தாரக மந்திரம்.
விசிறி சாமியார் திருவண்ணாமலை கோயில் அருகிலுள்ள சன்னதி தெருவில் வசித்து வந்தார்.
நான் அவரைப்பார்க்கச் சென்றேன்.
வீட்டுக்குள் இருந்த படியே நீ போய் அண்ணாமலையை பார்...
என்னைப்பார்க்காதே என அனுப்பிவிட்டார்.
அக்டோபர் 1985ல் சந்திரகிரகணம் வந்தது.
என் நட்சத்திரத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றதால் கண்முழித்து காயத்ரி ஜெபம் செய்து கிரகணம் விட்டதும் அதிகாலை சுமாராக 3.30 மணிக்கு அண்ணாமலையார் கோவிலுக்கு போனேன்.
நான் போகும் போது விசிறி சாமியார் கோயிலில் இருந்து இறங்கி வர அவரைப் பார்த்து நான் நிற்க, உனக்கு ஏற்கனவே சொல்லி விட்டேன்.
என்னைப் பார்க்காதே ....அண்ணாமலையை பார் என அனுப்பி விட்டார்.
என்னால் மறக்க முடியாத நிகழ்வு இது.

Leave a comment
Upload