தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : விகடகவி கடந்து வந்த பாதை - மரியா சிவானந்தம்

Comment : ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விகடகவியாருக்கு வாழ்த்துக்கள்.மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.👍👌🙏🙏

Chandra Ramakrishna , Chennai.

Heading : இளையராஜாவின் ரசிகன்--மகா

Comment : இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா தான்.👍👍🌺🌺

Chandra Ramakrishna , Chennaiவு

Heading : வாழ்க்கை இது தான்

Comment : மனிதனுக்கும் மனிதனாக இருப்பதற்கும் இடையிலான மிக நீண்ட பயணம்தான் வாழ்க்கை என்ற வரிகள், ஆஹா... சூப்பர்ப்! ஆனால், இதை அறியாமல் ஒருசிலர் ஆட்சி நிர்வாகம், அதிகாரத்திலும் கணவன்-மனைவி இடையிலான தன்னிலை மறந்து ஆட்டம் போடுகின்றனர்.

மானசா குருமூர்த்தி, சிங்கப்பூர்

Heading : வாழ்க்கை இது தான்

Comment : சென்னைக்கு விடுமுறையில் வந்தபோது, விகடகவியை படித்து ரசித்தோம். அதிலும், ஹாங்காங்கில் ₹239 கோடியில் சீக்கிய கோயில் பற்றி படித்தும், வீடியோ பேட்டியை கேட்டு பிரமித்தோம். அதுவரை சீக்கிய கோயிலுக்கு செல்லாத நாங்கள், தி.நகரில் உள்ள கோயிலுக்கு சென்று மகிழ்ந்தோம். மிக்க மகிழ்ச்சி ராம்!

கிருஷ்ணகுமார், ரவீந்திரநாத், அலகாபாத்

(சென்னைக்கு வரும் போது மட்டுமல்ல..விகடகவி ஆன்லைனில் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் படிக்கலாம். உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் விகடகவியை படியுங்கள். பகிருங்கள் - ஆ.குழு)

Heading : வாழ்க்கை இது தான்

Comment : என்னாப்பா... வெளிநாட்டுல பலகோடி ரூபாய்ல இந்து, சீக்கிய கோயில் கட்டி, அங்கு எல்லா இந்து கடவுளை வெச்சு வழிபடறாங்க. ஆனால், நாங்க இந்துக்களுக்கு எதிரி இல்லேன்னு கூவிக்கினே எல்லா இந்து கோயில்களையும் இடிக்கிறாங்கனுங்க. வழிபாடுகளை கேலிக்கூத்தா மாத்தறாங்க. இதான் திராவிட மாடலா? நல்லாயிருக்கிற பேண்ட்டை கிழிச்சு துண்டு 'ஸ்டைல்'னு சொல்ற மாதிரி!

முனுசாமி, ராஜசேகர், வண்ணாரப்பேட்டை

Heading : குப்புசாமி மாமாவும் புதினா சட்னியும்- வேங்கடகிருஷ்ணன்

Comment : ஃபேஷ், பேஷ்... விகடகவியில் மீண்டும் கல(கல)க்க வந்துவிட்டார், குப்பு மாமா! இனி புதினா சட்னி போல் தௌசன் வாலா சரவெடிதான்... கலக்கறே வெங்கட்! எங்காத்துக்கு ஒருநா குப்பு மாமாவை வரச்சொல்லி பரிமளாகிட்ட சொல்லுங்கோ!

ராதா வெங்கட், மாயா குப்புசாமி, ஆலப்பாக்கம்

Heading : சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

Comment : நடிகை கீர்த்தி சுரேஷுடன் மாமன்னன் படத்தில் ஸ்டாலின் நடித்து முடித்துவிட்டாரா?! என்னங்காணும்... குடும்பத்திலும் அரசியலிலும் குழப்பத்தை ஏற்படுத்தவா அல்லது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே சிண்டு முடியவா அல்லது கீர்த்தி சுரேஷுக்கு வயசாகிடுச்சா?!

அனுராதா ரமணன், திருச்சி

(ஆன்லைன் பத்திரிகை என்பதால் உடனடியாக பிழையைத் திருத்தியிருக்கலாம். ஆனால் உங்கள் கடித சுவாரஸ்யம் போய் விடுமே என்று அதை திருத்தாமல் விட்டுவிட்டோம். இனி இப்படி பிழை நேராமல் உஷாராக இருப்போம்.... ஆ.குழு)

Heading : ஆரூர்தாஸ் -நினைவலைகள் - மரியா சிவானந்தம்

Comment : தமிழ்த் திரையுலகில் அன்றைய காலகட்டத்தில் அழுத்தமான வசனங்கள் மூலம் மக்களின் மனங்களில் கோலோச்சி மறைந்த ஆரூர்தாஸுக்கு, மரியா சிவானந்தத்தின் புகழஞ்சலி கட்டுரை மிக சிறப்பு!

ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை

Heading : தமிழாய் நம்முடன் வாழும் அவ்வை நடராஜன் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : அவ்வை நடராஜனுக்கு வழங்கப்பட்ட அத்தனை பதவிகளும் பொறுப்புகளும் அவருக்கு அளித்தது தமிழ். தனது தந்தையை போலவே இவரும் தமிழில் புலமை பெற்று தமிழ் காதலனாய், தமிழ் காவலனாய் வலம்வந்தவர் என்ற வரிகள் மிகச் சரியே. அவரது மறைவுக்கு சீனிவாசின் கட்டுரை மலரஞ்சலி.

ரேணுகா ஹரி, பெங்களூரு