தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல் - தமிழக ஆளுனருடன் ஒரு சந்திப்பு

20221103070244336.jpeg

`மிஸ்டர் ரீல் ஆளுநரை பார்க்க போன போது தான் சட்ட அமைச்சர் ரகுபதி அவரை சந்தித்து விட்டு நிருபர்களிடம் "கையெழுத்து போட்டு தரேன் என்று சொல்லி இருக்கிறார். அரசியல் சட்டத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்க இடமில்லை" என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் சட்ட அமைச்சர்.

`மிஸ்டர் ரீல் ஆளுநர் சந்திக்க உள்ளே போனபோது ஆளுநரின் பத்திரிகை ஆலோசகர் முரசொலியில் ஆளுநர் பற்றி பெருமையாக எழுதியிருந்த கட்டுரையை வரி வரியாக முதலில் தமிழில் பிறகு ஆங்கிலத்தில் அவருக்கு சொல்ல ஆளுநரும் ஆர்வமாக அடுத்து அடுத்து என்று கேட்டுக் கொண்டிருந்தார் முரசொலி முடியட்டும் என்று மிஸ்டர் ரீல் காத்திருந்தார்.

ஒரு வழியாக படித்து முடித்ததும் மிஸ்டர் ரீல் ஆளுநரை பார்த்து "இந்த ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவில் என்ன பிரச்சனை பேசாம நீங்க கையெழுத்து போட்டு தந்திடலாம் இல்ல உங்களை எல்லோரும் கண்டித்து அறிக்கை வெளியிட ஆரம்பிச்சிட்டாங்க "என்று சொல்ல நீங்க இப்படி சொல்றீங்க ரம்மி ஆடுவோர் சங்கம் நாங்க மொத்தம் 38 ஆயிரத்து 766 உறுப்பினர்கள் இருக்கிறோம். எங்க சங்கத்தோட சொத்து 14 ஆயிரத்து 38 ஆயிரம் கோடி நீங்க மசோதா கையெழுத்துப் போட்ட அடுத்த நிமிஷமே செல்லாது செல்லாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி தடை கொடுத்து விடுவார் அவரு எங்க சங்க உறுப்பினர் தான் என்று சொல்கிறார்கள்" என்று சொல்ல

மிஸ்டர் ரீல் ஆளுநரை ஒரு மாதிரி பார்க்க நீங்க நம்பல இப்ப என்ன வந்து பாத்துட்டு போனாரு சட்ட அமைச்சர் ரகுபதி அவர் என்கிட்ட ஒரு தகவல் சொல்றாரு இதே சங்கம் உங்க கட்சியோட பாராளுமன்ற தேர்தல் செலவு சட்டமன்றத் தேர்தல் செலவு மாநகராட்சி பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் செலவு உள்பட எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம். உங்க அரசாங்கத்துடன் நிதிநிலைமையை சரி செய்ய நாங்க ஹெல்ப் பண்றோம் மசோதாவை கண்டுக்காதீங்க என்று அறிவாலயத்தில் வந்து பேசிவிட்டு போய் இருக்கிறார்கள் எங்க கட்சியோட மகளிர் அணி உறுப்பினர் எங்க வீட்டு ஃபிரிட்ஜ் எங்க வீட்டு டிவி என் பையன் காலேஜ் பீஸ் எல்லாமே ஆன்லைன்ல ரம்மி தான் எங்க குல தெய்வமே ரம்மி தான் சொல்றாங்க என்று சொல்லிவிட்டு தோழமைக் கட்சி டார்ச்சர் தாங்கல எப்படியாவது கையெழுத்து போட்டு அனுப்புங்க என்று கையெடுத்து கும்பிட்டு போகிறார் என்று ஆளுநர் சொல்ல

அப்போது மிஸ்டர் ரீல் அப்ப இந்த மசோதாக்கு கையெழுத்து போட மாட்டீங்களா என்று கேட்க போடுவேன் ஆனால் எப்போ என்று எனக்கே தெரியாது என்றார் ஆளுநர் அப்போது மிஸ்டர் ரீல் நீங்க மொத்தம் 21 மசோதாக்களில் கையெழுத்து போடாம பெண்டிங் வச்சிருக்கதா அமைச்சர் சொல்லிட்டு போறாரே என்று கேட்க அதற்கு ஆளுநர் நான் 21 மசோதா தான் பெண்டிங் கேரளா ஆளுநர் 1216 மசோதா கையெழுத்து போடாம பெண்டிங் வச்சிருக்கார் அதுல 1106 மசோதா கவர்னர் பதவி வேண்டாம் வேஸ்ட் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டு அனுப்பிய மசோதா தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்னும் மோசம் அவங்க அந்த மாநிலம் பக்கமே போறது கிடையாது பாண்டிச்சேரி இருப்பாங்க அப்படி இல்லன்னா தமிழ்நாட்டுல ஏதாவது சபா கச்சேரி இல்ல மாரியம்மன் கூழ் ஊத்துற பங்க்ஷன் இப்படி பிஸியா இருக்காங்க என்றார் ஆளுநர்.

அப்போது மிஸ்டர் ரீல் எல்லா ஆளுநரும் முதலமைச்சர் பேச்சைக் கேட்க மாட்டேங்கறீங்க எதிர்த்து பேசறீங்க அது ஏன் என்று கேட்க தமிழக முதலமைச்சரை நான் எப்போதும் மதித்து மரியாதையாக நடத்துகிறேன் பொது மேடையில் பேசும்போது கூட தமிழ்நாடு வளர்ச்சிக்கு திட்டங்களில் முதன்மை மாநிலமாக இருக்கிறது என்று பாராட்டி பேசி இருக்கிறேன் என்று ஆளுநர் சொல்ல அதெல்லாம் சரி இந்தி மொழிக்கு ஆதரவா நீங்க பேசுறதா முரசொலியில் எழுதுகிறார்களே என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு நான் வட கிழக்கு மாநிலங்களில் தமிழ் இரண்டாவது மொழியாக படிக்க வேண்டும் என்று சிபாரி செய்கிறேன் அதை ஏன் முரசொலி பிரசுரிக்க மறுக்கிறது என்று மிஸ்டர் ரீலிடம் திருப்பிக் கேட்டார் ஆளுநர்.

அப்போது மிஸ்டர் ரீல் அது என்ன வடகிழக்கு மாநிலங்கள் சமீபத்தில் வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்களே உத்திரபிரதேசத்தில் தமிழ் இரண்டாவது மொழியாக படிக்கச் சொல்லி பேச வேண்டியதுதானே என்று ஏதோ பெரிய பாய்ண்ட் பிடித்ததாக மிஸ்டர் ரீல் சொல்ல அதற்கு ஆளுநர் இதனால் உத்திர பிரதேஷ் முதல்வர் சங்கடப்படுத்த சொல்லி நீங்கள் என்னை சதாய்க்கிறது தெரிகிறது. உத்திரபிரதேச முதல்வர் இதை எதிர்க்க மாட்டார் அகிலேஷ் யாதவ் இதைக் கண்டித்து உண்ணாவிரதம் பேரணி என்று நடத்துவார் இதனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் சங்கடம் அதனால்தான் வடகிழக்கு மாநிலங்களை தேர்ந்தெடுத்தேன் என்று ஆளுநர் சொல்ல

சரி வடகிழக்கு மாநிலம் அரசாங்கம் உங்கள் கோரிக்கையை ஏற்று தமிழ் படிக்க சம்மதம் தெரிவித்தார்களா என்று மிஸ்டர் ரீல் கேட்க வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பலர் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சாவு கிராக்கி கஸ்மாலம் போன்ற முக்கியமான கலைச் சொற்கள் நன்கு தெரிந்திருக்கிறது என்று அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள் நான் அப்போது தமிழ் பேசத் தெரிந்தால் மட்டும் போதாது தமிழ் எழுத தெரிய வேண்டும் என்றேன். அப்போது அவர்கள் இவ்ளோ பேசுற நீங்க உங்களுக்கு எழுத படிக்க தெரியுமா தமிழ் என்று கேட்டார்கள் அப்போதே நான் சபதம் எடுத்தேன் தமிழ் எழுத படிக்க தெரிந்து கொள்வது என்று இது பற்றி தமிழக முதல்வரிடம் நான் கேட்டபோது அவர் சிறந்த தமிழாசிரியர் ஒருவரை அனுப்பி வைப்பதாக சொல்லி அப்படி அனுப்பி வைத்தார்.

அவர் பெயர் வீரமணி திராவிட கழகம் என்று கார்ப்பரேட் கம்பெனியின் முதலாளி அவர் பல்லாயிரம் கோடி சொந்தக்காரர் ஆனால் எளிமையாக இருக்கிறார் நான் அவரிடம் தான் தமிழ் கற்றுக் கொண்டேன் தினந்தோறும் அவர் எனக்கு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை அர்த்தத்துடன் சொல்லித் தருகிறார் என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் மிகப்பெரிய பகுத்தறிவுவாதி கடவுள் எதிர்பாளர் ஆச்சே அவர் எப்படி 4000 திவ்ய பிரபந்தம் கந்த சஷ்டி கவசம் எல்லாம் சொல்லித் தருவார் என்று கேட்க நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது நீங்கள் தான் வீரமணியா அமலாக்கத்துறை வருமானவரித்துறை எல்லாம் உங்கள் வீட்டு விலாசம் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று மட்டும் சொன்னேன். அவ்வளவுதான் என்றார் ஆளுநர். ஆளுநர் சரி அதை விடுங்க மசோதாக்கள் எல்லாம் கையெழுத்து போட்டு அனுப்பி விடுங்கள் என்று மிஸ்டர் ரீல் சொல்ல நீங்கள் எல்லோரும் பாவம் ஆளுநர் என்றால் வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்னை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அதிகாரம் எல்லாம் அதாவது ஆளுநரின் அதிகாரம் எல்லாம் அமித்ஷா என்பவரிடம் குவிந்து கிடக்கிறது. இவ்வளவு அதிகாரங்களை எல்லாம் வைத்துக் கொண்டு உங்களுக்கு வெயிட் தாங்காது என்று சொல்லி எல்லாவற்றையும் எங்களிடமிருந்து வாங்கிக் கொண்டு விட்டார். அவர் எப்பதாவது ஒரு சில அதிகாரங்களை ரெண்டு மூணு நாள் வைத்துக்கொண்டு பிறகு திருப்பித் தாருங்கள் என்பார். அப்போது தான் நான் அதிகாரத்தை பயன்படுத்தி கையெழுத்து போட முடியும். இதுதான் உண்மை நிலவரம் என்று ஆளுநர் சொல்ல அமித்ஷா அவ்வளவு அதிகாரம் உள்ளவரா என்று மிஸ்டர் ரீல் கேட்க பிரதமரே அவர் சொன்னால்தான் கையெழுத்து போடுவார் இதுதான் உண்மை நிலவரம் என்று சொல்ல அப்புறம் எதற்கு அண்ணாமலை அடிக்கடி வந்து உங்களிடம் திமுக ஆட்சி மீது நடவடிக்கை எடுங்கள் என்று மனு கொடுக்கிறார் என்று மிஸ்டர் ரீல் கேட்க அப்போது ஆளுநர் மறுபடியும் நான் ஒரு உண்மையை சொல்லவா என்று கேட்க மிஸ்டர் ரீல் பொய் சொல்லாமல் உண்மையை சொல்லுங்கள் என்று சொல்ல அந்த மகஜரை நான் பிரித்துக் கூட பார்க்க முடியாது அண்ணாமலை ராஜ் பவனுக்கு வெளியே ஆளுநரிடம் என்ன மாதிரி புகார் கொடுத்து இருக்கேன் என்று சொல்லுவார் அது டிவி பாத்துட்டு தெரிந்து கொள்வேன் என்று பரிதாபமாக சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் ஆளுநர் உண்மையில் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான் போலிருக்கு என்று யோசித்தபடியே வெளியே வந்தார்.