தொடர்கள்
விகடகவியார்
ஹே ராம் .... அயோத்தியில் நம்பிக்கை துரோகம் - விகடகவியார்

20260603085213102.jpeg

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு அரசியலில் பேசும் பொருளாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் பிரதமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

மஹிபால் சிங் ஜனவரி 2021 முதல் மே 2022 வரை ராம் மந்திர் தீர்த்த சே அறக்கட்டளையின் கணக்கு பொறுப்பாளராக இருந்தார்.

ராமர் கோயிலுக்காக பெறப்பட்ட காணிக்கை எண்ணும் மையத்தில் அவர் பணியில் இருந்தார்.

' ரத்தினேஷ் சதுர்வேதி மற்றும் சுகன்திப் ஆகிய இரண்டு வங்கி அதிகாரிகள் வருவார்கள். 14 சிறுவர்கள் நோட்டுக்களை பிரிப்பார்கள்.

நான் அதை கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

வ்வொரு நாளும் அந்த சிறுவர்கள் அதிக நோட்டுக்களை பேக் செய்து எடுத்து செல்வார்கள்.

வவுச்சரில் குறைவாக எழுதுவார்கள்.

அவர்கள் எடுத்துச் செல்லும் எண்ணிக்கைக்கும் வவுச்சரில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிக்கைக்கும் எப்போதும் வித்யாசம் இருக்கும் இதை நான் கண்டுபிடித்தேன்.

ஒரு நாள் சந்தேகப்பட்டு பெட்டியை திறக்கச் சொல்லி நான் எண்ணினேன். அவர்கள் கணக்கில் காட்டாமல் 5 லட்சம் ரூபாய் எடுத்துச் செல்வது தெரிந்தது.

இதுகுறித்து கோபால் ராவ் மற்றும் சம்பத்ராய் பைஜீ ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன்.

இது நடந்தது டிசம்பர் 2021 சம்பத்ராய் பைஜி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர்.

என் குற்றச்சாட்டை அவர் பெரிய அளவு கண்டு கொள்ளவில்லை. அதற்கு பதில் என்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு எனக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்தார்.

அதன்பிறகு நான் அங்கு செல்வதை நிறுத்தி விட்டேன் "என்று சொல்லி இருக்கிறார்.

அங்கிருந்து சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டன.

இன்னும் சொல்லப் போனால் இந்த திருட்டு 2018 முதல் நடப்பதாக சொல்கிறார்கள். பண மோசடி விஷயம் வெளிவந்ததும் சம்பத்ராய் அறக்கட்டளை பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.

ராமர் கோயில் தரிசன பொறுப்பாளராக இருக்கும் கோபால் ராவ் என்பவரும் ராஜினாமா செய்திருக்கிறார். இவர்கள் இருவருமே வி எச் பி எனப்படும் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளாக இருந்தவர்கள்.

பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் ராமஜன்ம பூமி இயக்கம் பங்கு மிக முக்கியமானது.

இப்போது காணிக்கை திருடு வெளிவந்த பிறகு ஆர்.எஸ்.எஸ் அதன் கீழ் இயங்கும் அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இதுவரை எட்டு பேரை கைது செய்து இருக்கிறது.

20260603085636826.jpeg

அவர்களின் ஒருவர் ராம் சங்கர் யாதவ். இவர் ராம் ஜென்ம பூமி சேஷைத்திர அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராயின் டிரைவர் நெருங்கிய உதவியாளர்.

சம்பத்ராயை சிறப்பு புலனாய்வு குழு பல மணி நேரம் விசாரித்தது.

குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை. அவர் கைது செய்யப்படவில்லை இதுவும் தற்சமயம் சர்ச்சையாகி இருக்கிறது.

விஷ்வ ஹிந்து பரீட்சத்தின் சர்வதேச தலைவர் அலோக்குமார் எங்கள் தரப்பில் இருந்து யாரையும் விசாரணை செய்யக்கூடாது என்று எந்த அழுத்தமும் தரவில்லை முக்கிய நிர்வாகிகளிடம் கூட விசாரணை செய்யட்டும் என்கிறார்.

மகாராஷ்டிரா சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எங்கள் குடும்பத்தில் தனிப்பட்ட முறையில் 8 கோடி ரூபாய் நன்கொடை தந்தோம்.

இது தவிர சிவசேனா கணிசமான நன்கொடைகளை வசூலிக்கு இந்த அறக்கட்டளைக்கு தந்தது.

இப்போது மிகப்பெரிய முறைகேடு பல கோடி என்கிறார்கள். இது சம்பந்தமான உண்மை வெளிவர வேண்டும்" என்கிறார்.

அகிலேஷ் யாதவ் "அயோத்தி ராமர் கோயிலுக்கு அதிக முறை போனவர் யோகி ஆதித்யநாத். அவருக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்பது சந்தேகமாக இருக்கிறது.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறக்கட்டையில் உறுப்பினர் அல்ல

அயோத்தி மாவட்ட மேஜிஸ்ட்ரேட் இதில் உறுப்பினராக இருக்கிறார்.

உத்தரப்பிரதேச அரசு பிரதிநிதியாக சஞ்சய் பிரசாத் ஒரு அறங்காவலராக இருக்கிறார்.

இந்த இருவரும் முதல்வருக்கு இந்த முறைகேடுகள் பற்றி ஏன் சொல்லவில்லை? "என்று கேள்வி கேட்கிறார் அகிலேஷ் யாதவ் .

இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் விரும்பினார்

அவரை சேர விடாமல் சம்பத்ராய் தடுத்துவிட்டார் என்கிறார்கள். இந்த காணிக்கை திருட்டு விவகாரத்தில் ஆர் எஸ் எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் இரண்டுக்குமே இப்போது சங்கடம்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் உத்தரபிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத்.

இந்த விஷயத்தில் சில வங்கி அதிகாரிகள் சில முக்கிய ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தேகப்பட்டியலில் சிறப்பு புலனாய்வு குழு கொண்டு வந்து ரகசியமாக விசாரிக்கிறது.

வருகின்றபாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி பேச இருக்கிறார்கள்.

ஜெய் ஸ்ரீ ராம் அரசியல் சிக்கலில் இருக்கிறது.