
ஜூலை 3, 2026 இரவு 10.45 மணி.
மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.

மாண்ட்வி மற்றும் மலபார் ஹில் போன்ற பகுதிகள் 145 மி.மீட்டரைக் கடந்து 24 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
ஜூலை 1 காலை முதல் 2ஆம் தேதி காலை வரை பெய்த மழை...

எப்போதும் போல ஆங்காங்கே பெய்யும் கன மழையால் நீர் தேக்கம் வெளிப்பட்டாலும் மழை நின்ற அடுத்த 2/3 மணி நேரங்களில் வடிந்து விடுகின்றன.
லேட்டாவந்தாலும் மழை பொய்க்கவில்லை தான்.
பக்கத்து வீட்டு திருமதி சர்தேசாய், “ எல்லாம் அந்த மஹாலக்ஷ்மி அருள் தான். இது வரை பொய்த்தது இல்லை. அப்பப்ப லேட்டாயிடும் இந்த தடவை மாதிரி. முன்னெல்லாம், மே கடைசி வாரமே ஆரம்பிச்சிடும்.

போன முப்பது வருஷமா ஜூன் முதல் வாரம் என்று ஆனது. இந்த தடவை என்னமோ, கேரளத்திலே ஜூன் மாத முதல் வார இறுதியிலே ஆரம்பித்துவிட்டாலும், அடுத்த இரண்டு தினங்களில் மும்பையில் செட் ஆக வேண்டிய மழை மூன்றாவது வாரத்தில் எட்டிப் பார்த்தது.

கொஞ்சம் பயந்து தான் போய் விட்டோம். என்கிறார் ஜன்னல் வழியாக பெய்யும் அடைமழையைப் பார்த்தபடியே.
ஆமாம், 1975 க்குப்பிறகு இந்த வருடம் தான் மழை தாமதமானது.
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏழு ஏரிகளின் (அப்பர் வைதர்ணா, மோடக் சாகர், டான்சா, மிடில் வைதர்ணா, பாட்சா, விஹார் மற்றும் துளசி) மொத்த கொள்ளளவில் 8% முதல் 9% வரை ஒருங்கிணைந்த நீர்மட்டம் உள்ளது. இந்த நீர்த்தேக்கங்கள் குறைவாக இருந்ததால், பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தற்போது 10% குடிநீரைக் குறைக்கிறது.

ஏரி இருப்புக்களை ஆழமாகப் பார்த்தால்: மொத்த கொள்ளளவு: ஏழு ஏரிகள் நிரம்பும்போது தோராயமாக 1,447,363 மில்லியன் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கின்றன.

தற்போதைய இருப்பு: சமீபத்திய கனமழைகள் இருப்புக்களை அதிகரிக்க உதவியுள்ளன, ஆனால் அதன் அளவு இன்னும் மீண்டு வருகிறது.

Leave a comment
Upload