
ஜூலை 3, 2026
மெட்ராஸ் லலிதாங்கி வசந்த குமாரி என்கிற எம்.எல்.வியின் 99 ஆவது பிறந்த தினம்.
எம்.எல்.வி அவர்கள் சென்னையில் உள்ள ஆங்கில பள்ளியில் படித்து மருத்துவராக எண்ணினார்.
ஆனால், விதி வேறு விதமாக ஆக, பிரபல பாடகர்.ஜி.என்.பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறையில் ஈடுபட்டு சாதனைகள் பல செய்தார்.
சங்கீத மும்மூர்த்திகள் போலே கர்னாடக இசைப் பாடகிகளின் மும்மூர்த்திகளான எம் எஸ், டீகேபட்டம்மாள் போன்றோருடன் இவரும் ஒருவர்.


சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில், தனது 49 ஆவது வயதில், 1977ல் பெற்றவர்.
திரை இசையில் முதல் நட்சத்திர பாடகி.
மணமகள் படப்பாடல்களான எல்லாம் இன்ப மயம், பாரதியாரின் சின்னஞ்சிறுகிளியே குறிப்பிட தக்கவை.
நான் 1967 – 68 களில் மயிலை வைத்தியர் அண்ணாமலைத்தெருவில் வாசம். என் தந்தை தமிழக அரசு ஊழியர். என் தந்தைக்கு இலக்கியம் & இசை மேல் ஆர்வம் அதிகம். பிரபல எழுத்தாளரான சாவி, மணியன் போன்றோரை எனக்கு அறிமுகப்படுத்தியவர்.
மயிலாப்பூர் ஸ்ரீவெங்கடேச அக்ரஹாரத்தில் உள்ள கார்ப்பரேஷன் திருமண மண்டபததில் நடைபெறும் கச்சேரி, ஆர்.ஆர். சபா, போன்றவைகளுக்கு அழைத்து செல்வார். அந்த சமயத்தில் எம்எல்வி கச்சேரி கேட்டதுண்டு .
அந்த சமயம் நான் 8ஆம் வகுப்பு மாணவன். சிலசமயங்களில் நான் படித்த பி.எஸ். பள்ளியில் நடக்கும் கச்சேரிக்கும் செல்வேன். ஒரே ஒரு முறை எம்எல்வி அவர்களிடம் பேசினேன். எங்களுடைய பள்ளியில் விகடகவி கிருஷ்ணமூர்த்தி என்பவரின் விகடம் நடந்தது. இவர் தான் எம்எல்வி அவரின் கணவர்.


நடிகைஸ்ரீவித்யா இவரின் மகள்.

1975க்கு பிறகு பட்டபடிப்பு முடித்த பின் வேலைதேடி சென்னை விஜயம். தி.நகரில் உள்ள சபாக்களில் வாலண்டியர் வேலை, அதன் மூலமாக நாடகம், நாட்டியம், கச்சேரி பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது.
எம்.எல்.வி அவர்களுடைய கச்சேரி கிருஷ்ண கான சபாவில் நடந்த போது நான் ஆரம்பம் முதல் முடியும் வரை இருந்தேன். சங்கீத ஞானமில்லை, ஆனால் ரசிக்கும் ஞானம் இருந்தது. எம்.எல்.வி அவர்களிடம் ஆட்டோ கிராப் வாங்கினேன், ஆனால் அது இப்போது இல்லை.
ஜூலை 3, 1928ல் பிறந்த எம் எல் விக்கு அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழா துவக்கம்.

சுதா ரகுநாதன் இவரின் சிஷ்யர்களில் ஒருவர்.

Leave a comment
Upload