தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260603084157997.jpeg

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று 'திடீர் 'விலகல் !!

இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வரும் என்று ஸ்டாலின் சொல்வது நிஜம் தானோ ?

ஆளுநருடன் அமைச்சர் விஸ்வநாதன் ஆலோசனை !!

ரொம்ப சீக்கிரம் ஆளுநர் தமிழக வெற்றிக்கழக உறுப்பினரானாலும் ஆச்சரியம் இல்லை !!

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றார் !!

அதான் விஜய் வாழ்த்து சொல்லிட்டாரே !!

உள்ளாட்சித் தேர்தல் அதிமுக வெற்றி பெறும் செல்லூர் ராஜு பேட்டி.

அதுவரைக்கும் கட்சி இருக்குமா !!

எடப்பாடிக்கு எதிராக எஸ்பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி !!

இப்படியே தான் பண்ணிக்கிட்டு இருக்கணும் !!

கடந்த ஆட்சி முறைகேடுகள் விரைவில் வெளியே வரும் அமைச்சர் மரியம் வில்சன் பேட்டி !!

இந்த வேலைய பாத்துட்டு இருந்தா , உங்க தேர்தல் வாக்குறுதி எல்லாம் எப்ப கவனிப்பீர்கள் ?

விஜய் தலைமையில் புதிய கூட்டணி உதயம் !!

அதுதான், எப்பவோ உதயமாகி உதயசூரியனை காலி பண்ணிடுச்சே !!

'இனி அடிச்சு விளையாடுவோம்' மாணிக்கம் தாகூர்.

கோஷ்டியே இருக்காதுன்னு சொன்னீங்க !! அப்புறம் எப்படி அடிச்சு விளையாடுவிங்க !!

அமைச்சர் சரத்குமார் மீதான போதை புகார் உளவுத்துறை வாயிலாக ரகசிய விசாரணை.

அதான் வீடியோவே வந்துவிட்டது அப்புறம் என்ன ரகசிய விசாரணை ?

காலையில் அனுப்பப்படும் கோப்புகளுக்கு மாலைக்குள் முதல்வர் விஜய் கையெழுத்து அதிகாரிகள் வியப்பு

இப்பதானே வேலைக்கு சேர்ந்து இருக்காரு புதுசு கொஞ்சம் சுறுசுறுப்பா தான் இருப்பாரு !!

சட்டசபையில் முதல்வர் டான்ஸ் மட்டும் ஆடவில்லை அடுத்த கூட்டத்தொடரில் அதை எதிர்பார்க்கிறேம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.

இது ஏதோ நேயர் விருப்பம் மாதிரி இருக்கு !!

மண் குவாரிகளில் மீண்டும் வசூல் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது புகார்

ஆரம்பிச்சிட்டாங்களா !!

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு ?

அதிகாரிகளைப் பொருத்தவரை திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது என்று நம்புகிறார்கள் போல தெரியுது ?

பாஜகவை தனிமைப்படுத்துவது தான் எங்கள் அரசியல் நிலை இடது கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்.

இப்படி சொல்லி நீங்க திமுகவை தானே தனிமைப்படுத்தி இருக்கீங்க !!