தொடர்கள்
கொடுரம்
கொதிக்கும் பிரான்ஸ்- கண்ணாழ்வார்

20260603192348968.jpeg

ஐரோப்பிய நாடுகள் அரண்டு தான் போய்விட்டது.

எப்போதும் 85° F இதமான குளிர்ந்த வெப்பநிலையில் ஹாயாக மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

சூப்பர் எல் –நினோ தாக்கம் உலகை மிரட்டி கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால் பிரான்ஸ் போன்ற சுற்றுலா நகரங்களில் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது.

கிட்டதட்ட 113°F வெப்ப அலைகள் மக்கள் தாங்க முடியாமல் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இதுவரை 2000 பேர் இறந்துவிட்டனர்.

இரவிலும் கூட வெப்பம் குறையவில்லை .

நீர் நிலைகளை நாடி மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

20260603192440263.jpeg

ஐரோப்பா நாடுகள் மற்ற கண்டங்களை விட 2 மடங்கு வெப்பமயமாகி வருகிறது.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வெப்ப அலையில் ஐரோப்பா மக்கள் இரண்டு மடங்கு இறந்து விட்டனர் .

இன்னும் வெப்பம் சுட்டெரிக்கும் என்பதால் பள்ளி , கல்லூரிகள் அங்கே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

20260603193424678.jpeg

காதலர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் ஈபிள் டவர் கொதிக்கும் வெயிலால் வெறிசோடி போய்விட்டது.

மரம் வளர்ப்போம் என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்க தொடங்கி உள்ளது.