தொடர்கள்
விகடகவியார்
ஆக்ரி ராஸ்தா பாக்யராஜ் -- லைட் பாய்

20260603200404337.jpeg

இயக்குனர் நடிகர் பாக்யராஜ் நேரடியாக இயக்கிய முதல் இந்தி படம் 1986-இல் வெளியான ' ஆக்ரி ராஸ்தா.

அமிதாப் பச்சன், ஜெயப்பிரதா ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர்.

ஒரு கைதியின் டயரி இந்தி மொழிமாற்ற படம் தான் இது.

தந்தை -மகன் என அமிதாப்புக்கு இரட்டை வேடம்.

அமிதாப் பச்சன் அந்த காலத்தில் கோபக்கார இளைஞன் வேடத்தில் நிறைய படங்கள் நடித்து இருந்த சமயம் அது.

கோபக்கார மகன் கோபக்கார முதியவர் என்று இரட்டை வேடம்.

இயக்குனர் பாக்யராஜுக்கு ஹிந்தி தெரியாது. கிட்டத்தட்ட ஆங்கிலமும் அப்படித்தான்.

ஆக்ரி ராஸ்தா பட அனுபவம் பற்றி பாக்யராஜ் குறிப்பிடும் போது "எனக்கு இந்தி தெரியாது,

அமிதாப்புக்கு தமிழ் தெரியாது எங்கள் இருவருக்கும் பொதுவான மொழி ஆங்கிலம் மட்டுமே.

நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் பேசுவேன் கொஞ்சம் சைகை காட்டுவேன் இப்படித்தான் ஆக்ரி ராஸ்தா கதையை அமிதாப்புக்கு சொல்லி அவரை நடிக்க வைத்தேன் " என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருப்பார் இயக்குனர் பாக்யராஜ்.

ஆக்ரி ராஸ்தா திரைப்படத்துக்கு முன்பே இந்தி திரை உலகில் பாக்யராஜ் பெயர் பிரபலம். 1981-இல் வெளியான மௌன கீதங்கள் 'ஏக்ஹிஃபுல்' என்ற பெயரில் ஜிதேந்திரா நடித்து ஹிட்டானது.

அதே ஆண்டு அந்த 7 நாட்கள் திரைப்படமும் 'வோ சாத் தீன்' என்ற பெயரில் அனில் கபூர் நடிக்க அந்தப் படமும் வெற்றி.

இந்த வெற்றிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி 1983-ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு ' மாஸ்டர் ஜி ' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது அது மெகா ஹிட் ஆனது.

1985-இல் பாரதிராஜா இயக்கத்தில் கமல், ராதா, ரேவதி நடிப்பில் வெளியான ' ஒரு கைதியின் டைரி ' திரைப்படத்திற்கு கதை 'திரைக்கதை வசனம் எழுதி இருந்தார் பாக்யராஜ்.

இந்தத் திரைப்படம் தான் இந்தியில் ' ஆக்ரி ராஸ்தா என்று ரீமேக் செய்யப்பட்டது.

கதையை ஒரு மாதிரி கேட்டு நடிக்க சம்மதித்தாலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அமிதாப்பச்சனுக்கு இல்லை.

காரணம் இந்தியில் பாக்யராஜுன் குடும்ப படங்கள் தான் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

அமிதாப் மிகப்பெரிய ஒரு ஹீரோ என்றாலும் பாக்யராஜால் ஆக்சன் திரைப்படம் வெற்றிகரமாக எடுக்க முடியும் என்று நம்பிக்கை அவருக்கு வரவில்லை.

இந்தப் படத்தில் உதவி இயக்குனர் பார்த்திபன். இருவரும் சேர்ந்து படப்பிடிப்புகளில் காட்சிகளை சொல்லி எப்படியோ புரிய வைத்து திரைப்படத்தை எடுத்துவிட்டார்கள்

படத்தில் விஜய் என்ற பெயர் அமிதாப்பச்சனுக்கு மிகப்பெரிய புகழை தேடித் தந்தது.

இதனால் அதன் பிறகு அவர் நடித்த பல படங்களில் அவருக்கு பெயர் விஜய் தான்.

ஆக்ரி ராஸ்தா படப்பிடிப்பின் போது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்கு அமிதாப்புக்கும் பாக்யராஜுக்கும் இடையே மிகப் பெரிய விவாதம் நடந்தது.

கதைப்படி தந்தை என தெரியாமல் தந்தையுடன் மகன் அமிதாப் ஆங்கிலத்தில் வாக்குவாதம் செய்ய வேண்டும்.

தந்தை அமிதாப் படிப்பறிவு இல்லாதவர் இருந்தாலும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான மனைவி மேரி அவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்திருப்பார்.

அப்போது உனக்கு பிறக்கும் மகனை விட நான் நன்றாக ஆங்கிலம் பேசுவேன் பார் என்று தந்தை அமிதாப் சவால் விட்டிருப்பார். தனது மனைவியின் கல்லறையில் அஞ்சலி செலுத்த அப்பா அமிதாப் வரும் போது தான் அங்கு ஒரு குற்றவாளியை பிடிக்க வரும் மகனுக்கும் தந்தைக்கும் தான் ஆங்கிலத்தில் வாதம் செய்வார்கள்.

ஆரம்பத்தில் தனது ரசிகர்கள் இந்தியில் பேசினால் தான் ரசிப்பார்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆங்கிலத்தில் பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமிதாப் முதலில் மறுத்து விட்டார்.

பாக்யராஜ் அவரிடம் பிடிவாதம் பிடித்து ஆங்கிலத்தில் பேச வைத்தார்.

அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அப்போதுதான் அந்த ஆங்கில வசனம் விஷயத்தை குறிப்பிட்டு பாக்யராஜ் உணர்வுகளுக்கு மொழி முக்கியமல்ல உணர்வுகள் தான் முக்கியம் என்பதால் தான் உங்களை நான் வற்புறுத்தினேன் என்று சொன்னார்.

அந்த குறிப்பிட்ட ஆங்கிலக் காட்சியையும் ரசிகர்கள் பெரிய அளவு ரசித்து வரவேற்பு பெற்றது. அமிதாப் மனைவி ஜெயா பச்சன் நீங்கள் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றது. அதற்கு நீங்கள் முக்கிய காரணம், ஆனால் ஆக்ரி ராஸ்தா மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு பாக்யராஜ் தான் காரணம் நீங்கள் இல்லை என்று சொன்னார் என்று ஒரு மேடையில் சொன்ன அமிதாப் எனது டாப் 10 படங்களில் பாக்யராஜ் கைவண்ணத்தில் வெளியான ஆக்ரி ராஸ்த்தாவும் இருக்கும் என்று பெருமையாக குறிப்பிட்டு இருக்கிறார்.